search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palkudam"

    • 41-வது ஆண்டு பால்குடம் ஊர்வலம் இன்று நடந்தது.
    • விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சேப்பநாய க்கன்வாரி பகுதியில் கோட்டை முனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் பால்குட ஊர்வலம் நடைபெறும்.

    அதன்படி 41-வது ஆண்டு பால்குடம் ஊர்வலம் இன்று விழா குழு பொறுப்பாளர்கள் தாமஸ், பூமிநாதன் ,சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    • 2-வதுநாள் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது.
    • வருகிற 16-ந்தேதி காலை கோட்டை சிவன் கோவிலுக்கு நாடியம்பாள் உற்சவ சிலை கொண்டு செல்லப்படும்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி பதுமை பூ போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை மாவிளக்கு திருவிழாவும், காவடி, பால்குடம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    மாலை 4.40 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் தேரடி தெருவிலிருந்து வடசேரி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, தலைமை தபால் நிலையம் வழியாக பெரிய தெருவில் வந்து நின்றது.

    அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    தேருக்கு பின்னால் தீயணைப்பு வண்டியும், தீயணைப்பு வீரர்களும் வந்தனர்.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றன.

    இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) 2-வதுநாள் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    பெரிய தெருவிலிருந்து மணிக்கூண்டு, தலையாரித்தெரு வழியாக தேர் தேரடித்தெரு தேரடியை வந்தடையும்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

    தேர் திருவிழா முடித்து தேரில் இருந்து அம்பாள் இறக்கி கோவிலுக்கு வந்து காப்பு அவிழ்ப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

    நாளை 15-ந்தேதி இரவு முத்து பல்லக்கில் அம்மன் புறப்பட்டு, 16-ந்தேதி காலை கோட்டை சிவன் கோவிலுக்கு நாடியம்பாள் உற்சவ சிலை கொண்டு செல்லப்படும்.

    இத்துடன் விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள், கோவில்நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • ஆறுமுகநேரி பூவரசூர் ஆதிபிராமணி பொடிப்பிள்ளை அம்மன், இலங்கத்தம்மன் கோவில் கொடை விழா 6 நாட்கள் நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பூவரசூர் ஆதிபிராமணி பொடிப்பிள்ளை அம்மன், இலங்கத்தம்மன் கோவில் கொடை விழா 6 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் காலையில் ஸ்ரீ மகா கணபதி ஹோமமும் இரவில் திருவிளக்கு பூஜையும் நடந்தன. தினசரி இரவு வில்லிசை நடந்தது. 3-வது நாளன்று சுவாமி குடியழைப்பு பூஜை நடைபெற்றது.4-வது நாளன்று சுவாமிகள் மஞ்சள் நீராடி கடலுக்கு சென்று கும்பம் எடுத்து வருதல் நடந்தது. 5- வது திருநாளன்று காலையில் ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து மெயின் பஜார் வழியாக பவனி வந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சக்திவேல், சித்திரை பாண்டி, சக்தி, சேகர் ஆகியோர் செய்திருந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. பின்னர் மாலையில் சுவாமிகள் மஞ்சள் நீராடி ஆற்றுக்கு சென்று கும்ப வீதி உலா நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு பெட்டி, ஆயிரங்கண்பானை மற்றும் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவு நாளன்று இரவு சுவாமிகள் மஞ்சள் நீராடி கும்ப வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    நிகழ்ச்சிகளில் மாரிமுத்து, செல்வம், சாமி கண்ணு, பார்த்திபன், மணி, செல்வமுருகன், சோமு, வெங்கடேசன், கண்ணன், ராகவன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவசக்திவேல் உள்பட பலர் செய்திருந்தனர்.

    • சோழர்களின் தலைநகராக இருந்தது. அக்காலக்கட்டத்தில் முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட கோவில்தான் வல்லம் ஏகவுரியம்மன் கோவில்.
    • தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் ஏகவுரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை–யொட்டி நாளை 12-ந்தேதி பால்குடம், காவடி தீமிதி உற்சவம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர் என்ற நகரம் தோன்றுவதற்கு முன்பு வல்லம் சோழர்களின் தலைநகராக இருந்தது. அக்காலக்கட்டத்தில் முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட கோவில்தான் வல்லம் ஏகவுரியம்மன் கோவில்.

    சோழர்களின் வழிபடு தெய்வமாகவும், குல தெய்வமாகவும் அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய வல்லத்து காளியாகவும் விளங்கியவள்தான் இந்த ஏகவரியம்மன். தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    திருமணத் தடை உள்ள பெண்கள், இங்கே வந்து அம்மனுக்கு புடவை சாத்தி அம்மனின் திருப்பாதத்தில் குண்டு மஞ்சளை (குளியல் மஞ்சள்) வைத்து வணங்குகின்றனர். அதில் இருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து வந்து, தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, ஐதீகம்.

    இதனால் கன்னிப் பெண்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து இங்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கே எலுமிச்சைப் பழத்தை அம்மனின் திருப்பாதத்தில் வைத்து பூஜை செய்து, அதன் சாறை கோவிலிலேயே சாப்பிட்டுச் செல்ல, விரைவில் குழந்தைப் பிறப்பது உறுதி என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. அதுபோல பலனடைந்த பெண்கள் தங்களது குழந்தைக்கு இக்கோயிலில் மொட்டை அடித்து, மாவிளக்கு மாவு படைத்து நேர்த்திக் கடனைச் செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.

    தீராத நோய் அல்லது திடீர் விபத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகி விட்ட கணவருக்காக வேண்டிக் கொண்டு வரும் பெண்கள் அதிகம். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பெண்கள், தங்களது கணவரை எமனிட–மிருந்து காக்க வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் நேர்த்திக் கடனாக எருமைக் கன்றை காணிக்கைச் செலுத்தி வழிபடுகின்றனர்.

    மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாள்களில் அம்மனுக்குச் சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது இந்தக் கோயிலின் இன்னுமொரு சிறப்பம்சம்.

    இங்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபட, சகல சங்கடங்களும் தீர்ந்து மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர். கருவறையில் ஏகவரி அம்மனைச் சுற்றியபடி இரு நாகங்கள் இருப்பதைக் காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து அம்மனைத் தரிசித்தால் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தஞ்சாவூரிலிருந்து திருச்சி சாலையில் 12 கி.மீ. தொலைவிலுள்ள வல்லம் என்ற பேரூரிலிருந்து, வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிச் சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை 12-ந்தேதி கடைசி ஆடி வெள்ளிக்கிழமை திருவிழாவையொட்டி காவடி, பால்குடம், தீமியுடன் விமர்சையாக நடைபெற உள்ளது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நல்லாடை மெயின் ரோட்டில் உள்ள செல்லப்பா கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து கொண்டு கடைத்தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
    • மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்த பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் கண்டியன் குளத்தூர் மாரியம்மனுக்கு 21 ஆம் ஆண்டு பால்குட திருவிழா சமையல் கலைஞர்கள் தலைமையில் நடைபெற்றது. நல்லாடை மெயின் ரோட்டில் உள்ள செல்லப்பா கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து கொண்டு கடைத்தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    பச்சைக்காளி பவளக்காளி நாதஸ்வர இன்னிசை மற்றும் பம்பை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். கஞ்சி வார்த்தல் அன்னதானமும் செம்பனார்கோயில் சமையல் கலைஞர்கள் வழங்கினர்.

    • பரிவார தெய்வங்களுக்கு விசேஷ அலங்காரத்துடன் பூஜை நடைபெற்றது.
    • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் செட்டியார் நடுத்தெரு அங்காள ஈஸ்வரி அம்மன் திருக்கோவில் கொடை விழா 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் மகா கணபதி ஹோமம், குடி அழைப்பு, அபிஷேகம், தீபாரணை, புஷ்பாஞ்சலி, சாஸ்தா பிறப்பு தீபாதாரணை நடைபெற்றது.

    2-ம் நாளான இன்று சாத்தான்குளம் அழகம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக செண்டை மேளம் முழங்க கோவிலுக்கு வந்தனர். பின்னர் அபிஷேகம், அலங்கார பூஜை, மதியக்கொடை மற்றும் பொன் இருளப்பசாமி பேச்சியம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விசேஷ அலங்காரத்துடன் பூஜை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மூன்றாம் நாள் திருவிழா நாளை நடக்கிறது. 

    ×