search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் தேரோட்டம்
    X

    தேரோட்டம் நடந்தது.

    பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் தேரோட்டம்

    • 2-வதுநாள் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது.
    • வருகிற 16-ந்தேதி காலை கோட்டை சிவன் கோவிலுக்கு நாடியம்பாள் உற்சவ சிலை கொண்டு செல்லப்படும்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி பதுமை பூ போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை மாவிளக்கு திருவிழாவும், காவடி, பால்குடம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    மாலை 4.40 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் தேரடி தெருவிலிருந்து வடசேரி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, தலைமை தபால் நிலையம் வழியாக பெரிய தெருவில் வந்து நின்றது.

    அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    தேருக்கு பின்னால் தீயணைப்பு வண்டியும், தீயணைப்பு வீரர்களும் வந்தனர்.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றன.

    இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) 2-வதுநாள் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    பெரிய தெருவிலிருந்து மணிக்கூண்டு, தலையாரித்தெரு வழியாக தேர் தேரடித்தெரு தேரடியை வந்தடையும்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

    தேர் திருவிழா முடித்து தேரில் இருந்து அம்பாள் இறக்கி கோவிலுக்கு வந்து காப்பு அவிழ்ப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

    நாளை 15-ந்தேதி இரவு முத்து பல்லக்கில் அம்மன் புறப்பட்டு, 16-ந்தேதி காலை கோட்டை சிவன் கோவிலுக்கு நாடியம்பாள் உற்சவ சிலை கொண்டு செல்லப்படும்.

    இத்துடன் விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள், கோவில்நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×