search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ மிதி திருவிழா"

    • பக்தர்கள் மஞ்சள் உடை அணிந்து பூ கரகத்துடன் ஊர்வலம் சென்றனர்
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பச்சையம்மனை தரிசனம் செய்தனர்

    வந்தவாசி :

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில் ஆடி மாதம் முன்னிட்டு தீ மிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

    பக்தர்கள் மஞ்சள் உடை அணிந்து கொண்டு பூ கரகத்துடன் ஊர்வலமாக சென்று தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். இதைத்தொடர்ந்து ஸ்ரீ பச்சையம்மனுக்கு மங்கல மேல வாத்தியங்கள் முழங்க மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த தீமிதி திருவிழாவை காண வெடால் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பச்சையம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    • கஞ்சமலை சித்தர் கோவில் சிறப்பு திருவிழா நடந்து வருகிறது.
    • இதை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி விநாயகர் ஊர்வலம் நடந்தது.

    காகாபாளையம்:

    இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர் கோவில் சிறப்பு திருவிழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி விநாயகர் ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் பொங்கல் வைப வம், ராகிகளி படையல் மற்றும் உருளுதண்டம் நடந்தது.

    நேற்று மதியம் காளியம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.மாலையில் தீ மிதித்தல் நடந்தது. பக்தர்கள் அதில் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து அன்னதானம், நீர் மோர் வழங்குதல் நடந்தது. பின்னர் நல்லணம்பட்டியை சேர்ந்த ஒருவருக்கு சித்தர்போல் அலங்காரம் செய்தனர். பின் அவரை ஒருவர் மாட்டுகயிறால் மூன்று முறை அடித்தார்.

    பின் அவரிடம் குருக்கள் எப்போது மழை வரும் என்று கேட்டதற்கு இன்னும் 3 நாட்களில் மழை வரும் என கூறினார். ஆண்டு தோறும் இவ்வாறு அருள்வாக்கு கேட்பதும், அவர் கூறியது போல் சுற்று வட்டாரத்தில் மழை பெய்வது வழக்கமான ஒன்றாகும்.

    • திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓம் காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திரு விழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.
    • குண்டம் இறங்கி தீமிதிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓம் காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திரு விழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. குண்டம் இறங்க பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தினசரி அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வந்தனர்.

    மேலும் அலகு குத்தியும் அக்னிசட்டி ஏந்தியும் வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலையில் தொடங்கியது. குண்டம் இறங்கி தீமிதிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    60 அடி நீளமுள்ள குண்டத்தில் தகதகவன கொளுந்து விட்ட தீக்குள் கோவில் பூசாரி முதலில் தீமிதிக்க தொடர்ந்து பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக குண்டம் இறங்கினார்கள். முன்னதாக ஓம் காளிபூசாரி குண்டம் இறங்கிய போது பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி பரவ சத்தில் கோஷமிட்டனர்.

    பெண்கள் தங்கள் குழந்தைகளை கைகளில் தூக்கியபடி குண்டத்தில் இறங்கி நடந்தனர் இந்த குண்டம் இறங்கும் நிகழ்வில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து அம்மனுக்கு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
    • ஒவ்வொரு நாளும் மகாபாரதம் படிக்கும் நிகழ்ச்சி மற்றும் விநாயகர் வனம், அட்சய பாத்திரம், அர்ச்சுனன் தவசு, பூவெடுப்பு, குறவஞ்சி நாடகம், திணை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தீமிதி திருவிழா நடத்துவது என கிராமமக்கள் முடிவு செய்தனர்.

    இதையொட்டி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மகாபாரதம் படிக்கும் நிகழ்ச்சி மற்றும் விநாயகர் வனம், அட்சய பாத்திரம், அர்ச்சுனன் தவசு, பூவெடுப்பு, குறவஞ்சி நாடகம், திணை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான அரவான் களப்பலி, மாடு திருப்புதல் மற்றும் தீமிதி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    ×