search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dies"

    • இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காததால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எமிஸ் டெஸ்ட் நடத்த இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
    • நடராஜபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி அன்னாள் ஜெயமேரி (வயது 52).

    டால்மியாபுரம், 

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி அன்னாள் ஜெயமேரி (வயது 52).

    இவர் புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 22 ஆண்டுகளாக பணிபு ரிந்து வந்தார்.

    இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் எமிஸ் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

    இப்பகுதியில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காததால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எமிஸ் டெஸ்ட் நடத்த இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    இந்நிலையில், அன்னாள் ஜெயமேரி நேற்று மாணவர்களுக்கு எமிஸ் ஆன்லைன் தேர்வு நடத்தியுள்ளார். அப்போது நாட் அசஸ்மென்ட் என்று தகவல் கிடைத்ததால் அருகில் உள்ள ஆசிரியரிடம் இது குறித்து கேட்டு க்கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்த அவருக்கு சக ஆசிரியர்கள் முதலுதவி சிகிச்சை செய்து புள்ளம்பாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ெஜயமேரி இறந்துவிட்டதாக கூறினர்.

    இச்சம்பவம் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுபோன்று புள்ளம்பாடி ஒன்றியத்தில் பல்வேறு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காத காரணத்தால் இந்த எமிஸ் ஆன்லைன் டெஸ்ட் நடத்த முடியாமல் பல்வேறு ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் .

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த எமிஸ் ஆன்லைன் டெஸ்ட் க்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

    • குளித்தலையில் காவிரி ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்
    • குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலை அருகே உள்ள மேலதாளியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜோதி. இந்த தம்பதியின் மகன் தீபக் (வயது 14). இவன், வேங்காம்பட்டியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    ஜோதியின் உறவினரின் மகன் கடந்த ஆண்டு இறந்துள்ளார். அவருக்கு சாங்கியம் செய்வதற்காக உறவினர்கள் அனைவரும் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு நேற்று வந்துள்ளனர். அனைவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தீபக்கும் ஆற்றில் இறங்கி குளித்தபோது, திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான்.

    இதைக்கண்ட அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள், ஆற்றில் மூழ்கிய தீபக்கை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீபக்கை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தீபக்கின் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜோதி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    திருபுவனை சின்னபேட் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(வயது45). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

    மது பழக்கத்துக்கு ஆளான நாகராஜன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். இதனை அவரது மனைவி முத்துலட்சுமி கண்டித்த போது அவரிடம் நாகராஜன் தகராறு செய்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த நாகராஜன் நேற்று அப்பகுதியில் உள்ள சாராயக்கடை எதிரே மயங்கி அதே இடத்தில் இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிகிச்சை பெற்று வந்த வசந்தா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பிப்டிக் தெருவை சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி வசந்தா (வயது62). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    இதற்கிடையே டேவிட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வசந்தாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் வசந்தா அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து தனிமையில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வசந்தா தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எந்திரத்தின் பெல்டில் வசந்தாவின் சேலை சிக்கி கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட வசந்தா பலத்த காயமடைந்தார்.

    உடனே அங்கிருந்த மற்ற ஊழியர்கள் வசந்தாவை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வசந்தா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகள் ஷகிலா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புன்னம் சத்திரம் அருகே மேஸ்திரி திடீரென மரணமடைந்துள்ளார்
    • வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே குட்டக்கடை வசந்தம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (45). கட்டிட மேஸ்திரி. ரமேஷ்க்கு கடந்த 10 வருடங்களாக குடிப்பழக்கம் இருந்து வந்தததாக கூறப்படுகிறது. இதனால் ரமேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னிமலைக்கு சென்று சித்த வைத்தியம் பார்த்து வந்தார். இந்நிலையில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். காலை அவரது மனைவி சுமதி எழுந்து ரமேஷை எழுப்பிய போது ரமேஷ் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுஅவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரமேஷின் மனைவி சுமதி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கரூர் மாவட்டம் புகளூர் வாய்க்காலில் விழுந்து தொழிலாளி சாவு
    • படகு மூலமாக தேடி தீயணைப்பு படையினரால் உடல் மீட்கப்பட்டது

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(65). கூலித் தொழிலாளி. இவர் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் அருகே உள்ள புகளூர் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி விட்டார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் நிலையை அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். படகு மூலமாக தேடும் பணி நடைபெற்ற போது முனிநாதபுரம் அருகே தண்ணீரில் வாய்க்காலில் ஓரத்தில் மிதந்து கொண்டு இருந்த அர்ஜுனன் சடலத்தை கைப்பற்றினர்.

    • மரத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்
    • தேனீ கொட்டியதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த தூரபாளையம் திருவ ள்ளூவர் தெருவை சேர்ந்த வர் முத்துசாமி (வயது 34). இவருக்கு இன்னும் திரும ணம் ஆகவில்லை. கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவ த்தன்று முத்துசாமி அவரது உறவினர் மணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் ஆகிய 3 பேரும் ஆலுச்சாம்பாளையத்தில் உள்ள குமாரசாமி கவுண்டர் என்பவரது தோட்டத்தில் மரம் வெட்டுவதற்கு சென்ற னர். இந்நிலையில் முத்து சாமி மரத்தில் ஏறி மரம் வெட்டிக் கொண்டிருந்த போது அவரை தேனீ கொட்டி விட்டது.

    இதனால் முத்துசாமி மரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்த அவரை அங்கிரு ந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துசாமி சிகிச்சை பலனி ன்றி பரிதாபமாக இறந்தார். பின்னர் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரக்குவாகனம் மோதி தொழிலாளி பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி,

    அரச்சலூர் கஸ்தூரிபா கிராமம் தம்பிரான் வலசை சேர்ந்தவர் யோககணபதி. தேங்காய் மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று மாலை முத்தூரிலிருந்து ஈரோடு நோக்கி செல்லும் ரோட்டில் தனது பைக்கி்ல் சென்று கொண்டிருந்தார். அப்போது மொடக்கு றிச்சி அருகே பட்டறை வேலம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் அரிசிமில் அருகே இவர் சென்று கொண்டிருந்த போது எதிர்திசையில் வந்த சரக்கு வாகனம் ஒன்று யோக கணபதி மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் யோகக ணபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த மொடக்கு றிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று யோகக ணபதியின் உடலை கை ப்பற்றி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சரக்குவா கனத்தை ஓட்டி வந்த லக்கா புரம் கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் கோனவாய்க்கால் சுக்கான் தோட்டத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 63). இவர் ஓய்வு பெற்ற மாநகராட்சி பூங்கா பராமரிப்பாளர் ஆவார்.இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டில் உள்ள மோட்டா ரை ஆப் செய்து விட்டு மோட்டாரின் வால்வை திறந்து விட்டார். அப்போ து எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சேகர் கீேழ விழுந்தார். இதை அடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர். பின்னர் இதுகுறித்து அவரது மகன் ஜனார்த்தனன் ஈரோடு தெற்கு போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்
    • இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி,

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சின்னாரி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24). இவர் கல்லூரி பஸ் டிரைவராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு பிரசாந்த் கோபி செட்டி பாளையம் அடுத்த மேவாணி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் ஒரு வளைவில் திரும்பும் போது அந்த பகுதியில் இருந்த தடுப்பு சுவர் மீது எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பிரசாந்த் படுகாயம் அடை ந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தார்
    • மகளை விடுவதற்காக வந்த போது சம்பவம்

    திருச்சி

    தஞ்சாவூர் மாவட்டம் பூதநல்லூர் மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர்.

    இவரது மனைவி ப்ளோரா மேரி (வயது 40) இவரது மகள் அக்ஷயா( 21 ) இவர் திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணியா ற்றி வருகிறார். இந்த நிலை யில் ப்ளோரா மேரி மற்றும் குடும்பத்தினர் வேளாங்கண்ணி கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் மகளை திருச்சி யில் உள்ள மருத்துவமனை யில் விட்டு செல்வதற்காக ஃப்ளோரா மேரி வந்தார்.

    அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்ப ட்டது. உடனடியாக அந்த மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இன் னொரு தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மீண்டும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ப்ளோரா மேரி இறந்து விட்டதாக தெரிவி த்தனர். இது குறித்து அக்ஷயா கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மயங்கி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • மலையம்பாளையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    கரூர்

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ஊஞ்சபாளையம் காலனியை சேர்ந்தவர் கந்தன் (வயது 48). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மலையம்பாளையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கந்தன் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கந்தனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×