என் மலர்
உள்ளூர் செய்திகள்

புன்னம் சத்திரம் அருகே மேஸ்திரி சாவு
- புன்னம் சத்திரம் அருகே மேஸ்திரி திடீரென மரணமடைந்துள்ளார்
- வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே குட்டக்கடை வசந்தம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (45). கட்டிட மேஸ்திரி. ரமேஷ்க்கு கடந்த 10 வருடங்களாக குடிப்பழக்கம் இருந்து வந்தததாக கூறப்படுகிறது. இதனால் ரமேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னிமலைக்கு சென்று சித்த வைத்தியம் பார்த்து வந்தார். இந்நிலையில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். காலை அவரது மனைவி சுமதி எழுந்து ரமேஷை எழுப்பிய போது ரமேஷ் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுஅவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரமேஷின் மனைவி சுமதி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






