search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Died"

    • சத்திரோடு அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்த போது விபத்து.
    • புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    சரவணம்பட்டி,

    கோவை கணபதி மாம ரத்தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் மாநாகராட்சி மேற்கு மண்டல உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகன் சஞ்சித்விஷ்ணு(வயது18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சஞ்சித் விஷ்ணு நேற்று வெளியில் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கணபதி சத்திரோடு அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்த போது, எதிரே வந்த சரக்குலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சாலையில் பல த்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சஞ்சித் விஷ்ணுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதா பமாக இறந்து விட்டார்.

    இதுகுறித்து அவரது தந்தை நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    விபத்து நடந்த அந்தப்பகுதி போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதியாகும். இதனால் இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் அங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • சித்தார்த்க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினார்.
    • கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள ஏ.எஸ்.குளத்தை சேர்ந்தவர் முருகேஷ். இவரது மகன் சித்தார்த் (வயது 10). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை 4.30 மணியளவில் பள்ளி முடிந்ததும் சித்தார்த் அவரது நண்பர்களுடன் பள்ளியின் பின்புறம் உள்ள குளத்தில் குளிக்க சென்றார்.

    அங்கு அவர் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது சித்தார்த் ஆழமான பகுதிக்கு சென்றார். திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடம் கோவில்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தேடினர்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் குளத்தில் இருந்து மாணவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதனை தொடர்ந்து கோவில்பாளையம் போலீசார் சித்தார்த்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் மோதி படுகாயம்
    • சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை

    சூலூர்,

    சூலூர் கண்ணம்பாளையம், ரத்தினத்தான் தோட்டம் பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் சஞ்சீவ் (வயது 19). இவர்

    எல்.அன்.டி புறவழிச் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் சஞ்சீவ் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சின்னியம்பாளையம் நோக்கி சென்றார். அப்போது அந்த வழியாக 2 பேர் நடந்து சென்றனர். எனவே அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக, சஞ்சீவ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அப்போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைகுலைந்த சஞ்சீவ் கீழே விழுந்தார். அப்போது பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். எனவே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நீலாம்பூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சஞ்சீவ் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல்அறிந்த சூலூர் போலீசார், சஞ்சீவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    எல்.என்.டி புறவழிச்சா லையில் பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதி இல்லை என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராய ணன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இருந்தபோதிலும் அங்கு பொதுமக்களின் நட மாட்டம் குறையவில்லை.

    விபத்தில் பலியான சஞ்சீவ் தொட்டிபாளையம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது சகோதரியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று மாலையில் பணி முடிந்ததும் வீட்டுக்கு மீண்டும் அழைத்து செல்வது வழக்கம்.

    இதற்காக தான் சஞ்சீவ் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளார். அப்போது அவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான விவரம் தெரியவந்து உள்ளது.

    இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழைய காவேரி பாலம் பகுதியில் குளிப்பதற்காக சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி
    • ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி- மதுரை ரோடு குப்பான்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). இவரது மனைவி கௌசல்யா ( 23). இவர்கள் இருவரும் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே உள்ள பழைய காவேரி பாலம் பகுதியில் குளிப்பதற்காக சென்றனர். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது ரமேஷ் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கினார்.இதில் ரமேஷ் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கௌசல்யா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் அருகே சிமெண்டு கலவை லாரி மோதி கிராம நிர்வாக அலுவலர் பலியானார்
    • சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

     கரூர்,

    கரூர் மாவட்டம், புலியூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கமலக்கண்ணன் (வயது 28). இவர், திருச்சி மாவட்டம், இனாம்புதூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் இனாம்புதூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் அன்று மாலை பணி முடிந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார். திருச்சி-பாளையம் சாலையில் தண்ணீர் பந்தல்மேடு அருகே வந்தபோது, முன்னாள் திருச்சி மாவட்டம், பாளையம் கணபதி நகரை சேர்ந்த செல்வா (26) என்பவர் ஓட்டி சென்ற சிமெண்டு கலவை வாகனம் திடீரென பின் நோக்கி வந்து, கமலக்கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கமலக்கண்ணன் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கமலக்கண்ணனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கமலக்கண்ணனின் தந்தை செல்வராஜ் ெகாடுத்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நோய் காரணமாக முருகன் கடந்த ஒரு வருட மாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறர்கள்.

    புதுச்சேரி:

    வீராம்பட்டினம் யோக லட்சுமி நகரை சேர்ந்தவர் முருகன்(வயது54). இவர் தச்சு தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அலமேலு. இவர் மீன் வியா பாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மேலும் அவருக்கு அடிக்கடி வலிப்பு நோய்யும் ஏற்படும். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நோய் காரணமாக முருகன் கடந்த ஒரு வருட மாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் முருகன் வீட்டில் சாப்பிட்டு விட்டு கடற்கரைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். இந்த நிலையில் அங்குள்ள சவுக்கு தோப்பில் முருகன் இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்தது.

    உடனே குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு முருகன் வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து முருகனின் மனைவி அலமேலு கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறர்கள்.

    • மதுரையில் தனியார் நிறுவன அதிகாரி மயங்கி விழுந்து இறந்தார்.
    • நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை.

    மதுரை

    மதுரை பொன்மேனி முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் திருநாவுக்கரசு (வயது 30). மாற்றுத்திறனாளியான இவர் காளவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு நிதி நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

    அவர் பணியில் இருந்த போது பாத்ரூம் சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதை தொடர்ந்து சந்தேகமடைந்த ஊழியர்கள் பாத்ரூமின் கதவை உடைத்து பார்த்தனர். அங்கு திருநாவுக்கரசு ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தார். ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நிதநிறுவன துணை மேலாளர் திருநாவுக்கரசின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மிரட்டுநிலை கிராமத்தில் கதண்டு கடித்து தொழிலாளி பலியானார்
    • அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை,

    அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 55), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மிரட்டுநிலையில் உள்ள தென்னை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது அங்கு இருந்த கதண்டு இவரை கடித்துள்ளது. இதையடுத்து அவர் அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இந்தநிலையில் நேற்று அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆரோக்கியம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
    • பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 73).

    இவரது மனைவி ஜோதிலட்சுமி (60). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பழனிவேலுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த ஜோதிலட்சுமி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுக்கோட்டை அருகே கார் மோதி சாலையோரம் நின்றுகொண்டிருந்த தம்பதி பலியானார்கள்
    • ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது சோக சம்பவம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள இளையாவயல் கிரா மத்தை சேர்ந்தவர் அருணா சலம் (வயது 65). விவசாயி. இவருக்கு சொந்மான வயல் குளத்தூர் புறவழிச்சாலை யோரம் உள்ளது.இந்தநிலையில் வயலுக்கு வந்த அருணாச்சலம், அவ ரது மனைவி இளஞ்சியம் இருவரும் ஆடுகளை மேய்ச லுக்கு விட்டுவிட்டு சாலை யோரம் மரத்தின் நிழலில் நின்று பேசிக்கொ ண்டிருந்த னர்.அப்போது புதுக்கோ ட்டை யில் இருந்து வேகமாக திருச்சி நோக்கி வந்த கார் இவர்கள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அருணா ச்சலம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ள த்தில் பரிதாபமாக உயிரிழ ந்தார்.மனைவி இளஞ்சியம் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் போலீசார் படுகா யமடைந்த இளஞ்சியத்தை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்னர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளஞ்சியமும் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். இதில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது பரமக்குடியை ேசர்ந்த அடைக்கலம் என்பவர் என்பது தெரியவந்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண்டிமடம் அய்யூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்
    • உரிய நடவடிக்கை, நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் திடீர் போராட்டம்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த அய்யூர் கிராமம், ஐயனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 31). இவருக்கு தனபதி என்ற மனைவியும், ரிஷி தேவன்(7), ரித்திக் தேவன்(5) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.காந்திநகர் தெருவை சேர்ந்த கொடியரசு என்பவரின் விவசாய மின் இணைப்பில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக மின் கம்பத்தில் கோவிந்தசாமி ஏறி உள்ளார். இதில் எதிர்பார விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. ஆபத்தான நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் பலனின்றி, கோவிந்தசாமி சிகிச்சை உயிரிழந்தார்.இறுதி சடங்கிற்காக அவரது உடல் சொந்த ஊரான அய்யூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது , கோவிந்தசாமியின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்க கோரியும், அக்கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஆண்டிமடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோனேரிபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்
    • உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்து கிடந்த நபர் டீசர்ட்டும், கைலியும் அணிந்திருந்தார். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, அவா் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×