என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
- ஆண்டிமடம் அய்யூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்
- உரிய நடவடிக்கை, நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் திடீர் போராட்டம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த அய்யூர் கிராமம், ஐயனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 31). இவருக்கு தனபதி என்ற மனைவியும், ரிஷி தேவன்(7), ரித்திக் தேவன்(5) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.காந்திநகர் தெருவை சேர்ந்த கொடியரசு என்பவரின் விவசாய மின் இணைப்பில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக மின் கம்பத்தில் கோவிந்தசாமி ஏறி உள்ளார். இதில் எதிர்பார விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. ஆபத்தான நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் பலனின்றி, கோவிந்தசாமி சிகிச்சை உயிரிழந்தார்.இறுதி சடங்கிற்காக அவரது உடல் சொந்த ஊரான அய்யூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது , கோவிந்தசாமியின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்க கோரியும், அக்கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஆண்டிமடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






