search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPL 2018"

    கரிபியன் பிரீமியர் லீக்கில் அந்த்ரே ரஸல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் 11-வது ஆட்டம் பிளோரிடாவில் நடைபெற்றது. இதில் சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் - அந்த்ரே ரஸல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கயானா அமேசான் வாரியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் 3-வது வீரர் ஷிம்ரோன் ஹெட்மையர் 49 பந்தில் 100 ரன்னும், கேப்டன் சோயிப் மாலிக் 33 பந்தில் 50 ரன்னும் அடிக்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.

    பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அந்த்ரே ரஸல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் கென்னர் லெவிஸ் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் பிலிப்ஸ் 43 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.



    ராஸ் டெய்லர் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த மில்லர், ரோவ்மேன் பொவேல் அந்த்ரே ரஸல் சொற்ப ரன்களில் வெளியேற, ஜமைக்கா தல்லாவாஸ் 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 138 ரன்களில் சுருண்டது. அந்த்ரே ரஸல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் 71 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் பொல்லார்டு வீசிய ஓரே ஓவரில் டேரன் பிராவோ ஐந்து சிக்ஸ் உள்பட 32 ரன்கள் குவித்து அசத்தினார். #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த லூசியா 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 15  ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் அடித்திருந்தது.

    கடைசி 5 ஓவரில், அதாவது 30 பந்தில் 85 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மெக்கல்லம், டேரன் பிராவோ களத்தில் இருந்தனர்.



    16-வது ஓவரை பொல்லார்டு வீசினார். டேரன் பிராவோ பந்தை எதிர்கொண்டார். முதல் நான்கு பந்துகளிலும் இமாலய சிக்ஸ் விளாசினார் பிராவோ. ஐந்தாவது பந்தை தூக்கி அடித்தார். பந்து பேட்டில் சரியாக படாததால் மிட்ஆஃப் திசையில் சென்றது. அதில் இரண்டு ரன்கள் கிடைத்தது. சிக்ஸருக்குத்தான் முயற்சி செய்தார். ஆனால், இரண்டு ரன்களே கிடைத்தது.

    அடுத்த பந்தை மீண்டும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ஒரே ஓவரில் 32 ரன்கள் விளாசினார் டேரன் பிராவோ. பொல்லார்டு ஒரே ஓவரில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் அடுத்த 24 பந்தில் 53 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 53 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் மெக்கல்லம் மற்றும் டேரன் பிராவோ அதிரடியால் 212-ஐ சேஸிங் செய்து டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் 9-வது ஆட்டம் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியின் அந்த்ரே பிளெட்சர், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிளெட்சர் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னர் உடன் ரஹீம் கார்ன்வால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கார்ன்வால் 29 பந்தில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.


    கார்ன்வால்

    3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் கேப்டன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வார்னர் 72 ரன்னும், பொல்லார்டு 23 பந்தில் 65 ரன்னும் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க செயின்ட் லூசியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. பிரெண்டன் மெக்கல்லம் 42 பந்தில் 68 ரன்களும், டேரன் பிராவோ அவுட்டாகாமல் 36 பந்தில் 94 ரன்களும் விளாச 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் கயானா அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்விருக்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #CPL2018
    வெஸ்ட் இண்டீஸில் கரிபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    செயின்ட் கிட்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது கயானா அணியின் வேகப்பந்து வீச்சாளரான பாகிஸ்தானின் சோஹைல் தன்விர் 17-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் பென் கட்டிங் இமாலய சிக்ஸ் ஒன்று விளாசினார். சிக்ஸிற்கு அடுத்த பந்தில் களீன் போல்டானார்.



    இதனால் தன்வீர் தனது இரண்டு கைகளின் நடுவிரல்களை நீட்டி சந்தோசத்தை வெளிப்படுத்தினார். பிறர் மனதை புண்படும் வகையில் அறுவறுக்கத்தக்க வகையில் சைகை காட்டிய தன்விருக்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    கரிபியன் பிரீமியர் லீக் கிறிஸ் கெய்லின் செயின்ட் கிட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அமேசான் வார்யர்ஸ் வீழ்த்தியது. #CPL2018 #Gayle
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் - சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற சோயிப் மாலிக் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் கிறிஸ் கெய்ல் - எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    எவின் லெவிஸ் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் கிறிஸ் கெய்ல் வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 65 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 86 ரன்கள் குவித்தார். கெய்ல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களே சேர்த்தது.



    பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் 9, 0 ரன்னில் வெளியேறினாலும், அடுத்து வந்த ஷிம்ரோன் ஹெட்மையர் 45 பந்தில் ஆட்டமிழக்கால் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 79 ரன்கள் குவிக்க, கயானா 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    கரிபியின் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் வார்னர் மற்றும் பொல்லார்டு சொதப்பலால் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் தோல்வியை சந்தித்தது. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் 2018 சீசன் நேற்று தொடங்கியது. உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வெயின் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற செயின்ட் லூசியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் லின் 8 ரன்னிலும், சுனில் நரைன் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த கொலின் முன்றோ 48 பந்தில் 68 ரன்கள் குவித்தார். பிராண்டன் மெக்கல்லம் 13 ரன்னில் வெளியேற விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் 27 பந்தில் 50 ரன்கள் அடிக்க டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.

    பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியின் அந்த்ரே பிளெட்சர், டேவிட் வார்னர் ஆகியோர் தொடங்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிளெட்சர் 11 பந்தில் 19 ரன்கள் சேர்த்தார். ஆனால் முதன்முறையாக சிபிஎல் தொடரில் களம் இறங்கிய வார்னர் 9 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.


    கொலின் முன்றோ

    அதன்பின் வந்த லென்டில் சிம்மன்ஸ், கார்ன்வால், மார்க் சேப்மான் சொற்ப ரன்களில் வெளியே செயின்ட் லூசியா அணி தடுமாறியது.

    கேப்டனும், அதிரடி வீரரும் ஆன பொல்லார்டு 27 பந்துகளை சந்தித்து 12 ரன்னில் வெளியேற 17.3 ஓவரில் 95 ரன்னில் சுருண்டது. இதனால் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெயின் பிராவோ 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக சோயிப் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். #CPL #ShoaibMalik
    ஐபிஎல், பிக் பாஷ் டி20 லீக் தொடரை போல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கரிபியன் பிரீமியர் லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்த லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி இடம்பிடித்து விளையாடி வருகிறது.

    2018-ம் ஆண்டு தொடருக்கான கயானா அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடும் வருபவருமான சோயிப் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.



    சோயிப் மாலிக் இதற்கு முன் வெளிநாட்டில் நடைபெறும் லீக்கில் வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் கமிலா விக்டோரியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். கரிபியன் பிரீமியர் லீக் தெடர் அடுத்த மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது.
    பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் விளையாட தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரிபீயன் பிரிமீயர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #DavidWarner #CPL2018 #StLuciaStars

    செயின்ட்லூசியா:

    தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. இதனால் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. 

    இருப்பினும் கிரிக்கெட் ஆட்டத்திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கிளப், லீக் வகையிலான போட்டிகளில் மட்டும் விளையாட பின்னர் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் அவர் விளையாடி வந்தார்.

    இந்நிலையில், டேவிட் வார்னருக்கு ஆஸ்திரேலியாவுக்கு வெளியில் விளையாட தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வெஸ்ட்இண்டீசில் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ள கரிபீயன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடரில் அவர் விளையாட உள்ளது. அத்தொடரில் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்காக ஆட வார்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #DavidWarner #CPL2018 #StLuciaStars
    ×