search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cotton Auction"

    • ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
    • சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்கா ளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திர சேகரபுரம், அணைப்பாளை யம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்க பட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். நேற்று நடந்த ஏலத்திற்கு 2007 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி 1,896 மூட்டைகளும், டி.சி.எச் ரக பருத்தி 47 மூட்டைகளும், கொட்டு பருத்தி 64 மூட்டைகளும், கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6699-க்கும், அதிக பட்சமாக ரூ.7909-க்கும், டி.சி.எச். ரக பருத்தி குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.6559-க்கும், அதிகபட்சமாக ரூ.8333-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.4890-க்கும், அதிகப்பட்சமாக ரூ.5709-க்கும் ஏலம் விடப்பட்டது.

    இதன்படி நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.45 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்த அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    • பருத்தி ஏலத்திற்கு 1938 பருத்தி மூட்டைகள் ஏலத்துக்கு வந்திருந்தது.
    • ரூ 2ஆயிரம் முதல் ரூ.7600வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

    அவினாசி :

    அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 1938 பருத்தி மூட்டைகள் ஏலத்துக்கு வந்திருந்தது. இதில் ஆர்சிஎச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 6000 முதல் ரூ.7600வரையிலும் மட்டரகப்பருத்தி குவிண்டால் ரூ.2ஆயிரம் முதல் ரூ.3500 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

    பருத்தி ரூ. 38 லட்சத்து 68 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஏலத்திற்கு மொத்தம் 2,367 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது.
    • ரூ. 2,000 முதல் ரூ.8,019 வரையில் ஏலம் போனது.

    அவிநாசி :

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு மொத்தம் 2,367 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது.

    இதில் ஆா்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ.8,019 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.48 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
    • பருத்தி வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.39 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

    இந்த வார ஏலத்துக்கு, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 547 விவசாயிகள் 5,464 மூட்டைகளில் மொத்தம் 1,770 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,850 முதல் ரூ. 8,699 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,050. கடந்த வார சராசரி விலை ரூ. 7,850. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.39 கோடி.

    பருத்தி வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா். 

    • ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
    • கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்த அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

    இந்த ஏலத்தில் முத்துக்–காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமி பாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

    நேற்று நடந்த ஏலத்திற்கு ஆர்.சி.எச். ரகப் பருத்தி 2,435 மூட்டைகள், டி.சி.எச் ரக பருத்தி 205 மூட்டைகள், கொட்டு பருத்தி 58 மூட்டைகள் என 2,698 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    இதில், ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7569-க்கும், அதிக பட்சமாக ரூ.8444-க்கும், டிசிஎச் ரக பருத்தி குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.7869-க்கும், அதிகபட்சமாக ரூ.8650-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5390-க்கும், அதிகப்பட்சமாக ரூ.6669-க்கும் ஏலம் விடப்பட்டது.

    கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்த அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். விலையும் குறைந்து காணப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    • ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
    • கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல்,மின்னக்கல், சிங்களாந்த புரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழு வதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். நேற்று நடந்த இந்த ஏலத்தில் 4,618 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    இதன்படி, ஆர்.சி.எச். ரகப் பருத்தி 4,577 மூட்டைகளும், கொட்டு பருத்தி 111 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7,676-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,699-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5,335 முதல் அதிகப்பட்சமாக ரூ.7,000-க்கும் ஏலம் விடப்பட்டது.

    கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    • ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
    • நடந்த ஏலத்தில் 3,646 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

    இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்க ளாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமி பாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்ட னர். நேற்று நடந்த ஏலத்தில் 3,646 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    இதில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி 3,572 மூட்டைகளும், கொட்டு பருத்தி 74 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7,979-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,900-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5,419 முதல் அதிகப்பட்சமாக ரூ.7,191-க்கும் ஏலம் விடப்பட்டது. 

    • ஏலத்துக்கு 2, 276 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.
    • விற்பனை தொகை ரூ.59.11லட்சம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    அவிநாசி :

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.59.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2, 276 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் ஆா்.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 7,000 முதல் ரூ.8, 666 வரையிலும், மட்டரக (கொட்டு ரக)பருத்தி குவிண்டால் ரூ.2,000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.59.11லட்சம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
    • இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து கலந்து கொண்டனர். நேற்று 2125 பருத்தி மூட்டைகள் ரூ.55 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    இந்த ஏலத்தில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி 2107 மூட்டைகளும், கொட்டு பருத்தி 18 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6719-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8136-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.3000 முதல் அதிகப்பட்சமாக ரூ.5295-க்கும் ஏலம் விடப்பட்டது.

    • தொடக்க வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
    • மொத்தம் ரூ.27 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில், 950 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில் ஆர்.சி.எச் ரகம் ரூ.6,369 முதல் ரூ.8,539 வரையிலும், சுரபிரகம் ரூ.6,369 முதல் ரூ.8,539 வரையிலும், கொட்டு ரகம் ரூ.3,216 முதல் ரூ.5,895 வரையிலும் என மொத்தம் ரூ.27 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது. இதனை வியாபாரிகள் தரம் பார்த்து கொள்முதல் செய்து எடுத்து சென்றனர்.

    • ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
    • இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்து க்காளிப்பட்டி, மசக்கா ளிபட்டி, கவுண்டம்பா ளையம், சந்திர சேகரபுரம், அணைப்பா ளையம், பாச்சல், மின்னக்கல், சிங்க ளாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமி பாளையம், அம்மா பாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்ட னர். இந்த ஏலத்தில் 682 பருத்தி மூட்டைகள் ரூ.25 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி 678 மூட்டைகளும், கொட்டு பருத்தி 4 மூட்டைகளும், கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.8159-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9469-க்கும், கொட்டு ரக பருத்தி

    ஒரு குவிண்டால் குறைந்த பட்சம் ரூ.4900 முதல் அதிகப்பட்சமாக ரூ.5300-க்கும் ஏலம் விடப்பட்டது. 

    • விவசாயிகள் 901 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • சராசரி விலையாக ரூ.11,550-க்கும் விற்பனையானது.

    மூலனூர் :

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 901 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

    வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.12,269-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.9,550-க்கும், சராசரி விலையாக ரூ.11,550-க்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 9169 மூட்டைகள், குவிண்டால் 2976.84, மதிப்பு ரூ.3 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 869 ஆகும். இந்த மறைமுக ஏலத்தில் 21 வியாபாரிகள் பங்கேற்றனர் என திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

    ×