search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூலனூர்"

    • ஜூன் 24ந் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குண்டடம் :

    திருப்பூா் மாவட்டம் குண்டடத்தில் வருகிற 24-ந்தேதி சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த இலவச சிறப்பு மருத்துவ முகாம் மூலனூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :- தமிழக அரசு அறிவுறுத்தலின்படி மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 24ந் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளி, காங்கயம் காா்மல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றாக பொதுமக்கள் அதிகம் பயன்பெறும் வகையில் மூலனூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மருத்துவ முகாம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொளத்துப்பாளையம், கன்னிவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை 6-ந் தேதி நடைபெறுகிறது.
    • மாரியம்மன்கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    தாராபுரம்:

    தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மூலனூர், கொளத்துப்பாளையம், கன்னிவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை 6-ந் தேதி நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் காலை 9மணி முதல் பகல் 2மணி வரை அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, நொச்சிக்காட்டு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, போளரை, வலசு, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதுார், கிளாங்குண்டல், அரிக்கான்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, மாலமேடு, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெரமாள்வலசு, உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன்கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் 901 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • சராசரி விலையாக ரூ.11,550-க்கும் விற்பனையானது.

    மூலனூர் :

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 901 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

    வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.12,269-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.9,550-க்கும், சராசரி விலையாக ரூ.11,550-க்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 9169 மூட்டைகள், குவிண்டால் 2976.84, மதிப்பு ரூ.3 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 869 ஆகும். இந்த மறைமுக ஏலத்தில் 21 வியாபாரிகள் பங்கேற்றனர் என திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

    • பராமரிப்புப் பணிகாரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.
    • உயரழுத்த மின் கம்பிகளின் பாதைகளில் பராமரிப்பு பணிகள்

    காங்கயம் :

    தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்புப் பணிகள் கீழ்க்கண்ட இடங்களில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஓலப்பாளையம், கண்ணபுரம், பகவதிபாளையம், வீரணம்பாளையம், வீரசோழபுரம், காங்கயம்பாளையம், செட்டிபாளையம், முருகன்காட்டுவலசு, பா.பச்சாபாளையம்.

    பழையகோட்டை, நத்தக்காடையூர், மரு–துறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.

    காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுபாரை, பொன்னங்காலிவலசு, தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகர், அண்ணா நகர், ஏ.பி.புதூர், எஸ்.ஆர்.ஜி.வலசு ரோடு, சேரன் நகர், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம், புதுப்பை துணை மின் நிலையத்திற்குட்பட்ட புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூர், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூர், கரைவலசு, பட்டத்திபாளையம், செம்மடை, புள்ளசெல்லிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தாராபுரம் கோட்டம் மூலனூர் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் கம்பிகளின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை 29-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை வஞ்சி வலசு, நத்தம்பாளையம், சாணார்பாளையம், குருநாதர் கோட்டை, பாரக்கடை, அக்கரைப்பாளையம், மாம்பாடி, புளியம்பட்டி, நாராயணா வலசு, நால்ரோடு, எரிசனம்பாளையம், ஒத்தப்பாளையம், கருப்பணவலசு, நடுப்பாளையம், மணலூர் மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    திருச்சி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 78 விவசாயிகள் 317 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    மூலனூர்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.77 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. திருச்சி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 78 விவசாயிகள் 317 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 

    மொத்த வரத்து 109 குவிண்டால். திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 8 வணிகர்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனர். விலை குவிண்டால் ரூ.6,150 முதல் ரூ.8,828 வரை விற்பனையானது. 

    சராசரி விலை ரூ.7,350. மொத்தம் ரூ.77 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏல ஏற்பாடுகளை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
    ஆண்டுதோறும் சுமார் 1500- ஏக்கர் பரப்பளவில் கண்வலி மூலிகை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் முக்கிய தொழில்களில் கண்வலி சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது. 

    தற்போது இந்தப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக சுமார் 1000- ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கண் வலி மூலிகை பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் கிளங்குண்டல்,எடைக்கல்பாடி, குமாரபாளையம்,பொன்னிவாடி,போளரை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 1500- ஏக்கர் பரப்பளவில் கண்வலி மூலிகை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.


    சீசன் தொடங்கியுள்ள நிலையில் தொடர் மழை காரணமாக வாய்க்கால் வரப்புகளில் மழை நீர் தேங்கிய காரணத்தால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பிஞ்சுகள் உதிர்ந்து பூக்கள் முற்றிலும் அழுகிய காரணத்தால்  விளைச்சல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து தமிழ்நாடு கண் வலி மூலிகை விவசாய சங்க தலைவர் சுள்ளிபெருக்குபாளையம் லிங்குசாமி கூறியதாவது:-

    கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மூலனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 9 ஆண்டு தொடர் போராட்டத்திற்கு பிறகு சென்ற 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ கண்வலி ரூ.1500 க்கு வந்தது. தற்போது இந்த ஆண்டு ரூ.2,500 முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 

    இது விவசாயிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாகும். பொதுவாக ஒரு ஏக்கரில் விவசாயம் செய்ய சுமார் 500 முதல் 750 கிலோ கண்வலி கிழங்கு தேவைப்படுகிறது. 

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ கிழங்கு 450-க்கு விற்கப்பட்டது. ஒரு ஏக்கருக்கு விதைப்பதற்கு கிழங்கு மட்டும் சுமார் 3 லட்சம் தேவைப்படுகிறது. 

    பிறகு அதற்கு கம்பி வேலி , உரம் ,மருந்து, வேலையாட்கள் கூலி மற்றும் பராமரிப்பு என ஒரு ஏக்கர் கண்வலி பயிர் சாகுபடி செய்ய ரூ.5 லட்சம் வரை செலவாகிறது கடந்த ஆண்டு வரை விலை ரூ .2500 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் ரூ.2,500க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழையால் வாய்க்கால் வரப்புகளில் மழை நீர் தேங்கி கண்விழி பயிர்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கண்வலி பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

    ஆகவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வரும் காலங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக கண்வலி விதைகளை கொள்முதல் செய்ய வேண்டும். பயிர் கடன் வசதி செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    ×