search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mulanur"

    • ஜூன் 24ந் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குண்டடம் :

    திருப்பூா் மாவட்டம் குண்டடத்தில் வருகிற 24-ந்தேதி சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த இலவச சிறப்பு மருத்துவ முகாம் மூலனூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :- தமிழக அரசு அறிவுறுத்தலின்படி மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 24ந் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளி, காங்கயம் காா்மல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றாக பொதுமக்கள் அதிகம் பயன்பெறும் வகையில் மூலனூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மருத்துவ முகாம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 8,380 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 26 வணிகா்கள் வந்திருந்தனா்.

    மூலனூர் :

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.72 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 832 விவசாயிகள் தங்களுடைய 8,380 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 2,589 குவிண்டால்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 26 வணிகா்கள் இதை வாங்குவதற்காக வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 5,800 முதல் ரூ. 7,469 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 6,700. கடந்த வார சராசரி விலை ரூ. 6,900. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.72 கோடி.ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • பராமரிப்புப் பணிகாரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.
    • உயரழுத்த மின் கம்பிகளின் பாதைகளில் பராமரிப்பு பணிகள்

    காங்கயம் :

    தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்புப் பணிகள் கீழ்க்கண்ட இடங்களில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஓலப்பாளையம், கண்ணபுரம், பகவதிபாளையம், வீரணம்பாளையம், வீரசோழபுரம், காங்கயம்பாளையம், செட்டிபாளையம், முருகன்காட்டுவலசு, பா.பச்சாபாளையம்.

    பழையகோட்டை, நத்தக்காடையூர், மரு–துறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.

    காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுபாரை, பொன்னங்காலிவலசு, தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகர், அண்ணா நகர், ஏ.பி.புதூர், எஸ்.ஆர்.ஜி.வலசு ரோடு, சேரன் நகர், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம், புதுப்பை துணை மின் நிலையத்திற்குட்பட்ட புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூர், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூர், கரைவலசு, பட்டத்திபாளையம், செம்மடை, புள்ளசெல்லிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தாராபுரம் கோட்டம் மூலனூர் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் கம்பிகளின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை 29-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை வஞ்சி வலசு, நத்தம்பாளையம், சாணார்பாளையம், குருநாதர் கோட்டை, பாரக்கடை, அக்கரைப்பாளையம், மாம்பாடி, புளியம்பட்டி, நாராயணா வலசு, நால்ரோடு, எரிசனம்பாளையம், ஒத்தப்பாளையம், கருப்பணவலசு, நடுப்பாளையம், மணலூர் மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மூலனூரில் தொழிலாளி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி விசாரணை நடத்தி வருகின்றார்.
    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஈஸ்வரன்கோவில் வீதியை சேர்ந்த தண்டபானி என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன்(38) இவர் மூலனூரில் இரும்பு பட்டறையில்வேலை பார்த்து வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், சக்திவேதாஷ்(7)என்ற மகனும், சக்திஷ்னா(3), சக்திஸ்ரீ(2) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் மூலனூர்-அக்கரைப்பாளையம் சாலையில் மூலனூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். இவருக்கு முன்னால் ஒரு லாரி சென்றுகொண்டு இருந்தது வஞ்சிவலசு பிரிவு அருகே வந்த போது முன்னால் சென்ற லாரி வளைவில் திடீர் என நின்றதால் பின்னால் வந்த பாலசுப்பிரமணியன் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கத்தில் பலமாக மோதியதில் பாலசுப்பிரமணியனில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

     தகவல் அறிந்த மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×