search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.72 கோடிக்கு பருத்தி விற்பனை
    X

    கோப்புபடம்.

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.72 கோடிக்கு பருத்தி விற்பனை

    • 8,380 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 26 வணிகா்கள் வந்திருந்தனா்.

    மூலனூர் :

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.72 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 832 விவசாயிகள் தங்களுடைய 8,380 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 2,589 குவிண்டால்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 26 வணிகா்கள் இதை வாங்குவதற்காக வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 5,800 முதல் ரூ. 7,469 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 6,700. கடந்த வார சராசரி விலை ரூ. 6,900. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.72 கோடி.ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    Next Story
    ×