search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona virus"

    • தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 685 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 52 ஆயிரத்து 908 பேர் குணமடைந்துள்ளனர்.
    • தொற்று பாதிப்பால் நேற்று உத்தரபிரதேசம், டெல்லியில் தலா ஒருவரும், கேரளாவில் விடுபட்ட 3 இறப்புகளும் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 425 ஆக இருந்த நிலையில் இன்று 403 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 685 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 52 ஆயிரத்து 908 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4,972 ஆக சரிந்துள்ளது.

    இது நேற்றை விட 287 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று உத்தரபிரதேசம், டெல்லியில் தலா ஒருவரும், கேரளாவில் விடுபட்ட 3 இறப்புகளும் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 864 ஆக உயர்ந்துள்ளது.

    • இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது தொற்று உருமாறி புதுப்புது வடிவங்களில் பரவுகிறது.
    • ஒரு சில வாரங்களிலேயே தொற்று பரவல் மீண்டும் குறைய தொடங்கி விட்டது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது தொற்று உருமாறி புதுப்புது வடிவங்களில் பரவுகிறது.

    கடந்த பிப்ரவரி வரை மிகவும் குறைந்திருந்த தொற்று பரவல், மார்ச் மாதத்தில் இருந்து சற்று அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குழந்தைகள், வயதானவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டது.

    ஆனாலும் பாதிப்பு தீவிரமாக இல்லை. இதனால் ஒரு சில வாரங்களிலேயே தொற்று பரவல் மீண்டும் குறைய தொடங்கி விட்டது.

    இந்நிலையில் கேரளாவில் தொற்று பாதித்த பெரியவர்கள் சிலருக்கு மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவர்கள் கான்ஜூன்க்டிவிடிஸ் எனப்படும் ஒரு வித கண் நோயால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

    அதாவது தொற்று பாதித்தவர்களுக்கு கண் இளஞ்சிவப்பாக மாறுகிறதாம். இது கண்ணின் வெள்ளைப்பகுதியையும், கண் இமையின் உட்புறத்தையும் வரிசைப்படுத்தும் மெல்லிய அடுக்காகும்.

    இதுகுறித்து கோழிக்கோட்டில் உள்ள கிரிட்டிக்கல் கேர் மெடிசினின் மூத்த ஆலோசகர் டாக்டர் அணுக்குமார் கூறுகையில், இதற்கு முன்பு இதுபோன்ற அறிகுறிகள் காணப்படவில்லை. தொற்றால் பாதிக்கப்படுவர்களில் 60 சதவீதம் பேருக்கு தொண்டை வலியும் இருந்தது.

    இதுதவிர நோயாளிகளுக்கு காய்ச்சலும் இருந்தது. ஆனால் இந்த அறிகுறிகள் அனைத்துமே லேசானது முதல் மிதமானது தான். பாதிப்பு தீவிரமாக இல்லை என்றார்.

    இதற்கிடையே கொரோனாவின் உட்பிரிவான எக்ஸ். பிபி.1.16 வகை தொற்று ஏற்கனவே பரவி வரும் நிலையில் தற்போது புதிய வகை தொற்றான எக்ஸ்.பிபி.2.3 என்ற புதிய வகை உட்பிரிவு கண்டறியப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,300 மாதிரிகளில் நடத்தப்பட்ட மரபு சங்கிலி தொடர் பரிசோதனையில் இந்த புதிய வகை உட்பிரிவு கண்டறியப்பட்டுள்ளது.

    • அதிகபட்சமாக கேரளாவில் 843 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புதிதாக 3,962 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் பாதிப்பு 3,325 ஆக இருந்தது. நேற்று 3,720 ஆக உயர்ந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 843 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 7,873 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 828 ஆக உயர்ந்துள்ளது.

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட 3,933 குறைந்துள்ளது. அதாவது தற்போதைய நிலவரப்படி 36,244 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    தொற்று பாதிப்பால் நேற்று ராஜஸ்தானில் 3 பேர், சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப்பில் தலா 2 பேர் உள்பட 15 பேர் இறந்துள்ளனர்.

    கேரளாவில் விடுபட்ட 7 மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 606 ஆக உயர்ந்துள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது.
    • நேற்று மட்டும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. நேற்று மட்டும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்

    பட்டுள்ளது. அதே சமயத்தில் நேற்று 38 பேர் குணமடைந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டனர்.

    மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ள வர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் மருத்துவமனை களிலும், மற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முககவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • அதிகபட்சமாக கேரளாவில் 1,277, டெல்லியில் 865, மராட்டியத்தில் 754, அரியானாவில் 693, ஒடிசாவில் 516, உத்தர பிரதேசத்தில் 507 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    • தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 11,047 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 43 லட்சத்து 47 ஆயிரத்து 24 பேர் மரணமடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 7,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    பாதிப்பு நேற்று முன்தினம் 9,629 ஆக இருந்தது. நேற்று 9,355 ஆக குறைந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,277, டெல்லியில் 865, மராட்டியத்தில் 754, அரியானாவில் 693, ஒடிசாவில் 516, உத்தர பிரதேசத்தில் 507 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 32 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 11,047 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 43 லட்சத்து 47 ஆயிரத்து 24 பேர் மரணமடைந்துள்ளனர்.

    தற்போது 53,852 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 3,558 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் டெல்லியில் 7பேர், மராட்டியம், சத்தீஸ்கரில் தலா 3 பேர் உள்பட 28 பேர் நேற்று இறந்துள்ளனர்.

    கேரளாவில் விடுபட்ட 16 மரணங்கள் சுகாதாரத்துறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது.

    • 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 29 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கி யது.

    கடந்த சில மாதங்களா கவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 3 வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டி யல்படி ஈரோடு மாவட்ட த்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 988 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 29 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
    • நோய் பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப் படுகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

    அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், தற்காலிக சிகிச்சை மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப் படுகிறது.

    இதனிடையே மாவட்டம் முழுவதும் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சேலம் மாநகராட்சி பகுதிகளில் இருந்து மட்டும் 12 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. சேலத்தில் 2 பேருக்கும், எடப்பாடியில் ஒருவருக்கும் என சேலம் சுகாதார மாவட்டத்தில் 3 பேருக்கும், பெத்தநாய்க்கன்பாளையம்,

    அயோத்தியாபட்டணம், கெங்கவல்லியில் தலா 2 பேருக்கும், தலைவாசலில் ஒருவர் என ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கும், வெளிமாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவமனைகளிலும், மற்றவர்களுக்கு வீடுகளிலும் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலத்தில் போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மாஸ்க் போட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நேற்று கமிஷனர் அலுவலகத்தில் குற்றதடுப்பு கூட்டம் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

    நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முககவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 10 லட்சத்து 52 ஆயிரமாக இருந்தது.
    • கடந்த ஆண்டு சுமார் 60 லட்சத்து 19 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    கடந்த 2020ம் ஆண்டு முதல் அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு தடைகளை மத்திய அரசு விதித்திருந்தது. குறிப்பாக, வெளிநாட்டில் இருந்து மக்கள் இந்தியாவிற்குள் வர தடை விதிக்கப்பட்டது. உள்நாட்டிலேயே மாநிலங்களுக்கு இடையே மக்கள் வந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு பின்னர் நாட்டின் சுற்றுலா துறை மறுமலர்ச்சியை கண்டுள்ளதாகவும், கடந்த ஆண்டில் சுமார் 60 லட்சத்து 19 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வந்ததாகவும் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை மந்திரி கிஷன் ரெட்டி மாநிலங்களைவில் நேற்று தெரிவித்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாட்டின் சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் அளிக்கவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் சுற்றுலா அமைச்சகம் பல முயற்சிகளை எடுத்துள்ளது. அதன் பலனாக கடந்த ஆண்டு சுமார் 60 லட்சத்து 19 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இது கடந்த 2021-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 10 லட்சத்து 52 ஆயிரமாக இருந்தது.

    நாட்டில் சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கும், பார்வையாளர்களுக்கு வளமான சுற்றுலா அனுபவத்தை வழங்குவதற்கும், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய ஏஜென்சிகளுக்கு சுற்றுலா அமைச்சகம் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்கி வருகிறது.

    இவ்வாறு கிஷன் ரெட்டி கூறினார்.

    • தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
    • முக கவசம் அணிவது கட்டாயம் என்ற பதாகை ஒட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் , செவிலிய ர்கள் மருத்துவமனைக்கு வரும் உள் மற்றும் புற நோயாளிகள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இன்று முதல் நடைமுறைக்கு வந்ததை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வளாகம் முழுவதும் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற பதாகை ஒட்டப்பட்டுள்ளது.

    மேலும் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவம னைக்கு வரும் பொதுமக்க ளிடம் முக கவசம் அணிவது கட்டாயம் எனவும், முக கவசம் அணியாமல் வர தடை செய்யப்பட்டுள்ள தாகவும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் பொதுமக்கள் அரசு மருத்து வமனை நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் 18 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆய்வில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அன்னி என்ற 28 வயது பெண்ணுக்கு நரம்பியல் கோளாறு கண்டறியப்பட்டது.
    • தொற்றால் பாதிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்த பிறகும் அவருக்கு தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கூட அடையாளம் காண முடியவில்லை.

    கொரோனா தொற்று ஏற்பட்டு சில வாரங்களில் பெரும்பாலானோர் குணமடைந்து விடுகின்றனர். ஆனால் சிலருக்கு 4 முதல் 12 வாரங்கள் வரை அல்லது அதற்கு பிறகும் கூட நோயின் அறிகுறிகள் நீடிக்கும். இவற்றை 'நீண்ட (லாங்) கோவிட்' என அழைக்கின்றனர்.

    இதுபோன்ற நீண்ட கோவிட் பாதிப்புகள் சிலருக்கு முகம் குருட்டு தன்மை (புரோசோ பக்னோசியா) என்ற நரம்பியல் கோளாறை ஏற்படுத்தலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதனால் முகங்களை அடையாளம் காண இயலாமல் போகலாம். இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் ஒரு ஆய்வை நடத்தினர்.

    இதில் நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 54 பேரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அதில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நரம்பியல் கோளாறு பிரச்சினை இருப்பதாக கூறினர்.

    ஆய்வில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அன்னி என்ற 28 வயது பெண்ணுக்கு நரம்பியல் கோளாறு கண்டறியப்பட்டது. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு முகங்களை அடையாளம் காண்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    ஆனால் தொற்றால் பாதிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்த பிறகும் அவருக்கு தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கூட அடையாளம் காண முடியவில்லை என்று கூறினார்.

    கார்டேக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் சில தனி நபர்கள் நீண்ட கோவிட் காரணமாக சிரமங்களை உருவாக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.

    • சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு.
    • கொரோனா தொற்று அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு.

    தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 300-ஐ கடந்த நிலையில் இன்று 400-ஐ தாண்ட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்ட வாய்ப்பு எனவும், சென்னையில் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

    கொரோனா தொற்று அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தவும் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

    • தடுப்பூசி செலுத்தி இருப்பதால் தற்போது நன்றாக இருப்பதை உணர்கிறேன்.
    • கடந்த 5 மாதங்களில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, "எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    பொது சுகாதார வழி காட்டுதல்களை பின்பற்றி தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். தடுப்பூசி செலுத்தி இருப்பதால் தற்போது நன்றாக இருப்பதை உணர்கிறேன். எனவே நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    கடந்த 5 மாதங்களில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வாரம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஜஸ்டின் ட்ரூடோ நாடு திரும்பி இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ×