search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 போலீசார் உள்பட 23 பேருக்கு கொரோனா தொற்று
    X

    2 போலீசார் உள்பட 23 பேருக்கு கொரோனா தொற்று

    • நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
    • நோய் பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப் படுகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

    அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், தற்காலிக சிகிச்சை மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப் படுகிறது.

    இதனிடையே மாவட்டம் முழுவதும் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சேலம் மாநகராட்சி பகுதிகளில் இருந்து மட்டும் 12 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. சேலத்தில் 2 பேருக்கும், எடப்பாடியில் ஒருவருக்கும் என சேலம் சுகாதார மாவட்டத்தில் 3 பேருக்கும், பெத்தநாய்க்கன்பாளையம்,

    அயோத்தியாபட்டணம், கெங்கவல்லியில் தலா 2 பேருக்கும், தலைவாசலில் ஒருவர் என ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கும், வெளிமாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவமனைகளிலும், மற்றவர்களுக்கு வீடுகளிலும் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலத்தில் போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மாஸ்க் போட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நேற்று கமிஷனர் அலுவலகத்தில் குற்றதடுப்பு கூட்டம் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

    நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முககவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×