search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Confiscation of Cannabis"

    • முதியவர் கைது
    • போலீசார் விசாரணை

    ஒடுகத்தூர்:

    ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லைமேடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யப்படு வதாக நேற்று வேப்பங்குப்பம் போலீசா ருக்கும் ஒடுகத்தூர் வனத்து றையினருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கொல்லைமேடு மலை கிராமத்தில் வீடுவீடாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது முதியவர் ஒருவர் அதிகாரிகளை பார்த்தவுடன் தப்பியோட முயன்றார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர் அதே கிராமத்தை சேர்ந்த சின்னசாமி(வயது 58), என்பதும், இவர் வீட்டில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரது வீட்டை போலீசார் சோதனை செய்த போது வீட்டின் பின்புறம் சுமார் 2 கிலோ கஞ்சா மற்றும் 3 நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தார்.

    இதையடுத்து, சின்னசாமியை கைது செய்த போலீசார் அவர் வைத்து இருந்த கஞ்சா மற்றும் நாட்டுத்துப்பாக்கி களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதே பகுதியில் கடந்த மாதம் மிளகாய் நிலத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்ந்து வந்த 2 பேரை எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் கஞ்சா செடிகளுடன் கைது செய்ய ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 4 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ரெயிலில் அடிக்கடி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து ரெயில்களில் சோதனை நடத்த ரெயில்வே போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அசாம் மாநிலம் திப்ரூகர் ரெயில் நிலையத்தில் இருந்து கன்னி யாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடியை கடந்து சென்று கொண்டிருந்தது. அந்த ரெயி லில் சேலம் உட்கோட்ட ரெயில்வே தனிப்படை போலீசார் சோதனை நடத் திக்கொண்டிருந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம் பூர்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்ற போது, பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பா ரற்று கிடந்த பையை சோதனை செய்ததில் 4கிலோ கஞ்சா இருப்பது தெரியவந் தது.

    இதுகுறித்து ரெயில் பெட்டி களில் இருந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை செய் தனர். பின்னர் கஞ்சாவுடன் பையை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத் தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு கஞ்சா கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை, செப்.15-

    ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை செல்லும் விரைவு ரெயிலில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்- வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது சேலம் உட்கோட்டம் ரெயில்வே போலீசார் தனிப்படையினர்சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது பொது பெட்டியில் லக்கேஜ் வைத்திருக்கும் ரேக்கில் கேட்பாரற்று கிடந்த கருப்பு கலர் பையை சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் பையை யார் கொண்டு வந்தது என்று தெரியாததால் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 5 கிலோ சிக்கியது
    • ரெயில்வே போலீசார் நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் விரைவு ரெயிலில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி - ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் சேலம் உட்கோட்டம் ரெயில்வே போலீசார் இணைந்து சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் குழு சோதனை செய்தனர். அதில் கழிவறை அருகே கிடந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார் என குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • 27 கிலோ சிக்கியது
    • முதியவர் கைது

    ஜோலார்பேட்டை:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை ஆம்பூர் வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது.

    அப்போது ரெயில்வே போலீசார் பொதுப்பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோனமூளை பகுதியைச் சேர்ந்த ருத்ரமூர்த்தி (வயது 61) என்பவரை கைது செய்தனர். இவர் துணி பகுதியில் கஞ்சாவை வாங்கிக் கொண்டு திருப்பூரில் விற்பனை செய்வதற்காக கடத்தியதாகவும் டிக்கெட் எதுவும் எடுக்காமல் பயணம் செய்தது தெரிவித்தனர்.

    இதனையடுத்து தனிப்படையினர் ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்திய முதியவரை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
    • அப்போது பொதுப்பெட்டியில் சீட் நம்பர் 70- ல் இருந்த பையை சோதனை செய்தனர்.

    சேலம்:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கண்ணன், சங்கர், சக்திவேல் ஆகியோர் இன்று காலை அந்த ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் சீட் நம்பர் 70- ல் இருந்த பையை சோதனை செய்தனர். அந்த பையில் 5 பண்டல்களில் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் விசாரித்ததில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ருத்ரமூர்த்தி (வயது 61) என்பவர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து துணி பகுதியில் கஞ்சா வாங்கி திருப்பூர் பகுதியில் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் அவர் டிக்கெட் எடுக்காமல் பெட்டியில் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு அைழத்து சென்றனர்.

    • கேட்பாரற்று பை கிடந்தது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    சேலம் உட்கோட்ட ரெயில்வே சிறப்பு தனி படை பிரிவினர் சேலம் முதல் காட்பாடி வரை உள்ள ரெயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரெயில்களில் கஞ்சா மது பாட்டில் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    ரெயிலில் சோதனை

    இந்நிலையில் நேற்று காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை வரை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயில் குடியாத்தம் - ஆம்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தபோது ரெயிலின் முன்பக்கம் உள்ள பொது பெட்டியில் லக்கேஜ் ரேக்கில் கேட்பாரற்று கிடந்த நீல நிற பையை சோதனை செய்தபோது அதில் 4 ப ண்டல்களில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதனை அடுத்து ரெயில்வே சிறப்பு தனி படை பிரிவினர் அப் பெட்டியில் பயணம் செய்த நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட உடமை குறித்து கேட்டபோது யாரும் உரிமை கூறவில்லை.

    இதனால் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு கிலோ கஞ்சாவை கடத்திய நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் ரெயில்வே போலீசார் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தியவர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் பரிசோதனையில் சிக்கியது
    • பொதுமக்கள் புகாரால் நடவடிக்ைக

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த பிரசித்தி பெற்ற பருவத மலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வாலிபரிடம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்மகா தேவமங்கலம், கடலாடி ஆகிய ஊராட்சிகளுக்கு இடையில் பருவதமலை அமைந்துள்ளது.

    மூலிகை செடி கொடி மரங்கள் நிறைந்த இம்மலை மீது பக்தர்கள் ஏறி சென்று உச்சியில் உள்ள மல்லிகா அர்ஜுனேஸ்வர் சாமியை தரிசனம் செய்துவிட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதம் பவுர்ணமி, அமாவாசை மற்றும் வார விடுமுறை நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தந்து சுமார் 4ஆயிரத்து 560 அடி உயரம் உள்ள மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இதில் சென்னை, பாண்டிச்சேரி, வேலூர், ராணிப்பேட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாலிபர்கள் கஞ்சாவை எடுத்துக்கொண்டு மலை மீது சென்று பயன்படுத்துவதாகவும் மற்றும் சில அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு, வனத்துறையினருக்கும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதன் அடிப்படையில் வனத்துறையினரும் கடலாடி போலீசாரும் மலை மீது ஏறி செல்லும் பக்தர்களை பரிசோதனை செய்து அனுப்பி வைக்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து சுமார் 5 வாலிபர்கள் பருவதமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

    அவர்களை கடலாடி போலீசார் பரிசோதனை செய்தனர். அதில் ஒரு வாலிபர் கஞ்சாவை பையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதயடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8½ கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வங்காளம் மாநிலம் ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் வரை செல்லும் ஹவுரா விரைவு வண்டியில் தனிப்படையினர் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ஆம்பூர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரெயிலில் பொது பெட்டியில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் கேட்பாரற்று பையில் 7 பண்டலில் 8½ கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    பறிமுதல் செய்த கஞ்சாவை போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் கஞ்ச்ாவை கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×