search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Confiscation of Cannabis"

    • 28 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே திருநெல்வேலி ரெயில்வே போலீசார் ரெயில் பெட்டிகளில் இன்று காலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்று 2 பைகள் இருந்தது. அந்தப் பைகளை சோதனை செய்தபோது அதில் 28 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. பயணிகளிடம் விசாரணை நடத்திய போது அந்தப் பை யாருடையது என்பது தெரியவில்லை. ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.

    திருநெல்வேலி போலீசார் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் இரண்டு பைகளில் இருந்த கஞ்சாவை ஒப்படைத்தனர். பின்னர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் கஞ்சாவை கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீர் சோதனையில் சிக்கியது
    • கஞ்சா எப்படி கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் ஆண்கள் ஜெயிலில் கைதிகள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க திடீர் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

    நேற்று சிறை காவலர்கள் அடங்கிய சிறப்பு பிரிவினர் ஜெயில் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

    அப்போது ஜெயில் கழிவறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    இதனை 2 விசாரணை கைதிகள் மற்றும் ஒரு தண்டனை கைதி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் ஜெயில் அதிகாரிகள் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.

    ஜெயில் வளாகத்திற்குள் கஞ்சா எப்படி கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 6 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் ரெயில் நிலையத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர்

    இந்த நிலையில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது போலீசார் சோதனை செய்தனர்.

    கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது ெதரிந்தது.

    பின்னர் ரெயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்திய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு அருண்குமார் மற்றும் ரெயில்வே போலீசார் இன்று அதிகாலை ஒரிசா மாநிலம் ஆட்டியா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில மாண்டியா வரை செல்லும் ரெயிலில் சோதனை செய்தனர்.

    அப்போது ரெயிலின் பின்புறம் உள்ள பொது ஜனரல் பெட்டியில் சந்தேகத்தின் பேரில் அமர்ந்து பயணம் செய்த வாலிபரின் 2 பேக்கை சோதனை செய்தனர். அதில் 2 பண்டல்களில் சுமார் 18 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டதில் கர்நாடக மாநில பெங்களூர் மாண்டியா பகுதியைச் சேர்ந்த சுமந்த் (வயது 21)என தெரியவந்தது.

    அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • மேல்மலையனூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • 60 கிராம் கஞ்சாவை யும் பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே நெகனூர் கிராமத்தில் வளத்தி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வ நாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படி யான நபர் நின்று கொண்டி ருந்தார். போலீசார் அந்த நபரை விசாரித்தபோது சிறுகடம்பூர், மேட்டுப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த லாரன்ஸ் மகன் முருகன் (19) என்பதும் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. போலீசார் அந்த வாலிபரைகைது செய்து 60 கிராம் கஞ்சாவை யும் பறிமுதல் செய்தனர்.

    • கருப்பூர் சுங்கச்சாவடியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • பஸ்சில் ஒரு மூட்டையில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அருகே கருப்பூர் சுங்கச்சாவடியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பெங்களூ ரில் இருந்து தேனிக்கு வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த பஸ்சில் ஒரு மூட்டையில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து பஸ் டிரை வரிடம் விசாரித்தபோது, பெங்களூரில் இருந்து கஞ்சா மூட்டையை பஸ்சில் ஏற்றி விட்ட நபர்கள், பணம் கொடுத்து தேனியில் இறக்கி வைக்குமாறு கூறியது தெரியவந்தது.

    இதை அடுத்து பஸ் டிரைவரான தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ப வரை கைது செய்தனர். மேலும் ஒரு மூட்டை கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 38 கிலோ சிக்கியது
    • கேரள வாலிபர்கள் 2 பேர் கைது

    திருப்பத்தூர்:

    ஜார்க்கண்ட் மாநிலம் ஹத்தியாவிலிருந்து கர்நாடக மாநிலம் எஸ்வந்த்பூர் வரை செல்லும் ஹத்தியா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் காட்பாடி வழியாக சென்று கொண்டு இருந்தது.

    அப்போது திருநெல்வேலி உட்கோட்ட ரெயில்வே பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான போலீசார் காட்பாடி ரெயில் நிலையத்தில் ஹத்தியா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.

    ரெயில் ஜோலார்பேட்டை அருகே சென்ற போது 33 பெட்டியின் இருக்கைக்கு அடியில் 4 பைகளில் 20 பண்டல்களில் 38 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த 2 வாலிபர்களை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்த அல்தாப் நசீர் (வயது 20), மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஜெட்லி (20) என தெரிய வந்தது.

    இவர்கள் இருவரும் ஒரிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்திச் சென்று பெங்களூர் வழியாக கேரளா எடுத்துச் சென்று விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து பிடிபட்ட வாலிபர்கள் மற்றும் கஞ்சாவை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.3.80 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

    • 19 கிலோ சிக்கியது
    • பீகார் வாலிபர் கைது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கேரளா மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 1 வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது சிறப்பு தனி படை பிரிவினர் ரெயில் பெட்டியில் சோதனை செய்தபோது முன் பதிவு செய்யப்பட்ட எஸ் 14 இருக்கையின் அடியில் இருந்த பேக் ஒன்றை சோதனை செய்தபோது.

    அதில் 19 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருக்கையின் அருகே அமர்ந்திருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

    இவர் பீகார் மாநிலம் நிர்பூர் அடுத்த காஸ்மாரா பகுதியை சேர்ந்த சங்கர் பிரசாத் மந்தர் என்பவரின் மகன் அமித் குமார் (வயது 21) என்பதும், இவர் பீகார் மாநிலம் நிர்பூர் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்று அங்கு கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் பீகார் மாநில வாலிபரை கைது செய்து ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 19 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • 8 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    வட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களின் மூலம் தமிழ கத்திற்கு கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலை தடுக்கும். வகையில் ரெயில்களிலும், ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் அரக்கோ ணம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்த போது அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமை யில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது சுமார் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து வழக் குப்பதிந்து கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • 3 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    மேற்கு வங்காளம் ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில யஸ்வந்த்பூர் வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டு இருக்கும் போது ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் ரெயில்வே போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது பொது பெட்டியில் பயணிகளின் உடமைகள் வைக்கும் ரேக்கில் கேட்பாரற்று கிடந்த கருப்பு கலர் சோல்டர் பேக் சோதனை செய்ததில் 1 பண்டலில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    கஞ்சா கடத்திதது யார் என்று தெரியவில்லை இது குறித்து ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

    • 3 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    மேற்கு வங்காளம் ஹவுராவிலிருந்து பெங்களூரு செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆம்பூரை கடந்து வாணியம் பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    ரெயிலில் சேலம் உட்கோட்ட ரெயில்வே தனிப்படை போலீசார் சோதனை செய்து வந்தனர்.

    சோதனையின்போது பொதுப்பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று தோல் பை கிடந்தது. அதனை சோதனை செய் ததில் 1 பண்டலில் 3 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்தனர்.

    மேலும் பையை யார் கொண்டு வந்தது என்று தெரியாத தால் பையை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
    • ரெயிலில் சோதனை செய்தனர். அந்த பேக்கில் 2 பண்டல்களில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலம்:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலை யத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் பால முருகன் , ஏட்டுக்கள் பாலசுப்பிரமணியன், கண்ணன், சதானந்தம் ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    அந்த பேக்கில் 2 பண்டல்களில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து கஞ்சாவை போலீஸ் நிலையம் கொண்டு சென்று கடத்தி வந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×