search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்
    X

    ரெயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

    • 38 கிலோ சிக்கியது
    • கேரள வாலிபர்கள் 2 பேர் கைது

    திருப்பத்தூர்:

    ஜார்க்கண்ட் மாநிலம் ஹத்தியாவிலிருந்து கர்நாடக மாநிலம் எஸ்வந்த்பூர் வரை செல்லும் ஹத்தியா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் காட்பாடி வழியாக சென்று கொண்டு இருந்தது.

    அப்போது திருநெல்வேலி உட்கோட்ட ரெயில்வே பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான போலீசார் காட்பாடி ரெயில் நிலையத்தில் ஹத்தியா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.

    ரெயில் ஜோலார்பேட்டை அருகே சென்ற போது 33 பெட்டியின் இருக்கைக்கு அடியில் 4 பைகளில் 20 பண்டல்களில் 38 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த 2 வாலிபர்களை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்த அல்தாப் நசீர் (வயது 20), மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஜெட்லி (20) என தெரிய வந்தது.

    இவர்கள் இருவரும் ஒரிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்திச் சென்று பெங்களூர் வழியாக கேரளா எடுத்துச் சென்று விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து பிடிபட்ட வாலிபர்கள் மற்றும் கஞ்சாவை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.3.80 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×