என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சேலம் வழியாக சென்ற ரெயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் முதியவர் கைது
  X

  கைது செய்யப்பட்ட ருத்ரமூர்த்தியையும், பிடிப்பட்ட கஞ்சா ெபாட்டலங்களையும் படத்தில் காணலாம்.

  சேலம் வழியாக சென்ற ரெயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் முதியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
  • அப்போது பொதுப்பெட்டியில் சீட் நம்பர் 70- ல் இருந்த பையை சோதனை செய்தனர்.

  சேலம்:

  ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கண்ணன், சங்கர், சக்திவேல் ஆகியோர் இன்று காலை அந்த ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் சீட் நம்பர் 70- ல் இருந்த பையை சோதனை செய்தனர். அந்த பையில் 5 பண்டல்களில் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  போலீசார் விசாரித்ததில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ருத்ரமூர்த்தி (வயது 61) என்பவர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து துணி பகுதியில் கஞ்சா வாங்கி திருப்பூர் பகுதியில் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் அவர் டிக்கெட் எடுக்காமல் பெட்டியில் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு அைழத்து சென்றனர்.

  Next Story
  ×