search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commencement"

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



    தாமிர கொப்பரை.

    ............... 

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும்.

    கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடந்தது. உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை முன்னிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மாவிலை, பூ மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் 12.20 மணிக்கு கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.

    விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந் தேதி இரவு 8 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு வைர கிரீடம், நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ந் தேதி மதியம் 11 மணிக்கு கார்த்திகை தேரோட்டம் நடைபெறும்.அன்று மாலை 6 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதன்பிறகு இரவு 8 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

    திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக மலைமீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3½ அடி உயரம், 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 100 மீட்டர் காடாதுணியால் ஆன திரியில், 5 கிலோ கற்பூரத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த கொப்பரை சுத்தம் செய்யப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நகராட்சி தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு தொடங்குவதன் தொடக்கவிழா நடைபெற்றது.
    • எடமணல் கிராமத்தில் உள்ள நகராட்சிக்கு உரிய திடலில் மரக்கன்றுகள் நடும் விழா.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் தொடங்குவதின் தொடக்கவிழா நடைபெற்றது.

    விழாவையொட்டி சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில் உள்ள நகராட்சிக்கு உரிய திடலில் மரக்கன்றுகள் நடும் விழா நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், நகராட்சி எழுத்தர் ராஜகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராஜசேகரன், வேல்முருகன், ஜெயந்திபாபு, ரமாமணி, முபாரக், சாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    • தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக, இந்து சமய அறநிலையத் துறையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-7,8 தேர்வு நாளை தொடங்குகிறது.
    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 17 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக, இந்து சமய அறநிலையத் துறையில் கிரேடு -3 பிரிவில் காலியாக உள்ள 42 செயல் அலுவலா் பணியிடங்களுக்கு (குரூப் 7பி) நாளை (சனிக்கிழமை) காலை 9.30 முதல் 12.30 வரையில் தமிழ் மொழித் தோ்வும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இந்து சமயம் சாா்ந்த பொது அறிவுத் தோ்வும் நடைபெறுகிறது.

    இதேபோல் இந்து சமய அறநிலையத் துறையில் கிரேடு -4 பிரிவில் காலியாக உள்ள செயல் அலுவலா் நிலையில் உள்ள 36 பணியிடங்களுக்கு (குரூப் -8) நாைள மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை, மாலை இரு கட்டங்களாக தமிழ் தோ்வும், பொது அறிவுத் தோ்வு நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டத்தில் இத்தேர்வுகளை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-7 தேர்வினை 7 மையங்களில் 2,594 போ் எழுதுகின்றனா். குரூப் 7பி ேதர்வினை 5 மையங்களில் 2,078 போ் எழுதுகின்றனா்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தேர்வு பணியில் 2000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
    • முதல்வர் அப்பாஸ் மந்திரி மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. தமிழ்த்துறை தலைவர் இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார்.

    முதல்வர் அப்பாஸ் மந்திரி மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், சுயநிதி பாடப் பிரிவு இயக்குநர் ஷபினுல்லாகான், சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, உடற்கல்வி இயக்குநர் காளிதாசன் ஆகியோர் பேசினர்.

    இதில் ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிராஜுதீன், அப்துல் சலீம், உஸ்மான் அலி மற்றும் முதலாமாண்டு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். துணைமுதல்வர் ஜஹாங்கிர் நன்றி கூறினார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.

    • கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப்பெருமாள் கோவிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா தொங்கியது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப்பெருமாள் கோவிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா வெகு விமரிசையுடன் தொங்கியது.

    இதனையொட்டி வீரநாராயணப் பெருமாள் கோவில் வளாகத்தில் காலையில் ஸ்ரீ சுதர்சன் ஹோமம், ஸ்ரீ லட்சுமி குபேர ஹோமம் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிக்கு ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா தொடங்கியது.

    கோவில் தலைமை பட்டாச்சாரியார் ஸ்ரீதர் மற்றும் ராஜா ஆகியோர் தலைமையில் வேத விற்பன்னர்களை கொண்டு லட்சார்சனை நடத்தப்பட்டது. வருகின்ற 1-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடிப்பூரம் அன்று காலை லட்சார்ச்சனை விழா நிறைவு பெறுகின்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுகுமார் (கூடுதல் பொறுப்பு) தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    ×