search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chitrai Festival"

    • கூட்ட நெரிசலில் சிக்கி பலியான வாலிபர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
    • முதல்-அமைச்சர் நிவாரண நிதி கிடைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடகரைபுதூரை சேர்ந்த சந்திரன் (வயது 55) என்பவர் மதுரை கலெக்டர் அலுவல கத்தில் உறவினர்களுடன் வந்து இன்று மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு கணேஷ்பிரபு, சுதாகர் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் கணேஷ்பிரபு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சுதாகர் கார் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    அவர் கடந்த 5-ந்தேதி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண்பதற்காக நண்பர்களுடன் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் வைகை ஆற்றில் விழுந்து இறந்து விட்டார்.

    சுதாகர் எங்களை நல்லமுறையில் பாதுகாத்து பராமரித்து வந்தார். அவர் இறந்து விட்டது எங்களுக்கு அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே எங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனது மகன் இறந்ததற்கு தமிழக முதல்-அமைச்சர் நிவாரண நிதி கிடைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மே 3-ந்தேதி தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.
    • மே 4-ந்தேதி வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரை புறப்படும் வைபவம் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் வருடத்தின் அனைத்து மாதங்களும் திருவிழாக்களும், உற்சவங்களும் காணும் கோவில் ஆகும். நவராத்திரி, சிவராத்திரி மட்டுமல்ல சிவ பெருமான் தன்னுடைய 63 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம் என்பதால், ஒவ்வொரு திருவிளையாடலும் வெகு சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கம்.

    வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெற்றா லும் மிகவும் பிரசித்தி பெற்றது மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் தான். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்றதுமே நினைவிற்கு வருவது சித்திரை திருவிழா தான்.

    இது சைவ-வைணவ ஒற்றுமையை உணர்த்தும் விழாவாகவும் விளங்கு வதால் சிவனடியார்கள் மட்டுமல்ல திருமால் பக்தர்களும் கொண்டாடும் பெருவிழா ஆகும். உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டா பிஷேகம் ஏப்ரல் 30-ந்தேதியும், மீனாட்சி அம்மன் திக் விஜயம் மே 1-ந் தேதியும், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் மே 2-ந்தேதியும் நடை பெற்றது.

    மே 3-ந்தேதி தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 4-ந்தேதி வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரை புறப்படும் வைபவம் நடைபெறும்.

    சித்திரை திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களும் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த நிகழ்வுகளை காண மதுரை மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் வருவார்கள்.

    இந்நிலையில், மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

    • ஏமூர் பல்லக்கு புறப்பாடு வருகிற 6-ந்தேதியும், பூ போடுதல் நிகழ்ச்சி 7-ந்தேதியும் நடைபெற உள்ளது.
    • பல்லக்கு அந்தந்த ஊர்களில் வலம் வரும்போது வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏழூர் பல்லக்கு புறப்பாடு வருகிற 6-ந் தேதியும், பூ போடுதல் நிகழ்ச்சி 7-ந்தேதியும் நடைபெற உள்ளது.

    இந்த விழாக்களை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தாசில்தார் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.

    பேரூராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பல்லக்கு தொடங்கி ஏழூர் சுற்றி வரும் வரை கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் தவிர வேறு யாரும் தலையிட கூடாது. பல்லக்கு அந்தந்த ஊர்களில் வலம் வரும்போது வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சிக்கு அனைத்து ஊர்களிலும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சப்தஸ்தான பல்லக்கு ஊர்வலத்தின் போது தப்பாட்டம் நடத்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் முடிவு செய்யப்பட்டன.

    • சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில்சி த்திரை பெருவிழா 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது

    தஞ்சாவூர்:

    அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு சித்திரை பெருவிழா வருகிற 28-ந்தேதி கொடியேற்ற த்துடன் தொடங்குகிறது.

    விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.

    தொடர்ந்து, வருகிற மே 2-ந்தேதி தன்னைத்தானே பூஜித்தலும், 6-ந்தேதி தேரோட்டமும், 7-ந்தேதி நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், வீதியுலா மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    தொடர்ந்து, மே 8-ந்தேதி விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சித்திரை திருவிழாவையொட்டி மலையடி வாரம் பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் அபிராமி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
    • வருகிற மே 2-ந்தேதி திருக்கல்யாணமும், 3-ந்தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலையடி வாரம் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், இரவு சாமி சாட்டுதல் நடை பெற்றது. நேற்று காலை பானக்கம் பாலாபிஷேகம், இரவு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு மேல் கொடி யேற்றம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அர்ச்சகர்கள் கோவில் கொடியேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை காலை பூச்சொரிதலும், பூத்தட்டு ஊர்வலமும் நடைபெறுகிறது. 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலையில் பாலாபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

    28-ந்தேதி கரகம் ஜோடித்து மின்அலங்கார ரதத்தில் அம்மன் வீதிஉலா வருகிறார். 29-ந்தேதி பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். மாலையில் சிறப்பு அலங்காரம் நடைபெறும். 30-ந்தேதி காலை பொங்கல் வைத்தல், மாவிளக்கு போடுதல், இரவு வில்லிசை நடைபெறுகிறது.

    மே 1-ந்தேதி மாலை அழகு போட்டு நகர்வலம், அக்னிசட்டி எடுத்து பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது. 2-ந்தேதி முளைப்பாரி ஊர்வலம், கரகம் விடுதல் மற்றும் இரவு 8 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற உள்ளது.

    3-ந்தேதி மஞ்சள் நீராட்டுவிழா, 4-ந்தேதி மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் ஊஞ்சல் மண்டகப்படி, அதனைதொடர்ந்து 5-ந்தேதி மாலை தெப்பத்திருவிழா மற்றும் கோட்டைக்குளத்தில் தேரோட்டம் நடைபெறு கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தலைவரும், பரம்பரை அறங்காவலரு மான பாண்டி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலிலும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற மே 2-ந்தேதி திருக்கல்யாணமும், 3-ந்தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    • பிரான்மலை கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
    • குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் குயிலமுதநாயகி உடனுறை கொடுங்குன்றநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    சித்திரை திருவிழா 10 நாள் விழாவாக அனுஷ்டிக்கப்பட்டு 9-ம் நாள் தேரோட்டம் நடக்கிறது. தினந்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் நடந்த சிறப்பு பூஜையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு தேவஸ்தான பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவசாரியாரிடம் திருக்கட்டளை வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் மேள தாளத்துடன் பொன்னம்பல அடிகளாரை வரவேற்று மந்திர உபதேசங்கள் பெற்று திருக்கட்டளை வாங்கும் வைபவம் நடந்தது.

    அதை தொடர்ந்து பக்தர்கள் முன்னிலையில் 24-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    • ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சித்திரை திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்றது.
    • பூஜை வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்பபட்டர் குழுவினர் நடத்தினர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சித்திரை திருவிழா கணபதி ஹோமத்து டன் தொடங்கி நடைபெற்றது.

    அன்னதானம்

    இதனை தொடர்ந்து வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடந்தன. பின்னர் திரவிய ஹோமம், வஸ்திராகுதி, பூரணாகுதி, தீபாராதனை ஆகியவை நடந்தன. இதன்பின்னர் சுவாமி, அம்பாளுக்கு 18 வகை திரவியங்களால் மகா அபிஷேகம், அன்னா பிஷேகம், சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

    பூஜை வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் குழுவினர் நடத்தினர். மதியம் 5 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் நடந்தது. இதனை பா.ஜ.க. பிரமுக ரான ஆறுமுகநேரி கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    பரிசு பொருட்கள்

    கோவிலின் கோசாலை பராமரிப்பு மற்றும் உழவாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் மகளிரை ஊக்குவிக்கும் வகையில் 12 பேருக்கு தலா ரூ. 1000 மற்றும் புடவை உள் ளிட்ட பரிசு பொருட்களையும் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் வழங்கி னார். இதேபோல் ஆலய அர்ச்சகர்கள் உள்ளிட்ட பணியா ளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு 5-வது வார்டு கவுன்சிலர் தமயந்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவசங்கரி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இரவில் திருச்செந்தூர் கோவிந்த ம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பேராசிரியர் ஸ்ரீமதி தியாகராஜன் பக்தி சொற்பொழிவு ஆற்றினார். முடிவில் சுவாமி, அம்பா ளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிகளில் பக்த ஜனசபை நிர்வாகி தெரிசை அய்யப்பன், கீழவீடு பாஸ்கர், எம்.எஸ்.எஸ். கார்த்திகேயன், ெரயில்வே வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி, அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ், பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தங்கபாண்டி, பேராசிரியர் அசோக்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா, மண்டக படித்தாரரும் முன்னாள் விவசாய சங்க தலைவருமான கீழவீடு கே.ஆர். முருகன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • சித்திரை திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இன்று கொட்டகை முகூர்த்தம் நடந்தது.
    • வருகிற 26-ந் தேதி சப்பர முகூர்த்த விழா நடக்கிறது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த சித்திரை பெருந்திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டில் வரும் 26-ந் தேதி சப்பர முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    அன்று காலை 8.15 மணிக்கு மேல் 9 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும், மாலை 3.15 மணிக்கு மேல் 4.15 மணிக்குள் சப்பர முகூர்த்த நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் தலைமையில், கோவில் துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள் செய்துவருகின்றனர்.

    இந்த நிலையில் இதற்கான கொட்டகை முகூர்த்தம் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த முகூர்த்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    ×