என் மலர்

  நீங்கள் தேடியது "KRM Radhakrishnan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன். இவர் அ.தி.மு.க.வின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் செயலாளராக இருந்து வந்தார்.
  • கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 63 ஆயிரத்து 11 வாக்குகளை பெற்ற போதிலும் இவர் வெற்றிபெறவில்லை.

  ஆறுமுகநேரி:

  தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன். இவர் அ.தி.மு.க.வின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் செயலாளராக இருந்து வந்தார்.

  கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 63 ஆயிரத்து 11 வாக்குகளை பெற்ற போதிலும் இவர் வெற்றிபெறவில்லை.

  இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் என்கிற பொறுப்பில் இருந்து கட்சியின் தலைமையால் விடுவிக்கப்பட்டார்.

  இதன் பின் அவர் வேறு கட்சிக்கு மாறப் போவதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் தற்போது தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவரான அண்ணாமலையை சந்தித்து தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டுள்ளார். மேலும் அவர் மத்திய இணை அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பா.ஜ.க பிரமுகர்களையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

  அ.தி.மு.கவில் முக்கிய பிரமுகராக இருந்து வந்த கே.ஆர்.எம். ராதா கிருஷ்ணன் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளது தூத்துக்குடி மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கே.ஆர்.எம். ராதா கிருஷ்ணனுக்கு பாரதீய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் பேசப்படு கிறது.

  ×