search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess Olympiad"

    • முதல் போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது.
    • சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    இந்திய 'பி' அணியில் இடம் பெற்றுள்ள சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இத்தாலிக்கு எதிரான நேற்றைய 4-வது சுற்று ஆட்டத்தில் 'டிரா' செய்தார். போட்டிக்கு பிறகு அவர் கூறியதாவது:-

    முதல் போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது. 2-வது போட்டியில் வெற்றி பெற்றாலும் நான் ஒழுங்காக விளையாடவில்லை. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் சரியாக விளையாடினால் பதக்கத்தை வெல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் இந்திய ‘பி’ அணி 3-1 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.
    • இன்று 5-வது சுற்று ஆட்டம் நடக்கிறது. ஓபன் பிரிவில் இந்திய ‘பி’ அணி ஸ்பெயினை எதிர் கொள்கிறது.

    சென்னை:

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

    11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய 'பி' அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் இந்திய 'பி' அணி 3-1 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.

    இந்திய 'ஏ' அணி பிரான்சுடன் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. இந்திய 'சி' அணி 1.5-2.5 என்ற கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது.

    4 சுற்றுகள் முடிவில் ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணி, அர்மெனியா, இஸ்ரேல், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 5 நாடுகள் தலா 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளன.

    ஆனால் இதில் இந்திய 'பி' அணிதான் போர்டு பாயிண்டில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

    குகேஷ், சரின் நிகில், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானி ஆகியோரை கொண்ட இந்திய 'பி' அணி 15 போர்டு பாயிண்டுகளை பெற்று உள்ளது.

    இந்திய 'ஏ' அணி 7 புள்ளியுடன் 7-வது இடத்திலும், இந்திய 'பி' அணி 6 புள்ளியுடன் 20-வது இடத்திலும் உள்ளன.

    பெண்கள் பிரிவில் இந்திய அணி 4-வது சுற்றில் அங்கேரியை எதிர் கொண்டது. இதில் இந்திய 'ஏ' அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய 'பி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் எஸ்டோனியாவை தோற்கடித்தது. இந்திய 'சி' அணி 1-3 என்ற கணக்கில் ஜார்ஜியாவிடம் தோற்றது.

    பெண்கள் பிரிவில் 4-வது சுற்றில் முடிவில் அசர்பெய்ஜான், போலந்து, உக்ரைன், இந்திய 'ஏ', பிரான்ஸ், இந்தியா 'பி', ருமேனியா ஆகியவை தலா 7 புள்ளிகளுடன் உள்ளன.

    இன்று 5-வது சுற்று ஆட்டம் நடக்கிறது. ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணி ஸ்பெயினை எதிர் கொள்கிறது. இந்திய 'ஏ' அணி ருமேனியாவுடனும், இந்திய 'சி' அணி சிலியுடனும் மோதுகின்றன.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி பிரான்சுடனும், இந்திய 'பி' அணி ஜார்ஜியாவுடனும் இந்திய 'சி' அணி பிரேசிலுடனும் மோதுகின்றன.

    • செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வயதான வீராங்கனை என்ற பெருமையை ஜூலியா லேபல் அரியாஸ் பெற்றுள்ளார்.
    • நேற்றைய 4-வது சுற்றில் அவர் 13 வயது சிறுமி மரியமை (துனிசியா) எதிர்கொண்டார்.

    செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வயதான வீராங்கனை என்ற பெருமையை ஜூலியா லேபல் அரியாஸ் பெற்றுள்ளார். மொனக்கா நாட்டை சேர்ந்த அவருக்கு 78 வயதாகிறது. அர்ஜென்டினாவில் பிறந்து அந்நாட்டு அணிக்கு விளையாடி பின்னர் பிரான்ஸ் நாட்டுக்காக ஆடினார். தற்போது மொனாக்காவுக்காக ஆடுகிறார்.

    நேற்றைய 4-வது சுற்றில் அவர் 13 வயது சிறுமி மரியமை (துனிசியா) எதிர்கொண்டார். 70-வது காய் நகர்த்தலுக்கு பிறகு ஜூலியா வெற்றிபெற்று இந்த வயதிலும் சாதித்தார். பின்னர் அவர் கூறும்போது, 'நான் மிகவும் சோர்ந்து விட்டேன். ஆனால் வெற்றிபெற்று விட்டேன். எனது உடல்நலம் காரணமாக சில செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கவில்லை. சென்னை போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

    78 வயதான ஜூலியா பங்கேற்கும் 18-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இதுவாகும்.

    • இத்தாலியின் வோகடுரோவை எதிர்கொண்ட தமிழக வீரர் குகேஷ் 34-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
    • இதேபோல், மகளிர் பி அணியில் எஸ்தோனியா அணி வீராங்கனை நார்வாவை வந்திகா அகர்வால் வீழ்த்தினார்.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது சுற்று ஆட்டம் நடந்தது. இந்த சுற்றிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. போட்டியில் பங்கேற்ற 6 இந்திய அணியும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 4வது சுற்று ஆட்டம் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் இத்தாலி அணிக்கு எதிராக விளையாடிய தமிழக வீரர் குகேஷ் வெற்றிப்பெற்றுள்ளார். இத்தாலியின் வோகடுரோவை எதிர்கொண்ட தமிழக வீரர் குகேஷ் 34-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

    தொடர்ந்து, ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றுள்ளார். ஜார்ஜியா வீராங்கனையை எதிர்கொண்டபோது 42-வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றியடைந்தார்.

    இதேபோல், மகளிர் பி அணியில் எஸ்தோனியா அணி வீராங்கனை நார்வாவை வந்திகா அகர்வால் வீழ்த்தினார்.

    இத்தாலி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா டிரா செய்தார். இத்தாலி வீரர் லோடிசி லோரன்சோவிற்கு எதிராக வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா டிராவில் முடித்தார்.

    • 3 சுற்றுகள் முடிவில் இந்திய ‘பி’ அணி 12 போர்டு பாயிண்டுகளுடன் முன்னிலையில் இருக்கிறது.
    • பெண்கள் பிரிவில் பல்கேரி முன்னிலையில் (11.5 போர்டு பாயிண்டில்) உள்ளது.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது சுற்று ஆட்டம் நடந்தது. இந்த சுற்றிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. போட்டியில் பங்கேற்ற 6 இந்திய அணியும் வெற்றி பெற்றன.

    ஓபன் பிரிவில் இந்தியா 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் சாரீசையும், இந்திய 'பி' அணி 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும், இந்திய 'சி' அணி 3-1 என்ற கணக்கில் ஐஸ்லாந்தையும் தோற்கடித்தன.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தையும், இந்திய 'பி' அணி 3-1 என்ற கணக்கில் இந்தோனேசியாவையும், இந்திய 'சி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தின.

    3 சுற்றுகள் முடிவில் இந்திய 'பி' அணி 12 போர்டு பாயிண்டுகளுடன் முன்னிலையில் இருக்கிறது. பிரான்ஸ், இஸ்ரேல் 11.5 புள்ளிகளுடன் அடுத்த நிலையில் உள்ளது.

    இந்திய 'ஏ' 10.5 போர்டு பாயிண்டுடன் 6-வது இடத்திலும், இந்திய 'சி' அணி 18-வது இடத்திலும் (9.5) உள்ளன.

    பெண்கள் பிரிவில் பல்கேரி முன்னிலையில் (11.5 போர்டு பாயிண்டில்) உள்ளது. இந்திய 'ஏ' 5-வது இடத்தில் (10.5) இருக்கிறது.

    இந்திய 'பி' அணி 16-வது இடத்திலும், இந்திய 'சி' அணி 17-வது இடத்திலும் உள்ளது.

    4-வது சுற்று ஆட்டம் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்திய 'ஏ' அணி பிரான்சுடனும், இந்திய 'பி' அணி இத்தாலியுடனும், இந்திய 'சி' அணி ஸ்பெயினுடனும் மோதுகின்றன. பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி அங்கேரியுடனும் 'பி' அணி எஸ்டோனியாவுடனும், 'சி' அணி ஜார்ஜியாவுடனும் மோதுகின்றன.

    • போட்டி ஏற்பாட்டாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களிடம் உரையாடிய முதல்வர் ஸ்டாலின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.
    • பாலஸ்தீனை சேர்ந்த இளம் வீராங்கனை ராண்டாவை சந்தித்த முதல்வர் கைகுலுக்கி வாழ்த்து.

    சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண அரங்கிற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

    அப்போது, போட்டி ஏற்பாட்டாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களிடம் உரையாடிய முதல்வர் ஸ்டாலின் நிறை குறைகளை கேட்டறிந்தார். குறிப்பாக, உணவு, தங்குமிடங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

    இதற்கிடையே, பாலஸ்தீனை சேர்ந்த இளம் வீராங்கனை ராண்டாவை சந்தித்த முதல்வர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்ததுடன் நன்றாக விளையாடும்படி கூறினார்.

    ஆய்வின் இறுதியில் நிறைவு விழா குறித்தும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    • இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய ஈஷாவின் போட்டி டிராவில் முடிந்தது.
    • இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்தியா வெற்றிப் பெற்றார்.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று மூன்றாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. சரியாக, 3 மணியளவில் தொடங்கிய 3-வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் 6 அணிகள் களமிறங்கின.

    இந்நிலையில், இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்தியா வெற்றிப் பெற்றார். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த எதிரணி வீராங்கனை பங்கேற்காததால் நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவின் ரவுனக் சத்வானி 3-வது சுற்றில் வெற்றி பெற்றார். சுவிஸ் வீரர் பேபியனை எதிர்கொண்டபோது 38-வது நகர்த்தலில் இந்தியாவின் ரவுனக் சத்வானி வெற்றி பெற்றார்.

    இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய ஈஷாவின் போட்டி டிராவில் முடிந்தது.

    தொடர்ந்து, இந்தியாவின் பொதுப்பிரிவு ஏ அணியில் விளையாடிய ஹரி கிருஷ்ணா வெற்றிப் பெற்றுள்ளார்.

    மேலும், இந்திய பொதுப்பிரிவு சி அணியில் விளயைாடிய அபிஜித் குப்தாவும் வெற்றிப் பெற்றுள்ளார். ஐஸ்லாந்து அணி வீரரை எதிர்கொண்டு விளையாடியபோது 36வது நகர்த்தலில் அபிஜித் குப்தா வெற்றி பெற்றார்.

    செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஓபன் சி அணியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் சேதுராமன் வெற்றப் பெற்றுள்ளார். ஐஸ்லாந்து வீரர் ஹான்ஸை தனது 36வது நகர்வில் சேதுராமன் வீழ்த்தினார்.

    இதேபோல், இந்திய மகளிர் பி பிரிவில் விளையாடிய வந்திகா அகர்வால் வெற்றிப்பெற்றுள்ளார். இந்தோனேஷியா அணி வீராங்கனை சுகந்தரை தனது ௪௫வது நகர்த்தலில் வந்திகா அகர்வால் வீழ்த்தியுள்ளார்.

    இதற்கிடையே, இந்திய மகளர் சி பிரிவில் விளையாடிய சாஹிதி ஆஸ்திரியாவின் மேருபரிடம் தோல்வியடைந்துள்ளார்.


     


    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 2வது சுற்றுக்கான போட்டியில் விளையாடி வருகின்றனர்.
    • சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.

    3 மணியளவில் தொடங்கிய 2வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களம் இறங்கின. நேற்று ஓய்வில் இருந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களத்தில் இறங்கினார். இந்தியா ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றிப் பெற்றார்.

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் விளையாடி வரும் நிலையில், மெக்சிகோ வீரரை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி வெற்றிப் பெற்றார்.

    சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப்பெற்றுள்ளார்.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் நார்வே வீரரும் உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் வெற்றிப் பெற்றுள்ளார். 2-வது சுற்றில் உருகுவே வீரர் மேயர் ஜார்ஜை உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வீழ்த்தினார்.

    மேலும், இந்த தொடரில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 8 வயது வீராங்கனை ராண்டா சேடர் வெற்றிப் பெற்றுள்ளார். இவர், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற குறைந்த வயது வீராங்கனை ஆவார்.

    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 2வது சுற்றுக்கான போட்டியில் விளையாடி வருகின்றனர்.
    • சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.

    3 மணியளவில் தொடங்கிய 2வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களம் இறங்கின. நேற்று ஓய்வில் இருந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களத்தில் இறங்கினார்.

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் விளையாடி வரும் நிலையில், மெக்சிகோ வீரரை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி வெற்றிப் பெற்றார்.

    மேலும், சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப்பெற்றுள்ளார்.

    இந்நிலையில், இந்தியா ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றிப் பெற்றுள்ளார்.

    எஸ்டோனியா அணி வீரர் கிரில் சுக்கவினையை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்.

    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 2வது சுற்றுக்கான போட்டியில் விளையாடி வருகின்றனர்.
    • சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.

    3 மணியளவில் தொடங்கிய 2வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களம் இறங்கின. நேற்று ஓய்வில் இருந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களம் காண்கிறார்.

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் விளையாடி வரும் நிலையில், மெக்சிகோ வீரரை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி வெற்றிப் பெற்றுள்ளார்.

    மேலும், சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப்பெற்றுள்ளார்.

    • சென்னை மாநகராட்சி மூலம் அண்ணாநகரில் சுயநிதி திருவிழா நடக்கிறது.
    • தெருவோர வியாபாரிகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ரூ.10 ஆயிரம் வழங்கும் சுயநிதி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    சென்னை:

    மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    44-வது சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் முதல் காய் நகர்த்தும் நிகழ்வை நேற்று மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்.

    செஸ் தோன்றிய தமிழ் மண்ணில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது தமிழர்களுக்கு பெருமை.

    நேற்று அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டம் வழங்கியது அண்ணா பல்கலைக் கழகத்தின் வரலாற்று மைல்கல் ஆகும்.

    தமிழகத்துக்கு பிரதமர் மோடி கடந்த மே மாதம் 26-ந் தேதி வந்தார். அப்போது ரூ.5000 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 2 மாதத்திற்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வை நடத்த சென்னை வந்தார்.

    75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்த தருணத்தில் குக்கிராமத்தில் பிறந்த பழங்குடியின சகோதரி ஜனாதிபதி பதவியில் அமர்ந்துள்ளார். ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 3 நாட்கள் வீடுகள் தோறும் மூவர்ண தேசிய கொடியை ஏற்றும் இயக்கம் தொடங்க இருக்கிறோம். இந்த மூவர்ண கொடியை தமிழகத்தில் வீடுகள் தோறும் ஏற்றி சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து அவர்களின் மகிமையை இன்றைய சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    நாடுமுழுவதும் 24 ஆயிரம் கிராமங்களில் 4 ஜி அலைவரிசையை கொடுக்க இருக்கிறோம். தமிழகத்தில் இணையதள வசதி இல்லாத 534 கிராமங்களுக்கு 4ஜி அலைவரிசை வழங்கப்பட இருக்கிறது.

    இந்த திட்டத்துக்கு ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் 4 ஜி சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    எனவே இனி கிராமங்கள் தோறும் இணையதள வசதி கிடைக்க உள்ளது.

    சென்னை மாநகராட்சி மூலம் அண்ணாநகரில் சுயநிதி திருவிழா நடக்கிறது. தெருவோர வியாபாரிகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ரூ.10 ஆயிரம் வழங்கும் சுயநிதி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    இதன் மூலம் தமிழகத்தில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். தற்போது மேலும் 75 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 45 ஆயிரம் பேருக்கு இன்று மாலை தலா ரூ.10 ஆயிரம் சுயநிதி வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு காஷ்மீருக்கு சென்றதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
    • இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பில் எழுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

    சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பாகிஸ்தான் அணியினர் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்தனர்.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு காஷ்மீருக்கு சென்றதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்தது. இதையடுத்து சென்னையில் தங்கியிருந்த பாகிஸ்தான் வீரர்கள் நாடு திரும்பினர்.

    சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதி வழியாக ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தி சென்றது, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் தந்திரம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பிலும் எழுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

    ×