search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennaiyin FC"

    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணியை 4-3 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #ChennaiyinFC #NorthEastUnited
    சென்னை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி, நார்த் ஈஸ்ட் பைபிள் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் சென்னை அணியின் ரவ்லின்  பார்கெஸ் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, தாய் சிங் 15 மற்றும் 32-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்தார்.

    நார்த் ஈஸ்ட் அணி சார்பில் பர்த்தலோமியூ 29, 37, 39-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணியினர் 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது வெற்றியை உறுதி செய்தனர்.

    இந்தப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம் நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து சீசனின் முதல் 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது. #ISL2018 #ChennaiyinFC #NorthEastUnited
    ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழாவில் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன. #ISL2018 #ChennaiyinFC #NorthEastUnited
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடமும் (0-1), 2-வது ஆட்டத்தில் கோவா அணியிடமும் (1-3) தோல்வியை தழுவியது. கவுகாத்தி அணி முதல் ஆட்டத்தில் கோவாவுடன் டிரா (2-2) கண்டது. அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவை (1-0) வென்றது.



    உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சென்னை அணி வெற்றி கணக்கை தொடங்க முழு முயற்சி மேற்கொள்ளும். நட்சத்திர வீரர்கள் ஜெஜெ லால்பெகுலா, மெயில்சன் ஆல்வ்ஸ், இனிகோ கால்ட்ரோன், அகஸ்டோ உள்ளிட்டோர் சாதிக்கும் முனைப்புடன் தயாராகி வருகிறார்கள். அதே சமயம் வெற்றிப்பயணத்தை தொடர கவுகாத்தி அணி எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். எனவே இந்த மோதலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் கவுகாத்தி அணி 4 முறையும், சென்னை அணி 2 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இன்றைய ஆட்டம் குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி அளித்த பேட்டியில், ‘கவுகாத்தி அணி இந்த சீசனில் சிறப்பான தொடக்கம் கண்டு இருக்கிறது. அந்த அணியை நாங்கள் மதிக்கிறோம். அதேநேரத்தில் எங்கள் அணி வீரர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் எங்களுக்கு வெற்றி தேடித் தரும் திறமை படைத்தவர்கள்’ என்று தெரிவித்தார்.

    கவுகாத்தி அணியின் பயிற்சியாளர் எல்கோ ஸ்சாட்டோரி கருத்து தெரிவிக்கையில், ‘எந்த அணிக்கு எதிராகவும் எங்களால் சவால் அளிக்க முடியும். ஆனால் சென்னை அணியில் தனிப்பட்ட வீரர்களின் திறமை எங்களை விட அதிகமாக இருக்கிறது. இருப்பினும் அவர்களிடம் சில பலவீனங்கள் உள்ளது. அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்வோம்’ என்றார்.

    இதற்கிடையே, டெல்லியில் நேற்றிரவு நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது.  #ISL2018 #ChennaiyinFC #NorthEastUnited
    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணியை 3 -1 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
    சென்னை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி, எப்.சி. கோவா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் கோவா அணியின் எடு பெடியா முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 53-வது நிமிடத்தில் கோவா அணியின் பெரான் கரோமினாஸ் ஒரு கோலும், 80-வது நிமிடத்தில் மோர்டடா பால் ஒரு கோலும் அடித்தனர். இதனால் கோவா அணி 3 - 0 என முன்னேறியது. 
     
    கடைசியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் இறுதியில் சென்னையி எப்.சி அணி சார்பில் ஈலி சபியா ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 3-1 என்ற கணக்கில் கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
    சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது. மெய்ல்சன் ஆல்வ்ஸ் தலைமையிலான சென்னை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. மந்தர் ராவ் தேசாய் தலைமையிலான கோவா அணி தனது முதலாவது ஆட்டத்தில் கவுகாத்தியுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது.

    இந்த சீசனின் முதல் வெற்றியை ருசிக்க இரண்டு அணிகளும் வரிந்து கட்டுவதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சென்னை அணிக்கு பலம் சேர்க்கும். சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறுகையில், ‘பெங்களூருவுக்கு எதிராக எங்கள் அணி சிறப்பாக தான் செயல்பட்டது. இருப்பினும் நாங்கள் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை சரியாக முழுமை செய்யவில்லை. அந்த தவறை வரும் ஆட்டங்களில் சரி செய்வோம். சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதனை கோலாக மாற்றுவதில் கோவா அணியினர் சிறந்தவர்கள். எனவே தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 5-ல் சென்னையும், 3-ல் கோவாவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  #ISL2018 #ChennaiyinFC #FCGoa
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நாளை சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ISL
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐஎஸ்எல்) போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் சென்னையின் எப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூருவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.

    சென்னையின் எப்சி தனது 2-வது ஆட்டத்தில் நாளை கோவாவுடன் மோதுகிறது. இப்போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மெயில்சன் ஆல்வஸ் தலைமையிலான சென்னை அணியில் பெர்னாண்டஸ், ஆகஸ்டோ, ஜெஜெ, ஜெர்மன் பிரீத்சிங், நெல்சன், சபியா போன்ற வீரர்கள் உள்ளனர். கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் கட்டுபாட்டில் பந்து அதிக நேரம் இருந்தது.



    ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. பல கோல் வாய்ப்புகளை தவறவிட்டனர். இதனை சரி செய்ய வேண்டியது அவசியம்.
    சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த மழை பெய்தால் நாளைய போட்டி பாதிக்கப்பட கூடிய வாய்ப்பும் உள்ளது. கொச்சியில் இன்று இரவு நடக்கும் 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன.
    ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது.

    இதில் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், பெங்களூரு எப்.சி., கோவா எப்.சி., புனே சிட்டி, ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி எப்.சி., டெல்லி டைனமொஸ், நார்த்ஈஸ்ட் யுனைடெட் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் போட்டி நடைபெறும். இதன்படி ஒவ்வொரு அணியும் தலா 18 ஆட்டங்களில் விளையாடும். அதன்படி மொத்த லீக் ஆட்டங்கள் 90 ஆகும்.

    லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே- ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்தியாவில் 10 நகரங்களில் போட்டி நடக்கிறது.


    கொல்கத்தாவில் நாளை நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியான அட்லெடிகோ டி கொல்கத்தா- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    தற்போது டிசம்பர் 16-ந்தேதி வரை லீக் ஆட்டங்களான அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் சுமார் 2½ மாதம் காலம் 59 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் சர்வதேச போட்டி காரணமாக 3 முறை சிறிது இடைவெளி விடப்பட்டு போட்டிகள் நடக்கிறது.

    மீதமுள்ள லீக் ஆட்டங்கள், பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி, தேதி, இடம் விவரம் பின்னர் அறிவிக்கப்படுகிறது.

    சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள சென்னையின் எப்.சி. அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. பிரேசிலைச் சேர்ந்த மெயில்சன் ஆல்வஸ் தலைமையிலான சென்னையின் எப்.சி. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் இறங்குகிறது.


    மலேசியாவில் முதல்கட்ட பயிற்சி முகாமை முடிந்து சென்னையின் எப்.சி. பின்னர் கோவாவில் பயிற்சியை முடித்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் வருகிற 30-ந்தேதி பெங்களூரு எப்.சி.யுடன் மோதுகிறது.

    இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கிரிகோரி பயிற்சியாளராக உள்ளார். அவர் கூறும்போது, இந்த முறையும் கோப்பையை வசப்படுத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    சென்னையின் எப்.சி. அணியில் இந்தியாவைச் சேர்ந்த ஜெ.ஜெ. லால் பெகுக்லா, முகமது ரபி, தனபால் கணேஷ், ஜெர்மன் பிரீத்சிங், அனிருத் தபா மற்றும் பிரேசில், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொல்கத்தா (2014, 2016), சென்னை (2015, 2017) தலா 2 முறை கைப்பற்றி உள்ளன.  #ISL2018 #ATKvKBFC
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சி முகாம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் செப்டம்பர் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சி முகாம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்குகிறது. இதற்காக சென்னையின் எப்.சி. அணி வீரர்கள் வருகிற திங்கட்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார்கள். பயிற்சி முகாம் பயணத்துக்காக சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி ஏற்கனவே சென்னை வந்து விட்டார். 

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சென்னையின் எப்.சி. அணியின் 4 வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் மலேசியா செல்கிறார்கள். வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டில் இருந்து நேரடியாக மலேசியாவுக்கு சென்று அணியினருடன் இணைகிறார்கள்.

    மலேசியாவில் 4 வாரம் பயிற்சியில் ஈடுபடும் சென்னையின் எப்.சி. அணியினர் அங்குள்ள அணியுடன் 4 நட்புறவு ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். பயிற்சி முகாம் முடிந்து சென்னையின் எப்.சி. அணி செப்டம்பர் 11-ந் தேதி சென்னை திரும்புகிறது.  #ChennaiyinFC
    ×