search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy death"

    திருப்பூரில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலத்தை அடுத்த அக்ரஹாரப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). இவர் சொந்தமாக விசைத்தறிக்கூடம் வைத்துள்ளார்.

    இவருடைய மனைவி சங்கீதா (33). இவர்களுடைய மகன் ரேவந்த் (3). தொட்டிக்குள் தவறி விழுந்தான்

    சம்பவத்தன்று முத்துக்குமார் விசைத்தறி கூடத்திற்கு சென்று விட்டார். சங்கீதா வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் பந்து வீசி ரேவந்த் விளையாடிக்கொண்டிருந்தான்.

    சிறுவன் விளையாடிய பந்து வீட்டின் முற்றத்தில் விழுந்தது. இதையடுத்து வீட்டிற்கு வெளியே சென்று சிறுவன் விளையாடினான்.

    சிறிது நேரத்திற்கு பிறகு சிறுவனின் சத்தம் கேட்கவில்லையே என்று வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த சங்கீதா சிறுவனை தேடியுள்ளார்.

    அப்போது வீட்டின் முற்றத்தில் உள்ள சிமெண்ட் தொட்டிக்குள் சிறுவனும், அவன் விளையாடிய பந்தும் கிடந்தது. 2½ அடி உயரம் கொண்ட அந்த சிமெண்ட் தண்ணீர் தொட்டியில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்துள்ளது. தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பந்தை சிறுவன் எடுக்க முயன்றபோது அதற்குள் தலைகுப்புற தவறி விழுந்து இருப்பது தெரியவந்துள்ளது.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சங்கீதா கூச்சலிட்டார். உடனே தண்ணீர் தொட்டிக்குள் இருந்து சிறுவனை வெளியே தூக்கினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சாமளாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவந்த் இறந்தான். தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விராலிமலை அருகே சாலை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவன் பரிதாபமாக இறந்தான்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பூம்மரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவண பெருமாள். விவசாயி. இவரது மகன் ஸ்ரீதர் (வயது 4). இவன் இன்று காலை கீரனூர்-விராலிமலை சாலை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர் பாராதவிதமாக ஸ்ரீதர் மீது மோதியது. இதில் ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.  

    இது குறித்து தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீதர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் விசாரணையில் காரை ஓட்டி வந்தது திருச்சி கே.கே.நகரை சேர்ந்த டாக்டர் யாசப்அரபத் (வயது 34) என்பதும், அவர் ஆவூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவர் இன்று காலை பணிக்கு சென்ற போது இந்த விபத்து நடந்தது என தெரியவந்தது.

    இது குறித்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    கொளத்தூர் அருகே தண்ணீர் லாரி மோதி 1½ வயது சிறுவன் பலியானான். அவனது உடலை தூக்கியபடி சிறுவனின் தாய் லாரியை விரட்டிச்சென்ற காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
    மாதவரம்:

    வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதபுரத்தில் வசித்து வருபவர் கலைவாணன். தள்ளுவண்டியில் வேர்க்கடலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது 1½ வயது மகன் மோரிக்.

    தற்போது மகாலட்சுமி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களது சொந்த ஊர் திருவண்ணாமலை. கடந்த 2 வாரத்துக்கு முன்பு வில்லிவாக்கத்துக்கு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மகாலட்சுமி வீட்டின் எதிரே நின்று கொண்டு மகன் மோரிக்குக்கு சாப்பாடு கொடுத்தார். அப்போது சிறுவன் மோரிக் ஓடி விளையாடியபடி சாலை அருகே நின்றான்.

    அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி சாலையில் நின்ற மோரிக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த மோரிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி மகன் உடலை தூக்கிக் கொண்டு விபத்து ஏற்படுத்திய லாரியை விரட்டியபடி ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் தண்ணீர் லாரியை மடக்கி பிடித்தனர்.

    ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். லாரி டிரைவர் உத்திரமேரூரை சேர்ந்த மணிகண்டனையும் தாக்கினர்.

    திருமங்கலம் போக்குவரத்து போலீசார் மணிகண்டனை மீட்டு கைது செய்தனர். சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மகாலட்சுமி மகனின் உடலை தூக்கியபடி லாரியை பின்தொடர்ந்து செல்லும் பரிதாப காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வேலாயுதம்பாளையம் அருகே மண் சரிந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலாயுதம்பாளையம்:

    திருச்சி மாவட்டம், கல்லணைப் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (60) இவர் வேலாயுதம்பாளையம் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள செங்கல் தயாரிக்கும் சூளையில் குடும்பத்துடன் செங்கல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சம்பதன்று செங்கல் தயாரித்துக் கொண்டிருக்கும் போது இவரது மகன் தர்மராஜ் (11) அங்கு குவியலாக கிடந்த மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

    அப்போது திடீரென மண் சரிந்து தர்மராஜ் மீது விழுந்தது. இதில் சிறுவன் மூச்சி திணறி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #Tamilnews

    கும்பகோணம் அருகே மணல் லாரி மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம கள்ள தெருவைச் சேர்ந்த சுகுமார்-வனிதா ஆகியோரின் மகன் கிஷோர் (வயது 6) இவர் தேவனாஞ்சேரியில் உள்ள பாட்டி சித்ரா வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை சித்ரா ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்க மொபட்டில் கடிச்சம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். அவருடன் கிஷோரும் சென்றான். அவர்கள் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் அள்ளி கொண்டு பின்னால் வந்த லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் கிஷோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சித்ரா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிஷோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணல் லாரி மோதி சிறுவன் பலியானதை அறிந்த பொதுமக்கள் லாரி கண்ணாடியை உடைத்து கும்பகோணம்- தேவனாஞ்சேரி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கும்பகோணம் அருகில் மணல் லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்பகோணம் அருகே சைக்கிள் ஓட்ட பழகிய போது கார் மோதி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள புளியடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் பிரசன்னா(வயது 7). இவன் ஆடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    ராஜகோபாலின் சகோதரி மகன் ஹரிஹரன்(14). இவனும் மாமா வீட்டிலேயே தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்த நிலையில் நேற்று வீட்டின் அருகே பிரசன்னாவிற்கு, ஹரிஹரன் சைக்கிள் ஓட்ட பழகி கொடுத்தான். அந்த நேரத்தில் கும்பகோணத்தில் இருந்து புதூர் நோக்கி சென்ற கார், பிரசன்னா ஓட்டிக்கொண்டு இருந்த சைக்கிள் மீது மோதியது. இதில் பிரசன்னா படுகாயம் அடைந்தான். ஹரிகரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்த பிரசன்னாவை, உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசன்னா பரிதாபமாக இறந்தான்.

    பின்னர் அவனது உடலை, பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹரிஹரன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    விபத்து நடந்தவுடன் கார் டிரைவர், காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். உடனே அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள், மோட்டார் சைக்கிளில் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்று மடக்கி பிடித்து திருநீலக்குடி போலீசில் ஒப்படைத்தனர்.

    திருநீலக்குடி போலீஸ் சப்-இன் பெக்டர் அருள்குமார், அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், காரை ஓட்டி வந்தது மாந்தை கிராமத்தை சேர்ந்த ஜோஸ்வா(23) என்று தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஸ்வாவை கைது செய்தனர்.

    ×