search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boxing"

    • ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே கால் இறுதியில் தோற்று வெளியேறி இருந்தனர்.
    • ஜப்பான் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற லவ்லினா கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

    காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதியானது.

    குத்து சண்டையில் இந்தியா சார்பில் 5 வீரர்கள், 5 வீராங்கனைகள் ஆக மொத்தம் 10 பேர் பங்கேற்று உள்ளனர். இதில் ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே கால் இறுதியில் தோற்று வெளியேறி இருந்தனர்.

    நேற்று நடந்த கால் இறுதியில் 3 இந்தியர்கள் வெற்றி பெற்றனர். இதனால் குத்து சண்டையில் 3 பதக்கம் உறுதியானது. பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிஹாத் ஜரீன் கால் இறுதியில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ஹெலன் ஜோன்சை எதிர் கொண்டார்.

    இதில் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதியில் அவர் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டப்லேயை 6-ந்தேதி சந்திக்கிறார்.

    இதே போல 48 கிலோ பிரிவில் வீராங்கனை நித்து, 57 கிலோ பிரிவில் வீரர் ஹூசைன் ஆகியோரும் கால் இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    ஜப்பான் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற லவ்லினா கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். 70 கிலோ பிரிவில் பங்கேற்ற அவர் கால் இறுதியில் 2-3 என்ற கணக்கில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ரோசியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தார்.

    • இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்ய டெல்லியில் தகுதிச்சுற்று போட்டி நடக்கிறது
    • காமன்வெல்த் போட்டிக்கு இந்த முறை மேரி கோம் செல்ல முடியாது.

    புதுடெல்லி:

    பயிற்சி போட்டியில் இருந்து விலகியதன் மூலம் காமன்வெல்த் போட்டிக்கு இந்த முறை மேரி கோம் செல்ல முடியாது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அடுத்த மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று போட்டி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்து வருகிறது. 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் மற்றும் பல்வேறு நட்சத்திர வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

    இதில் நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் மேரி கோம், அரியானாவின் நிதுவை சந்தித்தார். முதல் ரவுண்டில் 39 வயதான மேரிகோம் எதிராளிக்கு குத்துவிட முயற்சித்த போது, நிலை தடுமாறி விழுந்தார். இதில் அவருக்கு இடது கால்முட்டியில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போட்டியை நடுவர் நிறுத்தினார். உடனடியாக மேரிகோம் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். 

    மேரி கோம் போட்டியில் இருந்து பாதியில் விலகியதால், அவரை எதிர்த்து மோதிய நிது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். எனவே, இந்த முறை காமன்வெல்த் போட்டிக்கு மேரி கோம் செல்ல முடியாது.

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை மற்றும் சீட்டு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவுக்கு இன்று 2 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. #AsianGames2018
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல், இறுதிச்சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனான ஹசன்பாய் துஸ்மதோவை (உஸ்பெகிஸ்தான்) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் அமித் பங்கல் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.  இவர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

    இதன்மூலம் குத்துச்சண்டையில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. இதற்கு முன்பு 75 கிலோ எடைப்பிரிவில் விகாஷ் கிரிஷன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.



    இதேபோல் இன்று நடைபெற்ற சீட்டு விளையாட்டிலும் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு சீட்டு விளையாட்டில் இந்தியாவின் பர்தான் பிரணாப்-சர்க்கார் ஷிப்நாத் ஜோடி இறுதிச்சுற்றில் 384 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. சீனாவின் யாங் லிக்சின்-சென் காங் ஜோடி 378 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது. மூன்று மற்றும் 4-வது இடங்களைப் பிடித்த இந்தோனேசியா மற்றும் ஹாங்காங் ஜோடிகளுக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    இந்த போட்டியின் முடிவில் இந்தியா 15 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 8-வது இடத்தில் நீடிக்கிறது.  #AsianGames2018 
    ஆசிய விளையாட்டுப் போட்டியின் 14-வது நாளான இன்று குத்துச்சண்டை, ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #asiangames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரில் நடைபெற்று வருகிறது.

    13-வது நாளான நேற்று இந்தியாவுக்கு 6 பதக்கம் கிடைத்தது. பாய்மரபடகு போட்டியில் சுவேதா, வர்ஷா கவுதம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி (49 இ.ஆர்.எப்.எக்ஸ் வகை) வெள்ளிப்பதக்கம் வென்றது. இதேபோல பெண்கள்  ஹாக்கியிலும் வெள்ளி கிடைத்தது.

    பாய்மர படகு போட்டியில் ஹர்சிதா தோமர் (ஓபன் லேசர் 4.7 பிரிவு) வருண் தாக்கர்- கணபதி சென்னப்பா (49 இ.ஆர்) ஜோடி மற்றும் விகாஸ் கிருஷ்ணன் (குத்துச்சண்டை) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

    மேலும் சவுரவ் கோ‌ஷல், ஹரீந்தர், பால்சிங் சாந்து, ரமீத் தண்டன், மகேஷ் மாங் கோகர் ஆகியோர் அடங்கிய ஸ்குவாஷ் ஆண்கள் அணி வெண்கலம் பெற்றது. இந்தியா 13 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் ஆக மொத்தம் 65 பதக்கம் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது.

    ஆசிய விளையாட்டுப் போட்டியின் 14-வது நாளான இன்று இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    குத்துச்சண்டையின் 49 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அவர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த டஸ்மட்டோவை சந்திக்கிறார்.

    இதில் வென்றால் அமித் தங்கம் வென்று புதிய வரலாறு படைப்பார். தோற்றால் வெள்ளிப்பதக்கம் கிடைக்கும்.

    ஸ்குவாஷ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனயா குருவில்லா, தன்வி கண்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி இன்று பிற்பகல் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆங்காங்கை எதிர்கொள்கிறது. இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி ஆங்காங்கை வீழ்த்தி தங்கம் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றால் வெள்ளி கிடைக்கும்.

    ஆசிய விளையாட்டுப் போட்டி நாளையுடன் முடிகிறது. டிரையத்லான் போட்டி மட்டும் நாளை நடக்கிறது.

    இந்திய அணி இதுவரை 65 பதக்கம் பெற்றுள்ளது. இன்று 2 பதக்கம் உறுதியாகி உள்ளது. #asiangames2018
    ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஹாக்கி, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவுக்கு 5 பதக்கம் உறுதியாகி உள்ளது. #AsianGames2018


    பெண்கள் ஹாக்கிப்போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் வெள்ளிப்பதக்கம் உறுதியானது. இந்திய அணி இறுதிப்போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.

    ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா, சுனையா குருவல்லா தன்விகன்னா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும், ஹரிந்தர்பாலசாந்து, ரம்ஜித் தண்டன், மகேஷ் மன்கோகர், சவுரவ் கோ‌ஷல் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    இதன்மூலம் ஸ்குவாஷ் போட்டியில் 2 வெண்கலம் உறுதியானது. ஏற்கனவே ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் 3 வெண்கலம் கிடைத்து இருந்தது. அரை இறுதியில் பெண்கள் அணி ஆங்காங்கையும், ஆண்கள் அணி மலேசியாவையும் இன்று சந்திக்கின்றன.

    குத்துச்சண்டை போட்டியில் 4 இந்தியர்கள் கால்இறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர். இதில் அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு நுழைந்தனர். இதனால் 2 வெண்கல பதக்கம் உறுதியானது. தீரஜ், சர்ஜூபாலா ஆகியோர் கால்இறுதியில் தோற்றனர்.

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் கெமிஸ்ட்ரி கோப்பை குத்துச் சண்டை தொடரில் மதன் லால், கவுரவ் சொலாங்கி, ஹுசாமுதீன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். #ChemistryCup #GauravSolanki #Hussamuddin #MadanLal

    ஜெர்மனியின் ஹாலேயில் கெமிஸ்ட்ரி கோப்பை குத்துச்சண்டை தொடர் நடைபெற்று வருகிறது. 

    இதில் இந்தியா சார்பில் 52 கிலோ எடைப்பரிவில் கலந்து கொண்ட கவுரவ் சொலாங்கி அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதேபோல 56 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மதன் லால், ஜுசாமுதீன் மொகமது ஆகியோரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். #ChemistryCup #GauravSolanki #Hussamuddin #MadanLal
    இந்திய தொழில்முறை குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காமன்வெல்த் சூப்பர் மிடில்வெய்ட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியில் பிரிட்டன் வீரர் லீ மார்கமை எதிர்கொள்ள இருக்கிறார். #VijenderSingh #LeeMarkham #CommonwealthSuperMiddleweight

    புதுடெல்லி:

    இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் முன்னணி வீரராக திகழும் விஜேந்தர் சிங், இதுவரை விளையாடியுள்ள 10 பந்தயங்களிலும் வெற்றி பெற்றிருப்பதுடன் டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் (WBO Oriental) மற்றும் ஆசிய பசிபிக் (Asia-Pacific)  பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார். 

    இந்நிலையில், அவர் தனது 11-வது போட்டியில் பிரிட்டனை சேர்ந்த லீ மார்கம் உடன் மோத இருக்கிறார். இந்த போட்டி காலியாக இருக்கும் காமன்வெல்த் சூப்பர் மிடில்வெய்ட் சாம்பியன்ஷிப்பிற்காக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் விஜேந்தர் சிங் மூன்றாவது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.



    விஜேந்தர் சிங்கை எதிர்த்து விளையாட இருக்கும் லீ மார்கம், இதுவரை 22 போட்டிகளில் விளையாடி 17 வெற்றிகளை பெற்றுள்ளார். இந்த போட்டி ஜூலை 13-ம் தேதி லண்டனில் உள்ள யார்க் அரங்கத்தில் நடைபெறும் என விஜேந்தர் சிங் அறிவித்துள்ளார். அந்த போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

    மார்கம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்ததற்கு பின் எந்த குத்துச்சண்டை போட்டியிலும் விளையாடாமல் இருந்தார். அதே சமயம் விஜேந்தர் சிங் ஆறு மாதங்களாக இரட்டை சாம்பியன்ஷிப் பட்டங்களை தக்க வைத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #VijenderSingh #LeeMarkham #CommonwealthSuperMiddleweight
    ×