search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blag flag"

    கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 700 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்துக்கு சென்று அங்கு தூய்மை திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

    கவர்னரின் ஆய்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று மதியம் 1 மணிக்கு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அவர்கள் கருப்பு சட்டையும் அணிந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவர்னருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதில் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் அங்கயற்கண்ணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராதாமணி, உதயசூரியன், டாக்டர் மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், வசந்தம் கார்த்திகேயன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    மேலும் காங்கிரஸ் அமைப்பு செயலாளர் ஸ்ரீவை ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சரவணன், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சரவணன், இரணியன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 700 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேன்களில் ஏற்றி அங்குள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். #Tamilnews
    ×