search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharat"

    • நாட்டிய கலைஞர்கள் 500-க்கும் மேற்பட்டோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    • ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள புகழ்வாய்ந்த அபயா ம்பிகை உடனாகிய மாயூரநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 17-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடங்கியது.

    சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக பிப்ரவரி 18ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதிவாணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்மகாபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.

    இதில் பத்மஸ்ரீ லீலா சாம்சன் மற்றும் சென்னை கோவை சேலம் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பெங்களூரு மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் 500க்கும் மேற்பட்டோரின் கலைநிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.

    முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மங்கள இசை உடன் துவங்கிய நிகழ்வில் கோவை ஸ்ரீ நாட்டிய நிக்கேதன் வழங்கிய வந்தே பாரதம் நிகழ்ச்சியில் பல மாநில நாட்டியக் கலைகளின் சங்கமமான கதக், ஒடிசி, மோகினியாட்டம், பரதநாட்டியம் குச்சுப்புடி உள்ளிட்ட ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்தது. ஏராளமானோர் ஆர்வமுடன் மயூர நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

    நிகழ்ச்சியில் நிறுவனர் பரணிதரன், ஏ ஆர் சி விஸ்வநாதன், ஏ பி சி செந்தில்வேலன், நிகழ்ச்சி யின் தொகுப்பாளர் அகஸ்டின்விஜய், மற்றும் மயிலாடுதுறை முக்கிய பொறுப்பாளர்கள் அரசியல்வாதிகள் பொது மக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாக்கும் நேரம் வந்து விட்டது என்று பிரதமர் மோடியை தாக்கி ‘டுவிட்டர்’ பக்கத்தில் பா.ஜனதா எம்.பி.யான நடிகர் சத்ருகன் சின்கா கருத்து தெரிவித்துள்ளார். #ShatrughanSinha #BJP
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக உள்ள நடிகர் சத்ருகன் சின்காவுக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து, நேற்று அவர் பிரதமர் மோடியை தாக்கி ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டார்.



    அவர் கூறியிருப்பதாவது:-

    காங்கிரசின் குடும்ப அரசியல் பற்றி மோடி குரல் எழுப்புகிறார். இது விரக்தியின் வெளிப்பாடு. முதலில், உங்கள் சொந்த கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் பாருங்கள். எல்லா கட்சியிலுமே குடும்ப அரசியல் இருக்கிறது.

    ‘காங்கிரஸ் இல்லா பாரதம்’ உருவாக்கும் உங்கள் வாக்குறுதி என்ன ஆனது? மற்ற வாக்குறுதிகள் போல் காற்றோடு போய்விட்டதோ? கவலைப்படாதீர்கள். எல்லா இடத்திலும் காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாக்க நேரம் வந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ShatrughanSinha #BJP

    பாலிவுட்டில் சல்மான் கான் ஜோடியாக ‘பாரத்’ படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு மற்ற நடிகைகளை விட அதிக சம்பளம் வழங்க தயாரிப்பு தரப்பு சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. #Bharat #PriyankaChopra
    பிரியங்கா சோப்ரா இந்தியில் தயாராகும் ‘பாரத்’ படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துக்கு அவர் ரூ.13 கோடி சம்பளம் வாங்குதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    வேறு எந்த இந்திய நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை. 

    கான் நடிகர்களுக்கு அடுத்த வரிசையில் இருக்கும் கதாநாயகர்கள் ரூ.10 கோடிக்கு குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர். அவர்களை பிரியங்கா சோப்ரா முந்தி இருக்கிறார். தீபிகா படுகோனே சமீபத்தில் வெளியான பத்மாவத் படத்துக்கு ரூ.12 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. இதுவரை முதல் இடத்தில் இருந்த அவர், இப்போது இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளார். கங்கனா ரணாவத் ரூ.11 கோடி சம்பளம் வாங்குகிறார்.



    பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் சில படங்களில் நடித்துவிட்ட நிலையில், குவாண்டிகோ தொடரின் மூலம் உலகளவில் பிரபலமானார். இதன்மூலமே அவரது மார்க்கெட் உயர்ந்தது. பிரியங்கா சோப்ராவுக்கு உலக அளவில் ரசிகர்கள் அதிகரித்துள்ளதால் அவர் கேட்கும் சம்பளத்தை தர தயாரிப்பாளர்களும் தயாராக இருப்பதாக பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். 

    பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்து இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். சமீபத்தில் இருவரும் இந்தியா வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Bharat #PriyankaChopra 

    ×