search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashes series"

    • இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்காக அபாரமாக ஆடிய ஹாரி புரூக் 75 ரன்கள் குவித்தார்.
    • அவருக்கு அடுத்த இடத்தில் காலின் டி கிராண்ஹோம் (1140 பந்து), டிம் சவுதி (1167 பந்து), பென் டக்கட் (1168 பந்து) ஆகியோர் உள்ளனர்.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்று நடப்பு ஆஷஸ் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்காக அபாரமாக ஆடிய ஹாரி புரூக் 75 ரன்கள் குவித்தார். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன ஹாரி புரூக் இந்த ஆட்டத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். இந்த ஆட்டத்தின் 75 ரன்கள் அடித்த அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை ஹாரி புரூக் படைத்துள்ளார். அவர் 1058 பந்துகளை எதிர்கொண்டு 1000 ரன்களை கடந்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் காலின் டி கிராண்ஹோம் (1140 பந்து), டிம் சவுதி (1167 பந்து), பென் டக்கட் (1168 பந்து) ஆகியோர் உள்ளனர்.

    • இங்கிலாந்து வெற்றிபெற 251 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
    • ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி அரை சதமடிக்க இங்கிலாந்து 254 ரன்கள் எடுத்து வென்றது.

    லண்டன்:

    ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 118 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி 80 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    26 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டிராவிஸ் ஹெட் 77 ரன்னும், கவாஜா 43 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டும், மார்க் வுட், மொயீன் அலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்தது

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது பென் டக்கெட் 23 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மொயீன் அலி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய சாக் கிராலி 44 ரன்னில் வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து ஜோ ரூட் 21 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஹாரி புரூக் அரை சதமடித்து ஆறுதல் அளித்தார். 75 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இறுதியில், இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 254 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கிறிஸ் வோக்ஸ் 32 ரன்னும், மார்க் வுட் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தற்போது ஆஷஸ் தொடரில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.

    • 2-வது நாள் ஆட்டத்தில் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
    • 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

    ஆஷஸ் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 19 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து, 2-வது நாள் ஆட்டத்தில் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    பென் ஸ்டோக்ஸ் மட்டுமே நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 26 ரன்கள் முன்னிலையுடன் 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதனால், 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்தது.

    இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 224 ரன்கள் தேவைப்படுகிறது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், இந்த இலக்கை அடைந்து இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    • முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது.
    • இங்கிலாந்தைவிட ஆஸ்திரேலியா அணி 142 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    ஆஷஸ் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 118 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 19 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    பென் ஸ்டோக்ஸ் மட்டுமே நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரை சதம் விளாசினார்.

    9 விக்கெட்டுகளை இழந்ததால் அதிரடியாக விளையாடிய ஸ்டோக்ஸ் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 26 ரன்கள் முன்னிலையுடன் 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கியது.

    முதலாவதாக களமிறங்கிய உஸ்மான் கவாஜா 43 ரன்களிலும், டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும் அவுட்டானார்கள். தொடர்ந்து மார்னஸ் 33 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம், இங்கிலாந்தைவிட ஆஸ்திரேலியா அணி 142 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    • ஆஸ்திரேலிய அணி 26 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
    • அதிரடியாக விளையாடிய ஸ்டோக்ஸ் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    ஆஷஸ் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 118 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 19 ஓவர்களுக்கு 3 விக்கெட்ட இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பென் ஸ்டோக்ஸ் மட்டுமே நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரை சதம் விளாசினார். 9 விக்கெட்டுகளை இழந்ததால் அதிரடியாக விளையாடிய ஸ்டோக்ஸ் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 26 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஹெட்டிங்லே:

    ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா களமிறங்கினர். டேவிட் வார்னர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். கவாஜா 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த லபுசென் 21 ரன்னிலும், ஸ்மித் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.

    5வது விக்கெட்டுக்கு இணைந்த டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஜோடி நிதானமாக ஆடி 155 ரன்களை சேர்த்தது. மார்ஷ் சதமடித்தார்.

    தேநீர் இடைவேளைக்கு பிறகு மிட்செல் மார்ஷ் 118 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 39 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.

    • ஹெட் 10 ரன்னிலும் மிட்செல் மார்ஷ் 5 ரன்னிலும் ஆடி வருகின்றனர்.
    • இங்கிலாந்து தரப்பில் பிராட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஹெட்டிங்லே:

    ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்- கவாஜா களமிறங்கினர். முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டிய வார்னர் 5-வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசென் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.

    கவாஜா 13 ரன்னில் அவுட் ஆனார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே லபுசென் 21 ரன்னிலும் அடுத்து வந்த ஸ்மித் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



    இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ஹெட் 10 ரன்னிலும் மிட்செல் மார்ஷ் 5 ரன்னிலும் ஆடி வருகின்றனர். இங்கிலாந்து தரப்பில் பிராட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதல் ஓவரின் முதல் பந்தில் டேவிட் வார்னர் பவுண்டரி விளாசினார்.

    ஹெட்டிங்லே:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காம் மற்றும் லண்டன் லார்ட்சில் நடந்த முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


    அதன்படி ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்- கவாஜா களமிறங்கினர். முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டிய வார்னர் 5-வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    • ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 4-வது இடத்தில் உள்ளார்.
    • இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 32 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

    ஹெட்டிங்லி:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை படைத்துள்ளார். அவர் இன்று தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். கடந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்து அசத்தினார்.

    34 வயதான ஸ்மித், கடந்த 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை மொத்தம் 99 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 9,113 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 239 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 4-வது இடத்தில் உள்ளார். 

    • ஓலி போப், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஷ் டங்கு ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
    • ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    லீட்ஸ்:

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை ( 6-ந் தேதி) தொடங்குகிறது.

    இந்நிலையில் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அந்த அணியில் காயம் அடைந்த ஓலி போப் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஷ் டங்கு ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக மொயீன் அலி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:-

    ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், ஹாரி புரூக், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுர், ஓலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட்.

    • கடந்த டெஸ்டில் பேர்ஸ்டோ அவுட் விவகாரம் இங்கிலாந்து அணியை கடுமையாக பாதித்து இருக்கும்.
    • இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லீட்ஸ்:

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட்ஸ் அந்த அணி மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் 43 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை ( 6-ந் தேதி) தொடங்குகிறது.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் தொடரை இழந்துவிடும். இதனால் வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.

    கடந்த டெஸ்டில் பேர்ஸ்டோ அவுட் விவகாரம் அந்த அணியை கடுமையாக பாதித்து இருக்கும். 2 டெஸ்டிலும் இங்கிலாந்து போராடியே தோற்றது. இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது.

    ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 1 சதம், 2 அரைசதத்துடன் 300 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல டீவன் சுமித், டிரெவிஸ் ஹெட், கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட், ஸ்டார்க் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    • முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னைலையில் உள்ளது.
    • கடந்த டெஸ்ட் போட்டியில் காயமடைந்த நாதன் லயன் இடம் பெறவில்லை.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னைலையில் உள்ளது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் எஞ்சிய 3 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    அந்த அணியில் கடந்த டெஸ்ட் போட்டியில் காயமடைந்த நாதன் லயன் இடம் பெறவில்லை.

    ஆஸ்திரேலிய அணி விவரம்:-

    பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலந்த், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மைக்கேல் நசீர், ஜிம்மி பெய்ர்சன் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

    ×