search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andre russell"

    துபாயில் நடத்தப்பட இருக்கும் 10 ஓவர் லீக் தொடரில் ரஷித் கான், அந்த்ரே ரஸல், மெக்கல்லம் போன்ற முன்னணி வீரர்கள் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர். #RashidKhan
    சர்வதேச அளவில் பல்வேறு டி20 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக துபாயில் கடந்த ஆண்டு 10 ஓவர் லீக் தொடர் (டி20) நடைபெற்றது. இதில் நான்கு அணிகள் கலந்து கொண்டது. இந்த ஆண்டும் 10 ஓவர் லீக் தொடர் வருகிற டிசம்பர் மாதம் நடத்தப்பட இருக்கிறது.

    இதில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களான ரஷித் கான், அந்த்ரே ரஸில் பங்கேற்கிறார்கள்.



    ரஷித்கான் மாரத்தா அரேபியன்ஸ் அணியில் இணைந்துள்ளார். முஜீப் உர் ரஹ்மானை பெங்கால் டைகர்ஸ் அணி எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது ஷேசாத்தை புதிய அணியான கிறிஸ்டெனட் ராஜ்புத்ஸ் அணியும், அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங்கை கேரளா கிங்ஸ் அணியும் ஏலம் எடுத்துள்ளது.

    பஞ்சாபி லிஜெண்ட்ஸ் சோயிப் மாலிக்கை தக்கவைத்துள்ளது. ஷாகித் அப்ரிடியை பாக்த்டூன்ஸ் எடுத்துள்ளது. இங்கிலாந்து கேப்டன் மோர்கனை கேரளா கிங்ஸ் அணியும், வெஸ்ட் இண்டீசின் டேரன் சமியை நார்தன் வாரியர்ஸ் அணியும் எடுத்துள்ளது. ஷேன் வாட்சனை கராச்சியன்ஸ் அணி எடுத்துள்ளது. மற்ற வீரர்களுக்கான ஏலம் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னனான அந்த்ரே ரஸல் ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #CPL #AndreRussell
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அந்த்ரே ரஸல். இவர் உலகளவில் நடைபெறும் முன்னணி டி20 லீக்குகளான ஐபிஎல், சிபில், பிக்பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்காள தேச பிரீமியர் லீக்கில் விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனைக்கு தன்னை உட்படுத்தாததால் ஓராண்டு தடைபெற்றார். அதன்பின் சமீபத்தில் நடைபெற்று முடிந்து ஐபிஎல் தொடரில் விளையாடினார்.

    விரைவில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் இடம்பித்துள்ள ஜமைக்கா தல்லாவாஸ் அணி அவரை கேப்டனாக நியமித்துள்ளார்.

    இதுகுறித்து அந்த்ரே ரஸல் கூறுகையில் ‘‘ஒரு வருடம் தடைக்குப்பின் மீண்டும் களத்திற்கு திரும்பிய பிறகு, கேப்டன் பதவி கிடைத்திருப்பது சிறந்த உணர்வாக உள்ளது. ஒரு வீரராக மட்டுமல்ல, ஜமைக்கா தல்லாவாஸ் கேப்டனாக தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.



    நாங்கள் சிறந்த பேலன்ஸ் கொண்ட அணியை பெற்றுள்ளோம். வெறும் பெயரை மட்டும் வைத்து அணியில்லை. எப்படி விளையாடுகிறார்கள். விரைவாக ஆட்டத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பதை பொறுத்துதான் அணி. நாங்கள் ஏராளமான ஆல்ரவுண்டர்களை பெற்றுள்ளோம் என்பதை உறுதியாக நம்புகிறேன். எங்கள் அணியில் இடம்பிடித்துள்ள 8 வீரர்களால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட முடியும்’’ என்றார்.
    இந்தூரில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடித்த 246 ரன் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. #IPL2018 #KXIPvKKR
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 44-வது ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுனில் நரைன் (75), தினேஷ் கார்த்திக் (50), அந்த்ரே ரஸல் (31) ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.

    பின்னர் 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    கேஎல் ராகுல் வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, கிறிஸ் கெய்ல் திணறினார். பஞ்சாப் அணியின் ஸ்கோர் 5.4 ஓவரில் 57 ரன்னாக இருக்கும்போது கெய்ல் 21 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தடைபோட்டார் அந்த்ரே ரஸல்.



    மறுமுனையில் நம்பிக்கையுடன் விளையாடிய கேஎல் ராகுல் 29 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கருண் நாயர் 3 ரன்னிலம், அக்சார் பட்டேல் 19 ரன்னிலும், பிஞ்ச் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



    7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் - அன்ட்ரிவ் டை பஞ்சாப் அணியின் ஸ்கோரை 200 ரன்னைத் தாண்டி இழுத்துச் சென்றனர். கடைசி ஓவரில் டை (14), அஸ்வின் (45) ஆட்டமிழக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 214 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ×