search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KXIPvKKR"

    இந்தூரில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடித்த 246 ரன் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. #IPL2018 #KXIPvKKR
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 44-வது ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுனில் நரைன் (75), தினேஷ் கார்த்திக் (50), அந்த்ரே ரஸல் (31) ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.

    பின்னர் 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    கேஎல் ராகுல் வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, கிறிஸ் கெய்ல் திணறினார். பஞ்சாப் அணியின் ஸ்கோர் 5.4 ஓவரில் 57 ரன்னாக இருக்கும்போது கெய்ல் 21 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தடைபோட்டார் அந்த்ரே ரஸல்.



    மறுமுனையில் நம்பிக்கையுடன் விளையாடிய கேஎல் ராகுல் 29 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கருண் நாயர் 3 ரன்னிலம், அக்சார் பட்டேல் 19 ரன்னிலும், பிஞ்ச் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



    7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் - அன்ட்ரிவ் டை பஞ்சாப் அணியின் ஸ்கோரை 200 ரன்னைத் தாண்டி இழுத்துச் சென்றனர். கடைசி ஓவரில் டை (14), அஸ்வின் (45) ஆட்டமிழக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 214 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    சுனில் நரைன், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடியால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 246 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். #IPL2018 #KXIPvKKR
    ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் இந்தூரில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த சில போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு கிடைக்காத சுனில் நரைன் இந்த போட்டியை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

    கிறிஸ் லின் 27 ரன்கள் எடுத்த போதிலும், சுனில் நரைன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 26 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 36 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 75 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய உத்தப்பா 17 பந்தில் 24 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11.5 ஓவரில் 129 ரன்கள் குவித்திருந்தது.



    அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் அந்த்ரே ரஸல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்தை துவம்சம் செய்தது. பந்து சிக்சருக்கும் பவுண்டரிக்கும் என பறந்தது. இதனால் 16.3 ஓவரிலேயே கொல்கத்தா 200 ரன்னைத் தொட்டது. 17-வது ஓவரின் கடைசி பந்தில் ரஸல் ஆட்டமிழந்தார். அவர் 14 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 31 ரன்கள் அடித்தார்.

    தினேஷ் கார்த்திக் - ரஸல் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 31 பந்தில் 76 ரன்கள் குவித்தது. 5-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். ராணா 4 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 22 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த அவர் கடைசி ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த இரண்டு பந்தை ஷுப்மான் கில் பவுண்டரிக்கு விரட்ட, கடைசி பந்தை சியர்லெஸ் சிக்சருக்கு தூக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது. ஷுப்மான் கில் 16 ரன்னுடனும், சியர்லெஸ் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் அன்ட்ரிவ் டை 4 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
    இந்தூரில் மாலை 4 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #KXIPvKKR
    ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் இந்தூரில் மாலை நான்கு மணிக்கு தொடங்குகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்னாக டாஸ் சுண்டப்பட்டதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கிறிஸ் லின், 2 சுனில் நரைன், 3. ராபின் உத்தப்பா, 4. ஷுப்மான் கில், 5. நிதிஷ் ராணா, 6. தினேஷ் கார்த்திக், 7. அந்த்ரே ரஸல், 8. ஜவோன் சீர்லெஸ், 9. பியூஸ் சாவ்லா, 10. பிரசித் கிருஷ்ணா, 11. குல்தீப் யாதவ்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கிறிஸ் கெய்ல், 2. கேஎல் ராகுல், 3. மயாங்க் அகர்வால், 4. ஆரோன் பிஞ்ச், 5. கருண் நாயர், 6. அக்சார் பட்டேல், 7. அஸ்வின், 8. அன்ட்ரிவ் டை, 9. மோகித் ஷர்மா, 10. பரிந்தர் ஸ்ரன், 11 முஜீப் உர் ரஹ்மான்.
    ×