search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப்-க்கு 246 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
    X

    ஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப்-க்கு 246 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா

    சுனில் நரைன், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடியால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 246 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். #IPL2018 #KXIPvKKR
    ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் இந்தூரில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த சில போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு கிடைக்காத சுனில் நரைன் இந்த போட்டியை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

    கிறிஸ் லின் 27 ரன்கள் எடுத்த போதிலும், சுனில் நரைன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 26 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 36 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 75 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய உத்தப்பா 17 பந்தில் 24 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11.5 ஓவரில் 129 ரன்கள் குவித்திருந்தது.



    அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் அந்த்ரே ரஸல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்தை துவம்சம் செய்தது. பந்து சிக்சருக்கும் பவுண்டரிக்கும் என பறந்தது. இதனால் 16.3 ஓவரிலேயே கொல்கத்தா 200 ரன்னைத் தொட்டது. 17-வது ஓவரின் கடைசி பந்தில் ரஸல் ஆட்டமிழந்தார். அவர் 14 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 31 ரன்கள் அடித்தார்.

    தினேஷ் கார்த்திக் - ரஸல் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 31 பந்தில் 76 ரன்கள் குவித்தது. 5-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். ராணா 4 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 22 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த அவர் கடைசி ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த இரண்டு பந்தை ஷுப்மான் கில் பவுண்டரிக்கு விரட்ட, கடைசி பந்தை சியர்லெஸ் சிக்சருக்கு தூக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது. ஷுப்மான் கில் 16 ரன்னுடனும், சியர்லெஸ் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் அன்ட்ரிவ் டை 4 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
    Next Story
    ×