search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amarnath yatra"

    ஜம்முவில் மழையுடன் மோசமான வானிலை நிலவுவதால் பகவதிநகர் முகாமில் இருந்து புறப்பட்டு செல்லும் அமர்நாத் யாத்திரை தொடர்ந்து இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. #AmarnathYatra
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.

    இதுவரை 2 லட்சத்து 79 ஆயிரத்து 535 யாத்திரீகர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். மேலும் பலர் தரிசனத்துக்காக ஜம்மு மாவட்டத்தில் உள்ள பகவதிநகர் மலையடிவார முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஜம்மு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைப்பொழிவு உள்ளதால் யாத்திரை பாதையில் உள்ள நெடுஞ்சாலை மூடப்பட்டது.

    பகவதிநகர் மலையடிவார முகாமில் இருந்து நேற்று யாத்ரீகர்கள் புறப்பட்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இன்றும் மோசமான வானிலை நிலவுவதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. #AmarnathYatra #AmarnathYatrasuspended  #Yatrasuspended  
    அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றியுள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக இன்று 223 யாத்ரீகர்கள் ஜம்முவில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். #Amarnathyatra
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். ஜூன் மாதம் 28-ம் தேதி துவங்கிய இந்த யாத்திரை ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நடைபெறும்.

    யாத்திரை துவங்கிய முதல் நாளில் 2 ஆயிரத்து 280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர். பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து இந்த யாத்திரை தொடங்கும்.

    இந்நிலையில், இன்று 223 யாத்ரீகர்கள் தங்கள் புனிதப்பயணத்தை துவங்கியுள்ளனர். 11 வாகனங்களில் தங்களது பயணத்தை துவக்கிய யாத்ரீகர்கள் இன்று மாலைக்குள் பல்தல் மற்றும் பாகல்காம் அடிவார முகாம்களை சென்றடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    அமர்நாத் யாத்திரைக்கான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. இந்த யாத்திரையின் மூலம் இதுவரை 2 லட்சத்து 78 ஆயிரத்து 72 பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். #Amarnathyatra
    ஜம்முவில் பிரிவினைவாதிகள் இருநாள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் இன்றும் நாளையும் அமர்நாத் யாத்திரை 2 நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.

    இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். மேலும் பலர் தரிசனத்துக்காக ஜம்மு மாவட்ட மலையடிவார முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில், காஷ்மீரில் வாழும் மக்களின் நிரந்தர குடியுரிமையை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு சட்டம் 35A தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறவுள்ளது.

    இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜம்முவில் உள்ள பிரிவினைவாத இயக்க தலைவர்கள் இன்றும் நாளையும் இருநாள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    இதைதொடர்ந்து, அசம்பாவித சம்பங்கள் நிகழாமல் தடுக்கும் வகையிலும் தற்காப்பு நடவடிக்கையாகவும் ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரீகர்கள் இன்றும் நாளையும் புறப்பட்டு செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. #AmarnathYatra #AmarnathYatrasuspended
    இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை காலத்தில் பனி லிங்கத்தை தரிசித்தவர்கள் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்தது. #Amarnathyatra
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.

    மழையினால் சில நாட்கள் தடைபட்ட யாத்திரை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு யாத்திரை காலத்தின் 30 நாளான இன்று 2,776 யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசினம் செய்தனர்.

    இவர்களுடன் சேர்த்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 996 பக்தர்கள் இதுவரை பனி லிங்கத்தை தரிசித்துள்ளதாக  அமர்நாத் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Amarnathyatra
    அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த ஆண்டின் யாத்திரை காலத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. #AmarnathYatra
    ஸ்ரீநகர் : 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். 

    60 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை அமர்நாத் பனி லிங்கத்தை 2 லட்சத்து 46 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயிரத்து 502 பேர் அமர்நாத் கோவிலில் தரிசனம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், ராஜா என்னும் பக்தர் பல்தால் அடிவார முகாமில் காத்திருந்தபோது உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமர்நாத் யாத்திரையின்போது உடல்நலக் குறைவு, விபத்து மற்றும் நிலச்சரிவு போன்றவைகளால் இதுவரை 36 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #AmarnathYatra
    அமர்நாத் யாத்திரை சென்ற பீகாரை சேர்ந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த ஆண்டின் யாத்திரை காலத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. #AmarnathYatra
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.

    இதற்கிடையில், சாலை விபத்து மற்றும் மாரடைப்பு காரணமாக சில பக்தர்களும் அவர்களுக்கு உதவியாக இருந்த சேவகர்களும் இந்த ஆண்டு யாத்திரை காலத்தில் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், பீகாரை சேர்ந்த ராதா என்னும் 67 வயது பெண்மணி யாத்திரை மேற்கொள்வதற்காக பல்தால் அடிவார முகாமில் காத்திருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இவருடன் சேர்த்து இந்த ஆண்டின் யாத்திரை காலத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. #AmarnathYatra
    டெல்லியில் இருந்து அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர் மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த ஆண்டின் யாத்திரை காலத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. #AmarnathYatra
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.

     இன்று அதிகாலை பகவதி நகர் மலையடிவார முகாமில் இருந்து 1,202 யாத்ரிகர்கள் அடங்கிய 23-வது குழு 42 வாகனங்களில்புறப்பட்டு சென்றது.

    இதற்கிடையில், சாலை விபத்து மற்றும் மாரடைப்பு காரணமாக சில பக்தர்களும் அவர்களுக்கு உதவியாக இருந்த சேவகர்களும் இந்த ஆண்டு யாத்திரை காலத்தில் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், டெல்லியை சேர்ந்த ரமேஷ் சந்த் என்னும் 70 வயது பக்தருக்கு ஆலயத்துக்கு செல்லும் வழியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உயிர் வரும் வழியிலேயே பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இவருடன் சேர்த்து இந்த ஆண்டின் யாத்திரை காலத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. #AmarnathYatra

    அமர்நாத் ஆலயத்தின் இந்த ஆண்டு யாத்திரை காலத்தில் இதுவரை சுமார் 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. #AmaranthYatra #Amaranthpilgrimdies
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.

    பகவதி நகர் மலையடிவார முகாமில் இருந்து 1,983 யாத்ரிகர்கள் அடங்கிய 18-வது குழு 59 வாகனங்களில் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றது.

    இதற்கிடையில், சாலை விபத்து மற்றும் மாரடைப்பு காரணமாக சில பக்தர்கள் இந்த ஆண்டு யாத்திரை காலத்தில் உயிரிழந்துள்ளனர்.

    சரஸ்வதி தாம் ரெயில் நிலையம் அருகே கடந்த 15-ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காயா பாய் கைலே(61) என்ற பெண் பக்தர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதன்விளைவாக, இந்த ஆண்டு யாத்திரை காலத்தில் இதுவரை சுமார் 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.  #AmaranthYatra #Amaranthpilgrimdies #Amaranth18thbatch  

    அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #amarnathyatra
    ஸ்ரீநகர் :

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். 60 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாண்ட்லிக் பாண்டுராஜ் என்பவர் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்கத்தை தரித்த சில நிமிடங்களுக்கு பிறகு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவரை அங்குள்ள மருத்துவ முகாமுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன்மூலம், அமர்நாத் யாத்திரையின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. #amarnathyatra
    அமர்நாத் குகை கோவிலில் உள்ள பனி லிங்கத்தை இதுவரை ஒரு லட்சத்து 76 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில் 2 ஆயிரத்து 922 பேரை உள்ளடக்கிய அடுத்த யாத்ரிகர்கள் குழு இன்று அமர்நாத் புறப்பட்டு சென்றது. #Amarnathyatra
    ஸ்ரீநகர் :

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள்.

    60 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை அமர்நாத் பனி லிங்கத்தை ஒரு லட்சத்து 76 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 ஆயிரத்து 200 பேர் அமர்நாத் கோவிலில் தரிசனம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், பெண்கள், குழந்தைகள் உள்பட 2 ஆயிரத்து 922 பேர் அடங்கிய அடுத்த யாத்ரிகர்கள் குழு பல்தால் மற்றும் பாகல்கம் முகாம்களில் இருந்து  இன்று அதிகாலை அமர்நாத் புறப்பட்டு சென்றனர்.

    அமர்நாத் யாத்திரையின்போது உடல்நலக் குறைவு, விபத்து மற்றும் நிலச்சரிவு போன்றவைகளால் இதுவரை 22 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Amarnathyatra
    அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மூன்று பேர் இன்று உயிரிழந்ததால் இந்த ஆண்டு ஆமர்நாத் யாத்திரை காலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. #amarnathyatra
    ஸ்ரீநகர் :

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். 60 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க கோட்டேஷ்வரா அமர்நாத் கோவிலில் மாரடைப்பினாலும் மகிந்தர் பால் எனும் பக்தர் யாத்திரை செல்லும் வழியிலும் இன்று உயிரிழந்தனர்.

    மேலும், யாத்ரிகர்கள் சென்ற வாகனம் ஒன்று எதிரே வந்த பள்ளி பேருந்தின் மீது மோதிய விபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த சவிதா எனும் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்மூலம், அமர்நாத் யாத்திரையின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. #amarnathyatra
    வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமர்நாத் யாத்திரையை ஒத்தி வைக்கும்படி பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். #AmarnathYatra #SriSriRavishankar
    பெங்களூரு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். 60 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அமர்நாத் புனித யாத்திரையில் நேற்று வரை சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் என அமர்நாத் புனித யாத்திரை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அம்ர்நாத் புனித யாத்திரை அமைப்பின் உறுப்பினரும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமர்நாத் யாத்திரையை ஒத்தி வைக்கும்படி பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இங்கு நிலவும் மழை மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் தங்கள் யாத்திரை ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    அமர்நாத் யாத்திரை ரக்ஷா பந்தன் தினமான ஆகஸ்ட் 26-ம் தேதி நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #AmarnathYatra #SriSriRavishankar
    ×