search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alumni meet"

    • 150-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
    • தலைமையாசிரியருக்கு நினைவு பரிசு வழங்கினர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மின்னல் ஊராட்சியில் 1951-ம் ஆண்டு கட்டப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    கடந்த 1984-85ம் ஆண்டில் 10 ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் 37 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் அப்பள்ளியில் படித்த 150-க்கும் மேற்பட்டவர்கள் இன்று அரசு மற்றும் பல்வேறு தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள் சுயதொழில் புரிபவர்கள் என பலரும் சந்தித்து பள்ளி கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

    பலரும் தங்களது நண்பர்களுடன் செல்பி எடுத்தும் குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்தனர். முன்னதாக காலையில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளி காலத்தில் தங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர், ஆசிரியைகள் பள்ளி தலைமை யாசிரியருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதனை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தொடங்கிவைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 1994-97-ம் ஆண்டில் வனிகவியல்துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்தில் 300 மரக்கன்றுகளை நட்டனர். இதனை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தொடங்கிவைத்தார்.

    முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டதுடன் பேராசிரியர்களின் கல்லூரிக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றவும் உறுதி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் பி.ஜி. குரூப் ஆப் சிங்கப்பூர், ஜே.பி.குரூப் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பாலமுருகன், ஆசிரியர் பாண்டியராஜன், நடேஷ், ராமசந்திரன், ராஜசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்தித்து பள்ளி அனுபவங்களையும், குடும்ப வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
    • இந்த நிகழ்வில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி தற்போது சிவகங்கை வட்டாட்சியராகவும், திருச்சியில் மருத்துவராக உள்ள சுஜா ஜெயமலர் உள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1982-89 வரை மாணவிகளாக படித்தவர்கள் ஒன்று கூடினர். இதை கொண்டாடும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பள்ளி அனுபவங்களையும், குடும்ப வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

    இதில் பலர் அரசு அதிகாரிகளாகவும், மருத்துவர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிகழ்வை பள்ளியில் படித்த முன்னாள் மாணவியும் தற்போது சிவகங்கை வட்டாட்சியராகவும் உள்ள ஜெயந்தி, திருச்சியில் மருத்துவராக உள்ள சுஜா ஜெயமலர், மதுரை ரெய்சல் செல்வி, குழந்தைராணி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

    • முன்னாள் மாணவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் சென்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிகவியல் துறையில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முன்னாள் முதல்வரும், வணிகவியல் துறை முன்னாள் தலைவருமான கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தனசிங் வரவேற்று பேசினார். முன்னாள் துறைத்தலைவர் சவுந்திரராஜன், ஜெயபாஸ்கரன், வக்கீல் கார்மேகம், முன்னாள் அலுவலக கண்காணிப்பாளர் பரமசிவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் மாணவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை சாதிக் தொகுத்து வழங்கினார். டிமிட்ரோ நன்றி கூறினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும், சிவந்தி வானொலி தொழில்நுட்ப அலுவலருமான கண்ணன், ராமச்சந்திரன், சித்திரைகுமார் ஆகியோர் செய்து இருந்தனர். முன்னதாக பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் சென்றனர். அங்குள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களுக்கான சங்கம் செயல்பட்டு வருகிறது.
    • விழாவில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களுக்கான சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் இயக்குநராக பொது மேலாளர் ( நிர்வாகம் ) கிருஷ்ணகுமார் செயல்பட்டு வருகிறார்.

    இந்த சங்கம் கல்லூரியில் பயிலும் இன்னாள் மாணவர்கள் வேலைவாய்ப்பு திறனை அதிகரிப்பதற்காகவும், முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் மூலம் வழிகாட்டுதல், ஆலோசனைகளையும் அளித்து வருகிறது. மேலும், ஆண்டு தோறும் அவர்களை அழைத்து விருதுகளை வழங்கி பாராட்டி வருகிறது.

    இந்த ஆண்டு கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மீண்டும் இணையும் விழா நடைபெற்றது.

    இதில் கணினித்துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன் வரவேற்றார். விழாவுக்கு ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கி விருதுகளை வழங்கி பாராட்டினார். மேலும் 2022-ம் ஆண்டுக்கான அலுமினி இதழையும் அவர் வெளியிட்டார்.

    விழாவில் சிறந்த முன்னாள் மாணவர் தொழில் முனைவோருக்கு விருதுகளை கிளிட்டஸ் பாபு வழங்கி பாராட்டி பேசினார்.

    விழாவில், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வேலைவாய்ப்பு துறை டீன் ஞானசரவணன், லூர்தஸ் ராயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் மாணவர் துர்காசாந்த் நன்றி கூறினார்.

    ஸ்காட் பள்ளிகளின் தாளாளர் தர்ஷினி அருண்பாபு, பயிற்சித்துறை டீன் பாலாஜி, அனைத்து துறை பேராசிரியர்கள், சென்னை அலுமினியம் சங்க செயலாளர் குமாரசாமி, பொருளாளர் அருண் ( மேலாளர், ரொனால்ட் ) மற்றும் ரிசான் கம்யூனிகேஷன் டீம் லீடர், துர்காசாந்த், முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை முன்னாள் எம்.பி.ஏ. மாணவி தீபலெட்சுமி தொகுத்து வழங்கினார்.

    • பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 1997-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களுக்கான வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது.
    • விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    பெருந்துறை:

    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, ஆண்டு தோறும் முன்னாள் மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

    அந்த அடிப்படையில் 1997-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களுக்கான வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் பலர் உலகில் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு உயர் பணிகளில் வேலை செய்து கொண்டி ருக்கின்றனர். அவர்களில் சிலர் அரசு உயர் அதிகாரி களாகவும் இருக்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

    அனைவரும் வேலை வாய்ப்பு, இன்டர்ன்ஷிப் மற்றும் பாடங்களை உருவாக்குதல் போன்ற வற்றில் இந்த கல்லூரிக்கு உதவுவதாக உறுதி அளித்தனர்.

    இந்த சந்திப்பின் முக்கிய நிகழ்வாக கல்வியை மேலும் முன்னேற்று வதற்காகவும், தொழில் நுட்ப தேவையையும், கல்லூரியையும் இணை ப்பதற்கான வழிகளையும் ஆலோசித்தனர். மேலும் இவ்விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் கொங்கு வேளாளர் தொழில்நுட்ப க்கல்வி அறக்கட்டளையின் செயலாளர் பி.சி.பழனிசாமி, கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதா னந்தன், கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஏ.எம்.நடராஜன், முதல்வர் வீ.பாலுசாமி, முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    ×