search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
    X

    எப்.எக்ஸ். கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.


    எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

    • நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களுக்கான சங்கம் செயல்பட்டு வருகிறது.
    • விழாவில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களுக்கான சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் இயக்குநராக பொது மேலாளர் ( நிர்வாகம் ) கிருஷ்ணகுமார் செயல்பட்டு வருகிறார்.

    இந்த சங்கம் கல்லூரியில் பயிலும் இன்னாள் மாணவர்கள் வேலைவாய்ப்பு திறனை அதிகரிப்பதற்காகவும், முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் மூலம் வழிகாட்டுதல், ஆலோசனைகளையும் அளித்து வருகிறது. மேலும், ஆண்டு தோறும் அவர்களை அழைத்து விருதுகளை வழங்கி பாராட்டி வருகிறது.

    இந்த ஆண்டு கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மீண்டும் இணையும் விழா நடைபெற்றது.

    இதில் கணினித்துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன் வரவேற்றார். விழாவுக்கு ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கி விருதுகளை வழங்கி பாராட்டினார். மேலும் 2022-ம் ஆண்டுக்கான அலுமினி இதழையும் அவர் வெளியிட்டார்.

    விழாவில் சிறந்த முன்னாள் மாணவர் தொழில் முனைவோருக்கு விருதுகளை கிளிட்டஸ் பாபு வழங்கி பாராட்டி பேசினார்.

    விழாவில், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வேலைவாய்ப்பு துறை டீன் ஞானசரவணன், லூர்தஸ் ராயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் மாணவர் துர்காசாந்த் நன்றி கூறினார்.

    ஸ்காட் பள்ளிகளின் தாளாளர் தர்ஷினி அருண்பாபு, பயிற்சித்துறை டீன் பாலாஜி, அனைத்து துறை பேராசிரியர்கள், சென்னை அலுமினியம் சங்க செயலாளர் குமாரசாமி, பொருளாளர் அருண் ( மேலாளர், ரொனால்ட் ) மற்றும் ரிசான் கம்யூனிகேஷன் டீம் லீடர், துர்காசாந்த், முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை முன்னாள் எம்.பி.ஏ. மாணவி தீபலெட்சுமி தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×