search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alumni meet"

    • பாகூர், பேராசிரியர் அன்னுசாமி மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
    • 40-திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை பள்ளிக்கு அமைத்துக் கொடுத்து, நன்றியை பள்ளிக்கு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர், பேராசிரியர் அன்னுசாமி மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 1997-ம் ஆண்டு 10 வகுப்பு படித்த மாணவர்கள், 25 வருடங்கள் நிறைவடைந்ததை தனித்து வத்துடன் கொண்டாடினர்.

    40-திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை பள்ளிக்கு அமைத்துக் கொடுத்து, நன்றியை பள்ளிக்கு தெரிவித்தனர்.

    இதில் முன்னாள் மாணவர்கள் கந்தநாதன் , ரங்கநாதன், நித்தியானந்தம், சிவமுருகன், கிரிதரன் , சீனுவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளிக் குழும தலைவர் இருதயமேரி ஆசியுரையாற்றினார். தாளாளர் ராஜராஜன் தலைமை தாங்கி பேசினார். முதல்வர் நீலம் அருள்செல்வி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • ஆசிரியர்களுக்கு மலர்கொத்து வழங்கி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
    • பிரபலமான,கடலை மிட்டாய்,பொறி உருண்டை போன்ற திண்பண்டங்கள் விற்பனை கடை அமைக்கப்பட்டு இருந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1997 - 98ம் ஆண்டில் 12ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்துடன் 25ம் ஆண்டு வெள்ளிவிழா நிறைவில் சந்தித்து கொண்டனர். நிகழ்ச்சியில் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் பாண்டியன், சண்முகம், ஸ்டோன்கார்டு,கந்தசாமி,பழனிசாமி, ராஜரத்தினம், ஹரிகரன், லோகநாயகி, தமயந்தி, கிருஷ்ணவேணி, விஜயலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு மலர்கொத்து வழங்கி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    ஆசிரியர்கள் தங்களது முன்னாள் மாணவர்களை குடும்பத்துடன் அழைத்து நலம் விசாரித்து ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர். விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பையொட்டி 1980,1990ம் ஆண்டில் பிரபலமான,கடலை மிட்டாய்,பொறி உருண்டை போன்ற திண்பண்டங்கள் விற்பனை கடை அமைக்கப்பட்டு இருந்தது.

    • உள்ளாட்சித்துறையில் உழவர்கரை நகராட்சியின் கண்காணிப்புப் பொறி யாளர் பக்கிரிசாமியின் பணிநிறைவு பாராட்டு விழா தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
    • பொறியாளர்கள் கண்ணன் , சின்ன கண்ணன், அருளரசன் , மகேஷ் , பாலாஜி,வைத்தியநாதன், ரவிச்சந்திரன், துள சிங்கம்,உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர்.

    புதுச்சேரி:

    உள்ளாட்சித்துறையில் உழவர்கரை நகராட்சியின் கண்காணிப்புப் பொறி யாளர் பக்கிரிசாமியின் பணிநிறைவு பாராட்டு விழா தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    மோதிலால்நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1985-ம் ஆண்டுக் கட்டிடவியல் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் செயற்பொறியாளர் சுந்தர மூர்த்தி தலைமை வகித்தார். உதவிப்பொறியாளர்கள் கெஜலட்சுமி , விக்டோரியா, சரசு, பிரமகுமாரி, சித்ரா முன்னிலை வகித்தனர்.

    பொறியாளர்கள் கண்ணன் , சின்ன கண்ணன், அருளரசன் , மகேஷ் , பாலாஜி,வைத்தியநாதன், ரவிச்சந்திரன், துள சிங்கம்,உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். என்ஜினீயர் சிதம்பரநாதன் சிறப்புரை வழங்கினார். என்ஜினீயர் தேவதாசு நினைவு பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் 1985-ம் ஆண்டு கட்டிடவியல் மாணவர்கள் ராம்மூர்த்தி, கஜேந்திரன், விஜயகுமார், சிவகுரு, குமாரராஜா, ரமேஷ், துரை, கலைவாணி கீதா, சுசிலா, மாலா, வள்ளியம்மை, அமுதா, இளநிலைக்கணக்கு அதிகாரி சாய்நாதன், சமூக செயற்பாட்டாளர் சக்திவேல், வக்கீல் லோக கணேஷ், என்ஜினீயர் ஞான சேகரன் உட்பட கலந்துகொண்டனர்.

    முடிவில் பணிநிறைவுபெறும் பக்கிரிசாமி ஏற்புரை வழங்கினார். என்ஜினீயர் மாலைமணி நன்றி கூறினார்.

    • மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரியில்
    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் 1991-94ம் ஆண்டு இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் ம.செல்வராசு தலைமை வகித்தார். பேராசிரியர் வே.அ.பழனியப்பன் வரவேற்றார். ஒய்வு பெற்ற பேராசிரியர்கள் திருமா.பூங்குன்றன், ராமாயி, அரங்கநாதன், ரோஸ்லெட், விஜயரகுநாதன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். விழாவில் 1991-1994ல் பயின்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழாசிரியர்களாக பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரிக்கால அனுபவங்களை, நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து முன்னாள் மாணவ, மாணவிரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவினை முன்னாள் மாணவர் தமிழாசிரியர் சி.எஸ்.முருகேசன் ஒருங்கிணைத்தார். தமிழாசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார். முன்னதாக முன்னாள் மாணவ, மாணவியர்கள் தங்களது வாழ்வில் கல்வி ஒளியேற்றிய ஒய்வு பெற்ற பேராசிரியர்களை பூரண கும்ப மரியாதையுடன் மாலை அணிவித்து வரவேற்றனர்.


    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
    • பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், "ஏ.கே.சி.இ.-கே.எல்.யூ. முன்னாள் மாணவர் சங்கம்'' சார்பில் முன்னாள் மாணவர் சந்திப்பு விழா, பல்கலைக்கழக துணைத்தலைவர் எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் தலைமையில் நடந்தது. பதிவாளர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். சங்கதலைவர், பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர், குடும்பத்தினரோடு கலந்து கொண்டு பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிப்பார்த்து பேராசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகளுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    அவர்களை இன்னாள் மாணவர்கள் இன்னிசை மழையில் வரவேற்றனர். பேராசிரியர்கள் முத்துக்கண்ணன், கைலாசம், பாலமுருகன், கார்த்திகாதேவி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பேராசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.

    • புதுவை பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுக்கு முன் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் சிவராஜ் சீருடை தயார் செய்து வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுக்கு முன் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. இதில் 2-வது பேச் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நோணாங்குப்பத்தில் உள்ள ஒரு ஓட்டலில் உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட உடற்கல்வி பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் வைத்தியநாதன், புதுவை பல்கலைக் கழக உடற்கல்வி துறை பேராசிரியர்கள் சக்திஞானவேல், சுல்தானா, வசந்தி, சந்திரசேகரன் ஆகியோரை சீனியர் ஹாக்கி பயிற்சியாளர் மூர்த்தி வரவேற்றார்.

    இந்த சந்திப்பு நிகழ்ச்சியை டாக்டர் பழனி தொகுத்து வழங்கினார். துணை இயக்குனர் (விளையாட்டுதுறை) சிவகுமார் சிறப்பு ரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் சிவராஜ் சீருடை தயார் செய்து வழங்கினார்.

    இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நகைச்சுவை பேச்சுகளாலும் கலை நிகழ்ச்சிகளாலும் ஒவ்வொருவரும் தனது கருத்துகளை பரிமாற்றம் செய்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி விரிவுரையாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களான அமல்ராஜ் ஜார்ஜ், பெருமாள் சீனுவாசன், ஜவஹர் பத்மநாபன், திமோத், பிரகாஷ், ரஷித் அகமது, மணி, நாராயணசாமி மற்றும் வக்கீல் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    முடிவில் சிவகுமார் (பிரான்ஸ்) நன்றி கூறினார்.

    • மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி 1998-ம் ஆண்டுப தொடங்கப்பட்டு 25-ம் ஆண்டை நோக்கி வெள்ளிவிழா கொண்டாட்டங்களுக்கு தயாராகிவருகிறது.
    • இந்நிகழ்ச்சிக்கு மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 25-ம் ஆண்டை நோக்கி வெள்ளிவிழா கொண்டாட்டங்களுக்கு தயாராகிவருகிறது.

    இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரானா கட்டுபாடுகள் காரணமாக கொண்டாடப்படாத நிலையில் தற்போது 2022-ம் ஆண்டிற்கான முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் கல்விக்குழுமத்தின் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களிடம் இதுபோன்ற சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து வாழ்க்கையில் எவ்வாறு நலமுடன் முன்னேறுவது குறித்தும் நகைச்சுவை உணர்வோடு அவரது இயல்பான பாணியில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வண்ணம் பேசினார்.

    இதில் 400-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரேம் சுந்தர் அனைத்து துறை ஒருங்கிணைப்பாளர்க–ளுடன் இணைந்து செய்திருந்தார்.

    • 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
    • மரக்கன்றுகள் நட்டனர்

    திருப்பத்தூர்:

    கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த 1960ம்ஆண்டு முதல் 2022 ம்ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

    பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒரே நேரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சந்தித்துக் கொண்டனர் பின்னர் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து மகிழ்ந்தனர், பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தற்போது உள்ள ஆசிரியர்களை சந்தித்து ஆசி பெற்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ..எஸ். கோவிந்தன் வரவேற்றார்.

    பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீ ராமுலு தலைமை வகித்தார், நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் தேவராஜ், நல்லதம்பி, மதியழகன், முன்னாள் எம்பி பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், உள்படை ஏராளமான கலந்து கொண்டு பேசினார்கள் பள்ளியில் படித்து தற்போது அரசு உயர் பதவிகள் மற்றும் தொழிலதிபர்களாக உள்ளவர்கள் தங்கள் செய்கின்ற பணிகள் குறித்து தெரிவித்து மகிழ்ந்தனர், பள்ளியில் மறைந்த முதல் தலைமை ஆசிரியர் கே.ராமமூர்த்தி, படத்தினை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியினை பெற்றோர்ஆசிரியர் சங்க செயற்குழு உறுப்பினர் எம் தேவராஜ், கணினி ஆசிரியர் டி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார்கள் அனைவருக்கும் பொன்னா டை போர்த்தினார்கள் பின்னர் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டும் பள்ளி மேம்பாட்டிற்கு பண உதவி மற்றும் ஆலோசனை களை வழங்கினார்.

    பின்னர் முன்னாள் மாணவர்களுக்கான சங்க தலைவர் மற்றும் நிர்வாகி களை தேர்ந்தெடுத்தனர் பின்னர் பழைய மாணவ மாணவிகள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தற்போதைய ஆசிரியர்கள் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1987-89ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
    • மாணவர்கள் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.

    உடுமலை :

    உடுமலை திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 1987-89ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் உடுமலை தனியார் அரங்கில் நடந்தது.

    முன்னாள் ஆசிரியர் பயிற்சி மாணவர் தலைவர் பூபதி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சின்னப்பராஜ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் வரவேற்றார்.பலரும் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் நிலையில் தங்களின் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து நல்லாசிரியர் விருது பெற்ற வீராசாமியை அனைவரும் வாழ்த்தினர். துணை ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.

    • 1972-ம் ஆண்டு படித்த மாணவர்கள் இன்று மருத்துவக்கல்லூரியில் மீண்டும் சந்தித்தனர்.
    • சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் குமாரதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    நெல்லை:

    நெல்லை மருத்துவக் கல்லூரியில் 1972-ம் ஆண்டு படித்த நெல்லை மாணவர்கள் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று மருத்துவக்கல்லூரியில் மீண்டும் சந்தித்தனர்.

    கல்லூரி அரங்கில் மாணவர்கள் முன்னிலையில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் டாக்டர் சாந்தாராம், பேராசிரியை ஜெயந்தி, சுஜாதா ஆண்ட்ரூ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், டாக்டர் மோகன் ஆறுமுகப்பாண்டியன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் குமாரதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் 72-ம் ஆண்டில் இணைந்து தற்போது நெல்லை மருத்துவக்கல்லூரியின் முன்னாள் பொறுப்பு முதல்வர் டாக்டர் ராமகுரு, டாக்டர்கள் துரையப்பா, முன்னாள் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் அருண்மொழி, ராமசாமி, சீனிவாசன், டாக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜிம்லா மற்றும் மருத்துவர்கள் சுந்தர்ராஜன் பரமசிவன், ராஜன் ஜெயகுமார், ஹம்லவர்தினி செல்வராஜ், மோகன் கலந்து கொண்டனர்.

    • 1990-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப்பள்ளியில் 1990-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

    நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய அரசு பள்ளி ஆசிரியருமான மோகன் ராஜிக்கு டாக்டர் பட்டம் பெற்றமைக்காக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை மரக்கன்று வழங்கினார். பெரும்பாலான முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் பள்ளி மாணவர்கள் செய்திருந்தனர்.

    • மலையபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தொடர்ந்து மாணவர்கள் சார்பில் 80 ஆயிரம் நன்கொடை பள்ளிக்கு வழங்கினர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மலைய பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் ஆசிரியர்கள் ராமலிங்கம், குருசாமி, சரோஜா, பழனிசாமி, மலர்ச்செல்வி, ஆறுமுகம், ருத்ரமூர்த்தி, உமாமகேஸ்வரி, பத்மா, சுப்பிரமணி உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது மகிழ்ச்சிகளை வெளிபடுத்திக் கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் சார்பில் 80 ஆயிரம் நன்கொடை பள்ளிக்கு வழங்கினர்.

    ×