search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "all party meeting"

    காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் 9 தலைவர்கள் கலந்து கொண்டனர்.#CauveryIssue #MKStalin
    சென்னை:

    காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ,திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஜி.ராம கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆகிய 9 கட்சித் தலைவர்களும் தி.மு.க. சேர்ந்த துரைமுருகன், டி.கே.எஸ். இளங்கோவன், வி.பி. துரைசாமி, ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, ஆகியோரும் கலந்து கொண்டனர்.



    காவிரி பிரச்சனையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தவிட்டது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கினை பெறுவதற்கு அரசு தேவையான முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்துவது உள்பட பல்வேறு முடிவுகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.#CauveryIssue #MKStalin
    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளாக போதிய தண்ணீர் காவிரியில் வராததால் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. இதே ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளும் பல நேரங்களில் வறட்சியினால் பாதிக்கப்பட்டு மிகுந்த நாசத்திற்கும், நஷ்டத்திற்கும் டெல்டா மாவட்ட மக்கள் ஆளாகியுள்ளார்கள்.

    வழக்கம்போல் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா என பெரும் கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    நாங்கள் நடத்திய சட்டப் போராட்டத்தின் மூலம் ஆணையத்தை பெற்றுவிட்டோம் எனக் கூறி தமிழக மக்களை ஏமாற்றுவதை கைவிட்டு, உடனடியாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு தேவையானால் இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வற்புறுத்தி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
    காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடை பெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். #MKStalin #Cauveryissue

    சென்னை:

    காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் கடந்த 17-ந்தேதி நடைபெறும் என்று எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    ஆனால் அன்று காவிரி பிரச்சினை குறித்து வழக்கு விசாரணை நடந்ததால் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாகவும் கூட்டம் நடை பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடை பெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைசிறுத்தை கட்சி தலைவர்திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். #MKStalin #Cauveryissue

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு திட்டத்தை இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #CauveryIssue #MKStalin
    சென்னை:

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் மற்றும் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை கண்காணிப்பது இந்த அமைப்பின் பணியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகாரம் பொருந்திய அமைப்பாக மட்டும் இருந்தால் மட்டுமே அதனை தமிழகம் ஏற்கவேண்டும் என அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதவது:-

    காவிரி விவகாரத்தில் தொடர் கண்டனங்களிலிருந்து தப்பிக்க, தனது வரைவு திட்ட விவரங்களை மத்திய அரசு சமர்ப்பித்திருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தும் வகையில் நாளையே அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கூட்டத்தை மாநில அரசு கூட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
    ×