search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aishwarya"

    • லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று (டிசம்பர் 12) தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலத்தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிக பார்வையளர்களை கடந்தது. தற்போது வரை இந்த வீடியோ 1.6 மில்லியனுக்கும் அதிக பார்யைாளர்களை கடந்துள்ளது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் விஷ்னு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, தம்பி ராமையா, அனந்திகா சனில்குமார், விவேக் பிரசன்னா, தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு விஷ்னு ரங்கசாமி, படத்தொகுப்பு பிரவீன் பாஸ்கர் செய்துள்ளார்.


    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் ரஜினி நிறைவு செய்துள்ளார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.



    இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தில் ரஜினி தனது பகுதி காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    • 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
    • தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் உள்ளனர். 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.




    அப்போது புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ற அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை. இதையடுத்து நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துதுறை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி வழக்கு தொடர்ந்தார்.




    இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 27). மண்பாண்ட கலைஞரான இவர் மண் பாண்டங்கள் மட்டுமல்லாமல் சிலைகள் மற்றும் கால்நடைகள் என அனைத்து விதமான உருவ பொம்மைகளையும் செய்து வருகிறார். தீவிர ரஜினி ரசிகரான இவர் தனது பெயரையே ரஜினி ரஞ்சித் என மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ரஜினியின் உருவ பொம்மை சிலை செய்த இவர் அதனை ரஜினியிடம் நேரில் கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார்.

    தற்போது ரஜினி மகள் ஐஸ்வர்யா தயாரிக்கும் 'லால் சலாம்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்தநிலையில் மொய்தீன் பாய் சிலையை 2 அடி உயரத்தில் ஒரு மணி நேரத்தில் ரஞ்சித் செய்து முடித்துள்ளார். அந்த சிலையை ரஜினியை நேரில் சந்தித்து கொடுக்க உள்ளதாக ரஞ்ஜித் தெரிவித்துள்ளார்.

    • ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் "லால்சலாம்" படத்தில் ரஜினி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் ரஜினி அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் "லால்சலாம்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. நல்லாம்பாளையம், சத்திரம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் திருவண்ணாமலையிலேயே தங்கி இருந்து நடித்து வருகிறார்.




    படப்பிடிப்பிற்கு இடையே திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று ரஜினி சாமி தரிசனம் செய்தார் இந்நிலையில் நடிகர் ரஜினியை தி.மு.க. மூத்த அமைச்சரும் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. செயலாளருமான அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து பேசினார். அப்போது ரஜினிக்கு திருவள்ளுவர் சிலையை அமைச்சர் எ.வ.வேலு பரிசளித்தார்.

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'.கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.


    கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த், கபில்தேவை சந்தித்து திரைப்படத்தின் கதைகளை பற்றி பேசினார். தொடர்ந்து இத்திரைபடத்தின் காட்சிகள் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. தற்போது புதுவையில் 'லால் சலாம்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறவுள்ளது.


    இந்நிலையில், 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பது குறித்து அவரது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரஜினியின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    அதில் 'நான் உங்களை பார்க்கிறேன். நான் உங்களை வைத்து படமெடுக்கும் ஒருநாள் வரும் என்று நான் கற்பனை கூட செய்ததில்லை. நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். சிலசமயம் நான் உங்கள் வழியாக பார்க்கிறேன். பெரும்பாலான முறை உங்களுடன் இந்த உலகத்தை பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் நீங்கள்தான் நான் என்பதை உணர்கிறேன் அப்பா. உங்களை அதிகமாக நேசிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

    லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.


    லால் சலாம்

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த், கபில்தேவை சந்தித்து திரைப்படத்தின் கதைகளை பற்றி பேசினார். தொடர்ந்து இத்திரைபடத்தின் காட்சிகள் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. தற்போது புதுவையில் 'லால் சலாம்' படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறவுள்ளது.


    மணமக்களை வாழ்த்திய ரஜினிகாந்த்

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பெங்களூர் சென்றுள்ளார். அதாவது, தன் நெருங்கிய நண்பரான மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மகன் அபிஷேக் அம்பரீஷ் திருமணம் இன்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் ரஜினி தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி ரோடியர் மில்லில் நடிகர் ரஜினி நடிக்கும் 'லால் சலாம்' படப்பிடிப்பின் 2-ம் நாளான நேற்று ரஜினியை பார்க்க குவிந்த ரசிகர்கள் போலீசாருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


    லால் சலாம்

    லைகா நிறுவனம் தயாரிக்கும் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. 2-ம் நாளாக நேற்று ரோடியர் மில் பழைய வளாகத்தில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினி கலந்து கொண்டார். இதையறிந்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடக்கும் ரோடியர்மில் வாயிலில் திரண்டனர். ரஜினியை பார்க்க அனுமதிக்குமாறு அங்கிருந்த போலீசாரிடம் கேட்டனர்.


    ரசிகர்களை பார்த்து கையசைத்த ரஜினி

    ஆனால் போலீசார் ரசிகர்களை அனுமதிக்க மறுத்தனர். ஏராளமான ரசிகர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் படப்பிடிப்பு முடித்து காரில் வெளியே வந்த ரஜினி, ரசிகர்களை பார்த்து கையை அசைத்தபடி வேகமாக புறப்பட்டு சென்றார். ரஜினியை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். 3-வது நாளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    • இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் 'லால் சலாம்' திரைப்படம் உருவாகி வருகிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாரிக்கப்படும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு, விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.


    லால் சலாம்

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த், கபில்தேவை சந்தித்து திரைப்படத்தின் கதைகளை பற்றி பேசினார். தொடர்ந்து இத்திரைபடத்தின் காட்சிகள் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. தற்போது புதுவையில் 'லால் சலாம்' படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    புதுவை-கடலூர் சாலையில் உள்ள பழைமையான ரோடியர் மில் வளாகத்தில் நேற்று காலை முதல் 'லால்சலாம்' படப்பிடிப்பு நடந்தது. மாலை 3 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு நடைபெறும் ரோடியர் மில்லுக்கு வந்தார். அங்கு அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்ததும் ரஜினி ரசிகர்கள் ரோடியர் மில்லுக்கு திரண்டு வந்தனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. ரோடியர் மில்லில் மெயின் கேட் இழுத்து மூடப்பட்டது. இதனால் ரஜினியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.


    லால் சலாம்

    ஆனாலும் தொடர்ந்து ரசிகர்கள் ரஜினியை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் ரோடியர் மில் முன்பு காத்திருந்தனர். மாலை 6 மணியளவில் ரஜினிகாந்த் அங்கிருந்து காரில் தான் தங்கிருக்கும் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை மீண்டும் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. 2-வது நாளான இன்றும் காலை முதலே ரசிகர்கள் பட்டாளம் ரோடியர் மில்முன்பு திரண்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தொடர்ந்து ரஜினி நடிக்கும் லால்சலாம் படப்பிடிப்பு கோரிமேடு, லாஸ்பேட்டை மைதானம் உள்பட பல்வேறு இடங்களில் 10 நாள் நடைபெறும் என்று படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். 

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த்.
    • இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ரஜினி

    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.


    சத்ய நாராயண ராவ் -ரஜினி

    இந்நிலையில், நடிகர் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. கடவுளின் அருளால் அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும். ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டார். வயதாகிவிட்டது அவர் இனி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை. யாருக்கும் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பில்லை" என்று கூறினார்.

    • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 6-ஆம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது.
    • இதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளது. கடந்த 6-ஆம் தேதி மாலை இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதை தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.


    ஐஸ்வர்யா

    இந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த ஐஸ்வர்யா உயிரிழந்தார். இவர் ஐதராபாத் உள்ள சரூர் நகரை சேர்ந்த மாவட்ட நீதிபதி தட்டிகொண்டா நர்சிரெட்டியின் மகள் ஆவார். ஐஸ்வர்யாவின் மரணம் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    உயிரிழந்த ஐஸ்வர்யா நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை ஆவார். இந்த நிலையில் தன்னுடைய ரசிகைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூர்யா சென்னையில் உள்ள தனது வீட்டில் ஐஸ்வர்யாவுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் ரசிகையின் குடும்பத்திற்கு ஆறுதல் கடிதம் எழுதி அனுப்பியதுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.
    • அதன்பின்னர் ரஜினி, தனுஷ் வீடுகளிலும் நகைகள் திருடப்பட்டதா என்றும் போலீசார் விசாரணை நடித்தி வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த நகைகள் சிறிது சிறிதாக திருடப்பட்டுள்ளதாகவும், இதில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஸ்வர்யாவின் வீட்டில் கூட்டு சேர்ந்து அவர்கள் கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐஸ்வர்யா போலீசில் அளித்திருந்த புகாரில் குறிப்பிப்பட்டிருந்ததை விட கூடுதல் நகைகள் வேலைக்கார பெண் ஈஸ்வரி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

    100 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், வீட்டு பத்திரம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி இருந்தனர். ஐஸ்வர்யாவின் வீட்டில் திருடிய நகைகளை விற்று தனது கணவர் அங்க முத்துவுக்கு அதிக முதலீட்டில் காய்கறி கடையை வைத்துக் கொடுத்த ஈஸ்வரி 2-வது மகளுக்கு மளிகை கடை வைத்து கொடுத்துள்ளார். முதல் மகளுக்கு திருமணம் செய்து வைத்திருப்பதுடன் சோழிங்கநல்லூரில் சுமார் 9 லட்சத்துக்கு நிலம் வாங்கி போட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


    ரஜினி - ஐஸ்வர்யா - தனுஷ்
    ரஜினி - ஐஸ்வர்யா - தனுஷ்

    இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது என்று கணவர் அங்கமுத்து, ஈஸ்வரியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது அவர் தான் ஐஸ்வர்யா ரஜினியின் பினாமி என்றும் நாம் இருக்கும் வீடு கூட அவருடையது தான் என்றும் கூறி பந்தாகாட்டி ஏமாற்றி உள்ளார். இதைப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் என்றும் குடும்பத்தாரை ஏமாற்றி உள்ளார்.

    ஐஸ்வர்யாவின் லாக்கரில் இருந்து ஈஸ்வரி திருடிய நகைகளில் பெரும்பாலானவை ரஜினி சீதனமாக கொடுத்தவை ஆகும். இதுதவிர தனுஷ், ஐஸ்வர்யாவை திருமணம் செய்யும் போதும் சில நகைகளை பரிசாக வழங்கி இருக்கிறார். இப்படி கடந்த 18 ஆண்டுகளாக தான் சேகரித்த நகைகளையே ஐஸ்வர்யா லாக்கரில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

    அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இந்த நகைகளை அணிந்து செல்லாமல் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே எடுத்து அணிவதை வழக்கமாக வைத்திருந்தார். இதையே சாதகமாக்கி ஐஸ்வர்யா, லாக்கர் சாவியை எடுத்து திறந்து நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக வாரி சுருட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஐஸ்வர்யா வீட்டில் திருடப்பட்டதாக கூறப்பட்ட நகைகளை விட கூடுதல் நகைகளை ஈஸ்வரியின் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலைக்கார பெண் ஈஸ்வரி, ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரது வீடுகளுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது இருவரது வீடுகளிலும் அவர் நகைகளை திருடி இருக்கலாமோ? என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.

    இதுதொடர்பாக ஈஸ்வரியிடம் மேலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு ஈஸ்வரியின் கைவரிசை பற்றி மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×