search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஐஸ்வர்யா வீட்டில் கைவரிசை: ரஜினி, தனுஷ் வீடுகளிலும் நகைகள் திருடப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை
    X

    ரஜினி - ஐஸ்வர்யா - தனுஷ்

    ஐஸ்வர்யா வீட்டில் கைவரிசை: ரஜினி, தனுஷ் வீடுகளிலும் நகைகள் திருடப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை

    • ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.
    • அதன்பின்னர் ரஜினி, தனுஷ் வீடுகளிலும் நகைகள் திருடப்பட்டதா என்றும் போலீசார் விசாரணை நடித்தி வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த நகைகள் சிறிது சிறிதாக திருடப்பட்டுள்ளதாகவும், இதில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஸ்வர்யாவின் வீட்டில் கூட்டு சேர்ந்து அவர்கள் கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐஸ்வர்யா போலீசில் அளித்திருந்த புகாரில் குறிப்பிப்பட்டிருந்ததை விட கூடுதல் நகைகள் வேலைக்கார பெண் ஈஸ்வரி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

    100 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், வீட்டு பத்திரம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி இருந்தனர். ஐஸ்வர்யாவின் வீட்டில் திருடிய நகைகளை விற்று தனது கணவர் அங்க முத்துவுக்கு அதிக முதலீட்டில் காய்கறி கடையை வைத்துக் கொடுத்த ஈஸ்வரி 2-வது மகளுக்கு மளிகை கடை வைத்து கொடுத்துள்ளார். முதல் மகளுக்கு திருமணம் செய்து வைத்திருப்பதுடன் சோழிங்கநல்லூரில் சுமார் 9 லட்சத்துக்கு நிலம் வாங்கி போட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


    ரஜினி - ஐஸ்வர்யா - தனுஷ்

    இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது என்று கணவர் அங்கமுத்து, ஈஸ்வரியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது அவர் தான் ஐஸ்வர்யா ரஜினியின் பினாமி என்றும் நாம் இருக்கும் வீடு கூட அவருடையது தான் என்றும் கூறி பந்தாகாட்டி ஏமாற்றி உள்ளார். இதைப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் என்றும் குடும்பத்தாரை ஏமாற்றி உள்ளார்.

    ஐஸ்வர்யாவின் லாக்கரில் இருந்து ஈஸ்வரி திருடிய நகைகளில் பெரும்பாலானவை ரஜினி சீதனமாக கொடுத்தவை ஆகும். இதுதவிர தனுஷ், ஐஸ்வர்யாவை திருமணம் செய்யும் போதும் சில நகைகளை பரிசாக வழங்கி இருக்கிறார். இப்படி கடந்த 18 ஆண்டுகளாக தான் சேகரித்த நகைகளையே ஐஸ்வர்யா லாக்கரில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

    அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இந்த நகைகளை அணிந்து செல்லாமல் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே எடுத்து அணிவதை வழக்கமாக வைத்திருந்தார். இதையே சாதகமாக்கி ஐஸ்வர்யா, லாக்கர் சாவியை எடுத்து திறந்து நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக வாரி சுருட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஐஸ்வர்யா வீட்டில் திருடப்பட்டதாக கூறப்பட்ட நகைகளை விட கூடுதல் நகைகளை ஈஸ்வரியின் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலைக்கார பெண் ஈஸ்வரி, ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரது வீடுகளுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது இருவரது வீடுகளிலும் அவர் நகைகளை திருடி இருக்கலாமோ? என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.

    இதுதொடர்பாக ஈஸ்வரியிடம் மேலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு ஈஸ்வரியின் கைவரிசை பற்றி மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×