search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayalakshmi"

    • லியோ படத்தில் திரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையாக உருவெடுத்தது.
    • அவரது கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

    சென்னை:

    லியோ படத்தில் திரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மன்சூர் அலிகானின் இந்தக் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

    இதற்கிடையே, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துள்ளது என தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் சொன்ன ஸ்டேட்மெண்ட்டு, தமிழிசை செளந்தரராஜன் அம்மா வரைக்கும் போயிருச்சி. அது மட்டுமா.. குஷ்பூ மேடம் உடனே, மகளிர் ஆணையத்திடம் சொல்லி ஆக்சன் எடுக்க வைப்பேனு சொல்றாங்க. அடேங்கப்பா.. பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பா இருக்காங்கப்பா.

    ஆனால் ஒரு விஷயம் எனக்கு புரியல. ஆகஸ்டில் நானும் வீரலட்சுமியும் வந்து சீமான் மேல கம்ப்ளெய்ன்ட் பண்ணோம் இல்லையா.. அப்போ சீமானும், நாம் தமிழர் கட்சிக்காரங்களும் என்னையும், வீரலட்சுமியையும் ரொம்ப கொச்சையா பேசுனாங்க. ரொம்ப ஆபாசமா பேசுனாங்க.

    இதனால எனக்கு மன அழுத்தம் அதிகமாகி குஷ்பு மேடமுக்கு வீடியோ போட்டே சீமான் மீது நடவடிக்கை எடுக்க சொன்னேன். ஆனால் மேடம் கண்டுக்காமயே விட்டுட்டாங்க. ஏன்? ஒருவேளை, பா.ஜ.க.வுக்கு ஒரு பிரச்சினைனா சீமான் வந்து குரல் கொடுக்குறாரே.. அந்த நன்றியா இருக்குமோ என தெரிவித்துள்ளார்.

    • சீமான் மீது மோசடி, நம்பிக்கை துரோகம், கற்பழிப்பு என்று பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற பின்னரும், அந்த வழக்கை முடித்து வைக்காமல், போலீசார் நிலுவையில் வைத்துள்ளனர்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு பாலியல் புகார் கொடுத்தார். அதில், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, தன்னுடன் நெருக்கமாக பழகி விட்டு, பின்னர் தன்னை சீமான் ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார்.

    இதன்படி சீமான் மீது மோசடி, நம்பிக்கை துரோகம், கற்பழிப்பு என்று பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2012-ம் ஆண்டு விஜயலட்சுமி இந்த புகாரை திரும்ப பெற்று விட்டார். இந்த நிலையில், சீமான், விஜயலட்சுமிக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, பழைய குற்றச்சாட்டை மீண்டும் கூறி, 2-வது முறையாக விஜயலட்சுமி புகார் செய்தார். இதையடுத்து மீண்டும் சீமான் மீது மற்றொரு வழக்கை வளசரவாக்கம் போலீசார் பதிவு செய்தனர்.

    இதற்கிடையில், இந்த 2-வது புகாரையும் விஜயலட்சுமி திரும்ப பெற்றார். இந்த 2 வழக்குகளையும் ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்தார். அதில், "தி.மு.க., அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்கள் கூறி வருவதால் தன் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    2011-ம் ஆண்டு பதிவான வழக்கில், விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற பின்னரும், அந்த வழக்கை முடித்து வைக்காமல், போலீசார் நிலுவையில் வைத்துள்ளனர். தற்போது கொடுத்த புகாரையும் விஜயலட்சுமி வாபஸ் பெற்று விட்டார். எனவே, அரசியல் உள்நோக்கத்துடன் அந்த வழக்குகளை போலீசார் விசாரிப்பதால், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். என் மீதான 2 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். எனவும் மனுவில் கோரியிருந்தார்.

    இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, 2011-ம் ஆண்டு அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெறப்பட்ட நிலையில் வழக்கை இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று போலீஸ் தரப்புக்கு ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் கேள்வி எழுப்பி விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் 2 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதை படித்து பார்த்த நீதிபதி, "இந்த வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று புகார்தாரர் விஜயலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும். அன்றே இந்த வழக்கின் தீர்ப்பு பிறப்பிக்கப்படும்" என்று உத்தரவிட்டார்.

    • நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
    • சதி திட்டம் நிறைவேறாத காரணத்தால் தனது புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு பெங்களூருக்கு சென்றுவிட்டார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தெரிவித்து இருந்தார்.

    இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது தற்கொலைக்கு சீமான் தான் காரணம் எனவும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

    தற்போது பெங்களூர் நகரில் வசித்து வரும் முன்னாள் நடிகையான விஜயலட்சுமி என்பவர், எங்களின் கட்சித் தலைவர் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு உண்மைக்கு மாறான பொய்யான குற்றச்சாட்டோடு புகார் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து 2012-ம் ஆண்டு புகாரை திரும்பப்பெற்றுக் கொண்டார்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி மற்றும் கட்சி தலைவர் சீமானுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் வீரலட்சுமி என்ற பெண்ணோடு இணைந்து கூட்டு சதியில் ஈடுபடுகின்றனர். விஜயலட்சுமியை தூண்டி விட்டும், அவருக்கு உதவிகள் செய்தும், சீமான் மீது பொய்யான குற்றச் சாட்டுகளை கூறி மீண்டும் ஒரு புகாரை காவல் ஆணையரிடம் விஜயலட்சுமி கடந்த மாதம் கொடுத்தார்.

    சீமானிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு கடந்த ஒரு மாதமாக விஜயலட்சுமி செயல்பட்டு வந்தார். இந்த திட்டம் நிறைவேறாத காரணத்தால் தனது புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு பெங்களூருக்கு சென்றுவிட்டார்.

    தற்போது ஐகோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், சீமானை மிரட்டி பணம் பறிக்கும் வகையில் விஜயலட்சுமி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், நீர் மற்றும் உணவு அருந்தாமல் தானும் தனது அக்காவும் உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். இதற்கு சீமான் தான் காரணம் என விஜயலட்சுமி மிரட்டல் விடுத்துள்ளார்.

    கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பலர் மீது குற்றச்சாட்டுகளை கூறிய விஜயலட்சுமி, ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று உள்ளார். தற்போது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தானும் தனது அக்காவும் உயிரை மாய்த்துக்கொள்ள இருப்பதாக சீமானையும், நாம் தமிழர் கட்சியினரையும் விஜயலட்சுமி மிரட்டுகிறார். எனவே விஜயலட்சுமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உங்களது இழிவான பேச்சுகளை கேட்டுக் கொண்டு அமைதியாக செல்ல எனது கணவருக்கு எந்த அவசியமும் இல்லை.
    • சீமானுக்கு மைக்கில் பேசும்போது மட்டும்தான் வீரம் வருமா ?

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார். வீரலட்சுமிக்கு எதிராக சீமான் பல முறை கருத்துகளை முன்வைத்தார்.

    இது இருவரிடையே கருத்து மோதலை ஏற்படுத்தியது. அவ்வபோது வீரலட்சுமியும் வீடியோக்களை வெளியிட்டு சீமானுக்கு எதிராக பேசி வருகிறார்.

    இந்நிலையில், கணவர் கணேசனுடன் பாக்ஸிங்கிற்கு வரும்படி சீமானுக்கு வீரலட்சுமி சவால் விட்டுள்ளார். மேலும், பாக்ஸிங் போடுவதற்கான இடத்தையும், நேரத்தையும் அறிவித்து வீடியோ ஒன்றையும் வீரலட்சுமி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களே.. ஊடகவியாளர் மத்தியிலும், நாட்டு மக்கள் மத்தியிலும் என்னை பெண் என்றும் பாராமல் ஒழிங்கினமாக பேசி வருகிறீர்கள். நீங்கள் பேசும் பேச்சுகளை பொது வாழ்வில் உள்ள ஒரு பெண்ணாக நான் பொறுத்துக் கொண்டு கடந்து செல்வேன். ஆனால், உங்களது இழிவான பேச்சுகளை கேட்டுக் கொண்டு அமைதியாக செல்ல எனது கணவருக்கு எந்த அவசியமும் இல்லை.

    எனது கணவர் உங்களை செல்போனில் தொடர்புக் கொண்டபோது அழைப்பை துண்டித்து விட்டீர்கள். மறுபடியும் தொடர்புக் கொண்டபோது சீமானிடம் தனக்கு உங்களுடன் பாக்ஸிங் செய்ய ஆசையாக இருக்கிறது. உங்களால் என் எதிரில் நிற்க முடியுமா என்று கேட்டார். ஆனால் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை.

    சீமானுக்கு மைக்கில் பேசும்போது மட்டும்தான் வீரம் வருமா?  ஆனால், ஊடகவியளரிடம் தைரியம் இருந்தால் நேரில் வந்து நிற்க சொல்லுங்கள் என்று எனது கணவரை கூறியிருக்கிறீர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை சுமார் ஒரு மணி நேரம் கேள்வி கேட்டு பேசியவர் எனது கணவர்.

    அது ஒரு பக்கம் இருக்கட்டும். நான் இப்போது நின்றுக் கொண்டிருக்கும் இடம் திருவள்ளுவர் மாவட்டத்தில், திருவள்ளூர் வட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மைதானம் இது. இங்குதான் பாக்சிங் செய்வதற்கு இடம் ஏற்பாடு செய்துள்ளேன். 2024ம் ஆண்டு தை மாதத்தில் வரும் காணும் பொங்கல் அன்று எனது கணவருக்கும், உங்களுக்கும் சண்டை நடக்க போகிறது.

    இந்த சண்டையில் பாக்ஸிங், கராத்தே, குங்பூ, மல்யுத்தம் என இதில் எது வேண்டுமென்றாலும் செய்யலாம். அனைத்தையும் சமாளிக்க எனது கணவர் தயாராக இருக்கிறார். இதில் தோற்பவர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். என்ன பந்தயம் என்பது குறித்து போட்டியின் மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னைக்கு வாங்க என்று அழைத்து என்னை அவமானப்படுத்தும் வேலையை ஆரம்பித்தால் சரியாக இருக்காது.
    • ஏதாவது வாலாட்டும் வேலையை செய்தால் கர்நாடகத்துக்கு சீமானை வரவழைத்து திணறடித்து விடுவேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகார் தொடர்பான வழக்கு வளசரவாக்கம் போலீசில் நிலுவையில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் அந்த வழக்கை மீண்டும் தூசு தட்டும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்திருந்தார்.

    பின்னர் அந்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டு விஜயலட்சுமி பெங்களூருக்கு சென்றார்.

    இந்த நிலையில் விஜயலட்சுமி, பெங்களூரில் இருந்தபடியே சீமானுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    சீமான் என்னிடம் ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போட்டதில் இருந்து நான் கதறிக்கொண்டிருப்பதாக அவரது ஆதரவு யூடியூப் சேனலில் போட்டுள்ளனர். சீமானுக்கும் நன்றி கிடையாது. சீமான் சார்ந்த யூடியூப் சேனலுக்கும் நன்றி கிடையாது. கடந்த 2008-ல் எனது அக்கா கணவர் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றதால் அந்த பிரச்சனையை முடித்து கொடுப்பதற்காகவே சீமானை போய் சந்தித்தேன். எனது அக்காவுக்கு அவர் நன்மை செய்யவில்லை. அக்கா மீதும் கருணை இல்லை. என் மீதும் கருணை கிடையாது. எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக சீமான் செய்து விட்டார்.

    என்னை தூக்கி பெங்களூரில் போட்டாச்சி. பெங்களூரில் எனது அக்காவை பார்த்துக் கொண்டு எனக்கு ஒரு வாழ்க்கை என்பதை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    எந்த சீமானும் வரப்போவது இல்லை. நாம் தமிழர் கட்சியினரும் வரப்போவது இல்லை. நான் எல்லாவற்றையும் பெருந்தன்மையாக முடித்து கொடுத்துவிட்டு உங்க முகத்தை கூட இனி பார்க்கக் கூடாது என்கிற எண்ணத்தில் தான் அடுத்தகட்ட வேலைக்கு போயாச்சி. இத்தோடு நீங்கள் எல்லாம் விட்டு விட்டீர்கள் என்றால் ஓ.கே. திரும்பவும் எதையாவது புதிதாக செய்ய வேண்டாம்.

    1 கோடிக்கு மான நஷ்ட வழக்கு போட்டிருக்கோம். சென்னைக்கு வாங்க என்று அழைத்து என்னை அவமானப்படுத்தும் வேலையை ஆரம்பித்தால் சரியாக இருக்காது. ஜகேஷ் என்கிற நடிகருடன் விஜயலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது என்று சீமான் கூறியுள்ளார். நான் சீமான் மீது ரூ.20 கோடிக்கு பெங்களூரில் மானநஷ்ட வழக்கு போடுவேன். கர்நாடககாரர்கள் இப்படி பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். என் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று இப்படி சீமான் பேசியுள்ளார். இதோடு வாயை மூடிட்டு போய் விடுங்கள். என்னிடம் வம்பிழுக்க வேண்டாம். இது தொடர்ந்தால் நான் மட்டுமல்ல ஜகேஷ் சாரையும் மானநஷ்டஈடு வழக்கு போட வைப்பேன். உங்களை தூங்க விடாமல் செய்து விடுவேன்.

    இதற்கு மேல் ஏதாவது வாலாட்டும் வேலையை செய்தால் கர்நாடகத்துக்கு சீமானை வரவழைத்து திணறடித்து விடுவேன். எனவே எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார்.

    • விஜயலட்சுமியின் புகார்கள், வாபஸ் பெற்ற விவரங்களை போலீசார் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
    • வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசுக்கு வழங்கவேண்டும் என்று சீமான் தரப்புக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது இந்த வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும். விஜயலட்சுமியின் புகார்கள், வாபஸ் பெற்ற விவரங்களை போலீசார் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசுக்கு வழங்கவேண்டும் என்று சீமான் தரப்புக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இந்த வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    • சம்மன் அனுப்பி வரவில்லை என்ற குற்றச்சாட்டு வரக்கூடாது என்பதால் நேரில் ஆஜராகினேன்
    • ஒரு பெண், இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து ஒருவரை வன்கொடுமை செய்வதை விட கொடுமை உள்ளதா?

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் சீமான் நேரில் ஆஜராகவில்லை.

    இதற்கிடையே திடீரென விஜயலட்சுமி, சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றார். இருந்தாலும் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து இன்று வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜரானார்.

    ஆஜராகியபின், வெளியில் வந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2012-ம் ஆண்டு ஏற்கனவே வழக்கை திரும்பப் பெற்றிருந்தார். தற்போது மீண்டும் திரும்பப் பெற்றுள்ளார். 9-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தார்கள். வர முடியாது எனத் தெரிவித்தேன். அதன்பிறகு இன்றைய தினம் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். சம்மன் அனுப்பி வரவில்லை என்ற குற்றச்சாட்டு வரக்கூடாது என்பதால் நேரில் ஆஜராகினேன்.

    2011-ம் ஆண்டு இந்த வழக்கு கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்டதே திமுக-காங்கிரஸ் தூண்டுதல் பேரில்தான். ஜெயலலிதா அவர்கள் உண்மைத்தன்மை என்ன? என்று கேட்க, அதில் இல்லை என்றதும் தூரத்தூக்கி போட்டுவிட்டார்கள். பின்னர் எடப்பாடி ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்டது. என்னைப் பற்றி தெரியும் என்பதால் அவர்கள் அதை எடுத்துக் கொள்ளவில்லை.

    இவர்களால் சமாளிக்க முடியவில்லை. இதை வைத்தாவது... மக்களுக்கு போராடிய வகையில் 128 வழக்குகள் உள்ளன. அதை எடுக்க முடியவில்லை. பெண் வழக்கால், அசிங்கப்படுத்தி விடலாம். மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி விடலாம். நன்மதிப்பை சிதைத்து விடலாம் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டது.

    ஒரு மாதகாலமாக பேசக்கூடிய பேச்சா... நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லையா... பணம் கொடுக்கப்பட்டதா, நகை கொடுக்கப்பட்டதா? என கேள்வி கேட்டகப்பட்டது. ஒன்னும் கொடுக்கல.... என்றேன்

    இந்த பெண்களால் நான் 13 வருடம் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன். நான், எனது குடும்பம், என்னைச் சார்ந்து இருக்கும் லட்சக்கணக்கானோர் பட்ட கஷ்டம்.

    ஒரு பெண், இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து ஒருவரை வன்கொடுமை செய்வதை விட கொடுமை உள்ளதா?.

    எனது மனைவி ஆஜராகுவதாக தெரிவித்தார். அதனால் அழைத்து வந்தேன். மனைவி ஆஜராக முடியாது என்றார்கள். சரி சும்மாவது வருகிறேன் என்றார். அதனால் அழைத்து வந்தேன். என்னுடைய மவுனத்தில் அதிகமாக பொய் பேசிவிட்டீர்கள். திருமணம், கருக்கலைப்பு எனக் கூறுகிறார்கள். அதற்கான ஆதாரம் உள்ளதா?. எனது திருமணம் 2013-ல் நடைபெற்றது. அப்போது ஆதாரத்தை காட்டி நிறுத்தியிருக்கலாமே?. 8 முறை கருக்கலைப்பு என்பது நகைச்சுவையாக உள்ளது. வீரலட்சுமி போன்றோருக்கு மன்னிப்பு கிடையாது, பொது மன்னிப்பு கேட்கனும்.

    என்னை அசிங்கப்படுத்தும் நபர்களுக்கும் சேர்த்துதான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

    • நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் நிலையம் அருகே திரண்டு இருந்தனர்.
    • ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    போரூர்:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2012-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி ஒரு புகார் அளித்தார்.

    அதில், சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட வளசரவாக்கம் போலீசார் கற்பழிப்பு உள்பட 5 பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் விஜயலட்சுமி திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் சீமான் மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் சீமானை கைது செய்ய வேண்டும். அதுவரை தான் ஓயப் போவதில்லை என்று கூறினார்.

    இதையடுத்து போலீசார் மீண்டும் அந்த வழக்கை தூசு தட்டினார்கள். அந்த வழக்கு குறித்து விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பப்பட்டது.

    முதல் தடவை சீமான் தரப்பில் வக்கீல் மட்டும் ஆஜர் ஆகியிருந்தார். 2-வது முறையாக விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் சேர்ந்து ஆஜர் ஆக வேண்டும் என்று சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதற்கிடையே ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி சீமான் தரப்பில் விஜயலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து நேற்று முன்தினம் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக எழுதி கொடுத்தார்.

    மேலும் சீமான் சக்தி வாய்ந்த தலைவர் என்று குறிப்பிட்ட விஜயலட்சுமி தான் இனி சென்னைக்கு வரப் போவதில்லை என்றும் பெங்களூர் செல்வதாகவும் கூறி சென்றார்.

    ஏற்கனவே போலீஸ் விசாரணைக்கு 18-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் சீமான் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார்.

    காலை 11.15 மணிக்கு சீமான் வந்தார். அவர் வருவதை அறிந்ததும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் நிலையம் அருகே திரண்டு இருந்தனர்.

    கோயம்பேடு துணை ஆணையாளர் உமையாள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    சீமான் வந்ததும் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அவரால் காரை விட்டு இறங்க முடியவில்லை.

    போலீஸ் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் அரண் போல் நின்றிருந்தார்கள். சீமானின் கார் செல்வதற்காக தடுப்பு வேலிகளை அகற்றுமாறு போலீசாரிடம் கூறினார்கள்.

    போலீசார் அகற்றாததால் தடுப்பு வேலிகளை தள்ளி விட்டு உள்ளே நுழைய முயன்றார்கள். இதனால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    சுமார் 15 நிமிடத்துக்கு பிறகு சீமான் காரில் இருந்து இறங்கி போலீஸ் நிலையத்துக்குள் சென்றார். விசாரணையின் போது அவருக்கு உதவுவதற்காக அவரது மனைவியும் வக்கீலுமான கயல்விழி மற்றும் வக்கீல் சங்கர் உள்பட 5 பேர் விசாரணையில் கலந்து கொண்டனர்.

    ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    • பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.
    • புகார் விவகாரத்தில் என் மீது எவ்வளவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நான் தாங்கிக்கொள்வேன்.

    திருவள்ளூர்:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார். இந்த நிலையில் அவர் திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    பின்னர் வீரலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், நடிகை புகார் விவகாரத்தில் என் மீது எவ்வளவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நான் தாங்கிக்கொள்வேன். வீரலட்சுமி யார் என சீமானுக்கு தெரியாதா? சீமானுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட்டம் இருக்கிறது என்றார்.

    • சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது சக்திவாய்ந்தவராக இருக்கிறார்.
    • எனவே அவர் மீதான புகாரை வாபஸ் பெறுகிறேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி போலீசிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார். சீமான் மீது குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்

    இந்நிலையில், வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த விஜயலட்சுமி, தனது புகார் மனுவை வாபஸ் பெற்றார்.

    இதுதொடர்பாக விஜலட்சுமி கூறியதாவது:

    சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது, சக்திவாய்ந்தவராக இருக்கிறார்.

    காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தனி ஒருவராக போராட முடியவி்ல்லை.

    சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் இருந்து கிடைக்கவில்லை.

    புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொய்வு இருந்தது.

    வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை.

    தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாகவும்,மீண்டும் பெங்களூருவுக்கே புறப்படுகிறேன என தெரிவித்துள்ளார்.

    • விசாரணையின்போது புகார் கொடுத்த விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் எதிரே நிற்க வேண்டும் என கூறினார்.
    • பயண திட்டங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதால், ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு முக்கியம்.

    நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் அடிப்படையில், சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நேரில் ஆஜராகும்படி ஏற்கனவே சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், சீமான் நேரில் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை வளசரவாக்கம் போலீசார், பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டிற்குச் சென்று சம்மன் வழங்க முடிவு செய்தனர். நாளை நேரில் ஆஜராகுவதற்கான சம்மனை வழங்க சென்றபோது, சீமான் தரப்பு சம்மனை வாங்க மறுத்துவிட்டது.

    சீமான் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்த கொள்ள இருப்பதால் நேரில் ஆஜராக முடியும், அவர்கள் காவல் நிலையத்திற்கு வந்து சம்மனை பெற்றுக்கொண்டு மற்றொரு தேதியில் நேரில் ஆஜராகுவார் எனவும் அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது

    இந்நிலையில், நடிகை விஜயலட்சுமியின் விவகாரத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர் இதுதொடர்பாக விளக்கமும் அளித்துள்ளார். அதில், "நான் விசாரணைக்கு நேரில் வரும்போது என் மீது புகார் கொடுத்த விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் எதிரே நிற்க வேண்டும் என கூறினார்.

    மேலும் அவர், நான் ஒரு பக்கம் விசாரணைக்கு அழைக்கப்படுகிறேன், அவர்கள் மற்றொரு பக்கம் வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள். அவர்கள் குற்றச்சாட்டில் எந்த உண்மையும், அடிப்படையில் இல்லை.

    கட்சி நிகழ்வுகள் உள்ளிட்ட பயண திட்டங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதால், ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு முக்கியம்.

    அதனால், ஒரே நாளில் ஒரே நேரத்தில் மூவரையும் வைத்து விசாரணை நடத்தி புகாரின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

    • விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி இருவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.
    • இருவரும் சேர்ந்து ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி இருவருக்கும் மானநஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மத்திய மண்டல செயலாளர் வக்கீல் ஸ்ரீதர் கூறியதாவது:-

    நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகிய இருவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. வீரலட்சுமியின் ராமாபுரம் வீட்டு முகவரிக்கும், விஜயலட்சுமியின் பெங்களூரு முகவரிக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் தாங்கள் தெரிவித்த கருத்துக்களுக்காக இருவரும் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×