search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rekla race"

    • மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
    • தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

    உடுமலை,அக்.17-

    உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் ஒன்றியம், துங்காவியில் ராமேகவுண்டன்புதூர் மற்றும் துங்காவி பொதுமக்கள், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது , ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலசெந்தில், கு.சாமிதுரை, மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கௌதம்ராஜ் உட்பட இளைஞர் அணி நண்பர்கள், கிளைக்கழக செயலாளர்கள் கோவிந்தசாமி, சிவராஜ் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • தாராபுரம் சாலையில் குண்டடம் ஒன்றிய திமுக., சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது
    • முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 1 பவுன் தங்க நாணயம் வழ்ஙகப்பட்டது.

    தாராபுரம்:

    தாராபுரத்தை அருகேயுள்ள உப்பாறு அணை அருகே பூளவாடி_தாராபுரம் சாலையில் குண்டடம் ஒன்றிய திமுக., சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்திற்கு பொள்ளாச்சி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், சென்னிமலை, முத்தூர் ,ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், கரூர், அரவக்குறிச்சி ,கன்னிவாடி ஆகிய பகுதியில் இருந்து ஏராளமானோர் பந்தயத்தில் கலந்து கொண்டனர். 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

    200 மீட்டர் மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.இரண்டாம் பரிசு 3/4 தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசு 1/2 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. நான்காவது பரிசு 1/4 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ஐந்தாவது பரிசு வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.

    300 மீட்டர் ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளருக்கு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு 3/4 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசு 1/2 பவுன் தங்க நாணயம்- கோப்பை வழங்கப்பட்டது.நான்காவது பரிசு 1/4 பவுன் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

    உப்பாறு அணை அருகே நடைபெற்ற ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தை காண குண்டடம் ,கொடுவாய் ,தாராபுரம் ,உடுமலைப்பேட்டை ,காங்கேயம் பகுதிகளிலிருந்து ஆண்கள், பெண்கள் ,குழந்தைகள் என ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    • போட்டி 200 மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது.
    • முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயம் வழஙகப்பட்டது.

    உடுமலை:

    தமிழ்நாடு முன்னாள் முதல்- அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடுமலை அடுத்த கொடுங்கியம் ஊராட்சி பகுதியில் உடுக்கம்பாளையம் மற்றும் எரிசனம்பட்டி திமுக., கிளை சார்பில் 8- ம் ஆண்டு ரேக்ளா போட்டி நடத்தப்பட்டது.

    போட்டிக்கு உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் தி.செழியன் தலைமை வகித்தார்.போட்டியை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., அவைத் தலைவர்- முன்னாள் எம்.எல்.ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பங்கேற்பதற்காக காங்கேயம்,பொள்ளாச்சி, தாராபுரம்,ஒட்டன்சத்திரம்,கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கொடிங்கியம் பகுதிக்கு சரக்கு வாகனத்தில் வருகை தந்தது.போட்டி 200 மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது.இதில் 200 மீட்டர் பிரிவில் 343 வண்டிகளும் 300 மீட்டர் பிரிவில் 99 வண்டிகளும் கலந்து கொண்டது.

    அதற்கு முன்பாக போட்டியில் கலந்து கொள்ள வருகை தந்த உரிமையாளர்கள் நுழைவுக் கட்டணத்தை செலுத்தி டோக்கன் பெற்றுக் கொண்டனர்.அதைத் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படி மாட்டு வண்டிகள் அழைக்கப்பட்டது.

    இதையடுத்து வண்டிகளில் பூட்டப்பட்ட மாடுகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்றது.போட்டியை பொதுமக்கள் பாதுகாப்பாக பார்த்து ரசிக்கும் வகையில் உடுமலை-ஆனைமலை சாலையின் இரண்டு புறங்களில் இரும்பு தடுப்புகள் வைத்து கட்டப்பட்டு இருந்தது.

    அங்கு திரண்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விசில் அடித்தும் கைதட்டியும் மாட்டு வண்டி உரிமையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

    அதன்படி 200 மீட்டரில் முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயமும்,2-ம் பரிசாக ¾ பவுன் தங்க நாணயமும் 3-ம் பரிசாக ½ பவுன் தங்க நாணயமும், நான்காம் பரிசாக ¼ பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. மேலும் ஆறுதல் பரிசாக 5-ம் பரிசு முதல் 10- ம் பரிசு வரை ஒரு கிராம் தங்க நாணயமும் 11-ம் பரிசு முதல் 30-ம் பரிசு வரை கோப்பைகளும், ஆறுதல் பரிசாக கோப்பைகள் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டது.

    இதேபோன்று 300 மீட்டருக்கும் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. 18 வினாடிகளுக்கும் குறைவாக வந்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கினார்.

    இதில் உடுமலை ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், எஸ்.கே.எம் தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது, மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராம்குமார், கிருஷ்ணவேணி,ஊராட்சி மன்ற தலைவர்கள் கலாமணி மோகன்,கிருஷ்ணவேணி சரவணப்பெருமாள்,பாரதி கோவிந்தராஜ்,அபர்ணா ராம்குமார்,பாலதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போட்டி நடைபெறுவதை யொட்டி உடுமலை -ஆனைமலை சாலையில் வாகனங்கள் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.மேலும் தளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • பா.ஜ.க. சார்பில் வருகிற 19ந் தேதி ரேக்ளா பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது.
    • அனுமதி மறுக்கப்பட்டதாக பல்லடம் டி.எஸ்.பி. மறுப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.

    பல்லடம் :

    பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் வருகிற 19ந் தேதி, தமிழர்களின் பாரம்பரிய ரேக்ளா பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது. இதனை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசின் அனைத்து வழிகாட்டு நடைமுறைகளையும் பின்பற்றி இந்த போட்டி நடத்தப்படும் என உறுதிமொழி அளித்து, பல்லடம் போலீசாரிடம் அனுமதிகேட்டு மனு கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் பொருத்தமில்லாத காரணங்களை கூறி போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக பல்லடம் டி.எஸ்.பி. மறுப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரேக்ளா பந்தயத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை பா.ஜ.க. கண்டிக்கிறது. இதற்காக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ரேக்ளா பந்தயத்தில் வாலிபர்கள் பங்கேற்று மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்தனர்.
    • வாலிபர்கள் பங்கேற்று 20 மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்த னர்.

    வடவள்ளி

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளது தேவராயபுரம். இந்த பகுதியில் அதிகாலை ரேக்ளா பந்தய போட்டி நடைபெற்றது.

    இதில் நரசீபுரம், பேரூர், தீத்திபாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் பங்கேற்று 20 மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்த னர்.

    ரேக்ளா பந்தயம் தேவராயபுரத்தில் தொடங்கி நரசீபுரம் வரை சென்றது. இதனால் அந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலையில் சத்தம் கேட்டு மக்கள் எழுந்து பார்த்தனர்.

    அதிகாலை நேரத்தில் ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட்டதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறிய தாவது:-

    கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் இரவு நேரங்களில் ரேக்ளா பந்தயம் போட்டி நடத்தி வருகின்றனர். இதனால் இரவில் வெளியில் வருவதற்கே அச்சமாக உள்ளது. மேலும் இரவில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்சுக்கும் வழிவிடுவதில்லை. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது.

    அதிகாலை நேரத்தில் மக்கள் தூங்கி கொண்டிருக்கும் வேளையில் அதிக சத்தத்துடன் செல்வதால் அவதியாக உள்ளது. எனவே போலீசார் இரவு நேரங்களில் தடையை மீறி ரேக்ளா பந்தயம் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரங்கம்புதூரில் கக்கடவு, ரங்கம்புதூர், மூட்டாம்பாளையம் ஆகிய ஊர் பொதுமக்கள் சார்பில் இரண்டாமாண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
    • 200 மீட்டர், 300 மீட்டர் தூரம் காளைகள் சீறிப்பாய்ந்தது. வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கோைவ:

    நெகமம் அடுத்த ரங்கம்புதூரில் கக்கடவு, ரங்கம்புதூர், மூட்டாம்பாளையம் ஆகிய ஊர் பொதுமக்கள் சார்பில் இரண்டாமாண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

    இதில் பழனி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பொள்ளாச்சி, மூலனூர், செஞ்சேரிமலை, சாளையூர், கரட்டுமடம், ஆனைமலை, வேட்டைகாரன்புதூர், கோட்டூர், மலையாண்டிபட்டினம், அங்கலக்குறிச்சி, காளியாபுரம், நெகமம், செட்டியக்காபாளையம், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, எரிசனம்பட்டி, ஆவலப்பம்பட்டி, சடையபாளையம், காளியப்பம்பாளையம், தேவிபட்டணம், புரவிபாளையம், வடக்கிபாளையம், சமுத்தூர், மடத்துக்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூர், துங்காவி ஆகிய பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன.

    இதில் 200 மீட்டர், 300 மீட்டர் தூரம் காளைகள் சீறிப்பாய்ந்தது. வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரேக்ளா பந்தயத்தை காண அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.   

    ×