துங்காவியில் ரேக்ளா பந்தயம்

மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பந்தயத்தில் கலந்து கொண்டவர்களின் காட்சி.
பந்தயத்தில் கலந்து கொண்டவர்களின் காட்சி.
Published on

உடுமலை,அக்.17-

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் ஒன்றியம், துங்காவியில் ராமேகவுண்டன்புதூர் மற்றும் துங்காவி பொதுமக்கள், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது , ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலசெந்தில், கு.சாமிதுரை, மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கௌதம்ராஜ் உட்பட இளைஞர் அணி நண்பர்கள், கிளைக்கழக செயலாளர்கள் கோவிந்தசாமி, சிவராஜ் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com