பா.ஜ.க., ரேக்ளா போட்டிற்கு போலீஸ் அனுமதி மறுப்பு

பா.ஜ.க. சார்பில் வருகிற 19ந் தேதி ரேக்ளா பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது.அனுமதி மறுக்கப்பட்டதாக பல்லடம் டி.எஸ்.பி. மறுப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் வருகிற 19ந் தேதி, தமிழர்களின் பாரம்பரிய ரேக்ளா பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது. இதனை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசின் அனைத்து வழிகாட்டு நடைமுறைகளையும் பின்பற்றி இந்த போட்டி நடத்தப்படும் என உறுதிமொழி அளித்து, பல்லடம் போலீசாரிடம் அனுமதிகேட்டு மனு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பொருத்தமில்லாத காரணங்களை கூறி போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக பல்லடம் டி.எஸ்.பி. மறுப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரேக்ளா பந்தயத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை பா.ஜ.க. கண்டிக்கிறது. இதற்காக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com