search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "painter arrested"

    • பெயிண்டரான மகா விஷ்ணு, பொங்கல் பண்டிகை முடிந்து மும்பை சென்ற மகேஸ்வரியிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மகா விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து கருவை அழிக்க வேண்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகள் மகேஸ்வரி (வயது 22). இவர் சிறு வயது முதலே மும்பையில் சித்தி வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மகாவிஷ்ணு (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    பெயிண்டரான மகா விஷ்ணு, பொங்கல் பண்டிகை முடிந்து மும்பை சென்ற மகேஸ்வரியிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட முத்தம்பட்டிக்கு மகேஸ்வரி வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை மகா விஷ்ணு, மகேஸ்வரியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மகேஸ்வரி கர்ப்பம் தரித்தார்.

    இதை அறிந்த மகா விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து கருவை அழிக்க வேண்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. அங்கிருந்து தப்பி வந்த மகேஸ்வரி வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், மகாவிஷ்ணு அவருடைய தந்தை ரவிச்சந்திரன், தாயார் சிவகாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சுதாபிரியா ஒரு காபி கடையில் காசானராக வேலை செய்து வருகிறார்
    • சுதாபிரியா ஒரு காபி கடையில் காசானராக வேலை செய்து வருகிறார்

    கோவை,

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது 45). பெயிண்டர். இரவது மனைவி சுதாபிரியா (35). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு காபி கடையில் காசானராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நல்லமுத்து அடிக்கடி சுதாபிரியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுப்பட்டு வந்தார். சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த நல்லமுத்து, சுதாபிரியாவை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார். அவருக்கு முகம், கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சுதாபிரியா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் இதுகுறித்து சுதாபிரியா செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நல்லமுத்துவை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பொள்ளாச்சிக்கு ஆப்பில் எடுத்து கொண்டு வந்தார்.
    • கல்லை எடுத்து தலையில் தாக்கினார்.

    கோவை,

    தென்காசியை சேர்ந்தவர் சம்சுதின் (வயது 38). டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் தனது மினி வேனில் தென்காசியில் இருந்து பொள்ளாச்சிக்கு ஆப்பில் எடுத்து கொண்டு வந்தார்.

    ஆப்பிலை பொ ள்ளாச்சியில் இறக்கிவிட்டு ஊர் திரும்பினார். அப்போது பொள்ளாச்சி புது பஸ் நிலையம் சென்று அங்குள்ள ஒரு பேக்கரிக்கு சென்றார்.

    அங்கு நின்று இருந்த போது ஒருவர் வந்தார். அவர் சம்சுதின் அருகில் வந்து அவரிடம் எங்கே செல்கிறாய் என கேட்டார்.

    அதற்கு அவர் தென்காசியில் இருந்து வந்ததாகவும் திரும்பி ஊருக்கு செல்வதாகவும் கூறினார்.

    அப்போது அந்த மர்ம நபர் எதற்காக இங்கே நிற்கிறாய் உடனே இங்கு இருந்து செல் என்றார்.

    இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் தாக்கினார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயம் அடைந்த சம்சுதினை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து சம்சுதின் பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சம்சுதினை தாக்கிய பாலக்காட்டை சேர்ந்த பெயிண்டர் ராபட் விஜயன் (45) என்பவரை கைது செய்தனர்.

    அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தனிப்படை போலீசார் காளிமுத்துவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசில் சிக்கவில்லை.
    • காளிமுத்துவின் சகோதரி வீடு சிவகங்கையில் இருப்பதால் அங்கும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் காளிமுத்து பிடிபடவில்லை.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது42). இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களது மகள் தன்ஷிகா (8). காளிமுத்து டெய்லராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி பிரியதர்ஷினி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    சிறுமி தன்ஷிகா 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காளிமுத்து சிவகங்கையில் உள்ள சகோதரி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு தனது மகளை தன்னுடன் அழைத்துச்சென்றார்.

    மனைவி பிரியதர்ஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சில நாட்களுக்கு பிறகு மேலூரில் உள்ள சகோதரி வீட்டில் காளிமுத்து மட்டும் இருந்துள்ளார். அவரிடம் தன்ஷிகா குறித்து கேட்டபோது, சிவகங்கையில் தனது அக்காள் வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி காளிமுத்து வீட்டில் இருந்த பரணில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பரணில் இருந்த ஒரு சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதனுள் பிளாஸ்டிக் வாளியில் அழுகிய நிலையில் சிறுமி தன்ஷிகா பிணம் இருந்தது.

    தனது மகள் பிணமாக கிடப்பதை கண்டு பிரியதர்ஷினி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. சிறுமி தன்ஷிகாவை அவளது தந்தை காளிமுத்துவே கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை யாருக்கும் தெரியாமல் வாளிக்குள் அடைத்து சாக்கு மூட்டையில் கட்டி வீட்டு பரணில் தூக்கி வைத்து சென்றிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    அவரை போலீசார் தேடிய போது தலைமறைவாகி விட்டார். பெற்ற மகளை கொடூரமாக கொன்ற காளிமுத்துவை பிடிக்க மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோர் உத்தரவின் பேரில் தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம், ஜெய்ஹிந்துபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சங்கீதா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் காளிமுத்துவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசில் சிக்கவில்லை. அவரது சகோதரி வீடு சிவகங்கையில் இருப்பதால் அங்கும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் காளிமுத்து பிடிபடவில்லை.

    இந்த நிலையில் போலீசில் சிக்காமல் இருக்க காளிமுத்து பிச்சைக்காரர் வேடத்தில் திரிவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடி வந்த நிலையில், ஜெய்ஹிந்துபுரம் மதுபானக்கடை அருகே படுத்திருந்த காளிமுத்து போலீசாரிடம் நேற்றிரவு சிக்கினார்.

    பிச்சைக்காரர் வேடத்தில் இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் பெற்ற மகளை கொன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் கூறியதாவது:-

    எனக்கும், எனது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நான் மாற்றுத்திறனாளி என்றபோதிலும் டெய்லர் வேலை பார்த்து வந்தேன். எனது மனைவி தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். இருவரும் சிரமப்பட்டு குடும்பத்தை நடத்தி வந்தோம்.

    சம்பவத்தன்று எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் மகள் தன்ஷிகாவை அழைத்துக் கொண்டு சிவகங்கையில் உள்ள எனது அக்காள் வீட்டிற்கு சென்றேன். எனக்கு வாழ பிடிக்காததால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவரிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

    அதன் பிறகு எனது மகளுடன் ஜெய்ஹிந்துபுரம் வீட்டிற்கு வந்தேன். அப்போது அங்கு எனது மனைவி இல்லை. ஆகவே நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன். எனது மகள் மீது எனக்கு அதிக பாசம் உள்ளது. இதனால் இறந்த பிறகு அவளை யார் பார்த்துக் கொள்வார்கள்? என்று நினைத்தேன்.

    ஆகவே மகளை கொன்றுவிட்டு நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன். அதன்படி மகள் தன்ஷிகாவை கழுத்தை நெரித்து கொன்றேன். பின்பு அவளது கை, கால்களை கட்டி வாளிக்குள் அடைத்து மூட்டை கட்டி வீட்டு பரணில் வைத்தேன்.

    அதன்பிறகு நான் தற்கொலை செய்து கொள்ள பயந்து வெளியூருக்கு சென்று விட்டேன். பின்பு சிவகங்கை, ராமநாதபுரம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்தேன். அங்கு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தினேன். மதுரையில் திரிந்தபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    காளிமுத்து கூறும் தகவல் உண்மைதானா? என்று போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்ணின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

    கோவை :

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இதனையடுத்து இளம்பெண்ணுக்கு நேருநகரை சேர்ந்த பெயிண்டர் கார்த்தி (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் கார்த்தியுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இளம்பெண் தனியாக இருந்தார். வீட்டிற்குள் கார்த்தி அத்துமீறி நுழைந்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது கள்ளக்காதலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு பழகுவதை நிறுத்திய கள்ளக்காதலியை வீடு புகுந்து தாக்கிய கார்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு
    • உறவினர் வீட்டில் சிறுமியுடன் தங்கி இருந்தார்

    கோவை :

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 படித்து முடிந்து இருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு அந்த பகுதியில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்த மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த லங்கேஷ்வரன் (வயது 28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் லங்கேஷ்வரன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் திருமண ஆைச காட்டி அவருடன் ஜாலியாக இருந்தார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே லங்கேஷ்வரன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி தனது பெற்றோரிடம் துணிகளை துவைக்க வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை லங்கேஷ்வரன் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் நெகமம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். பின்னர் மதுரை அருகே உறவினர் வீட்டில் சிறுமியுடன் தங்கி இருந்த லங்கேஷ்வரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் சிறுமியை திருமணம் ஆசை காட்டி கடத்தி சென்ற லங்கேஷ்வரன் கணுவாயில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்து உள்ளார். பின்னர் மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தது சிறுமியிடம் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் 17 வயது சிறுமியிடம் உல்லாசமாக இருந்து அவரை கடத்தி சென்று திருமணம் செய்த லங்கேஷ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை ேகார்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திருமண ஆசை காட்டி 11-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பெயிண்டரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை டாப் டிவிசன் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 21). பெயிண்டர்.

    இவரது உறவுப்பெண் அதே பகுதியில் வசித்து வருகிறார். 16 வயதான அவர் அங்குள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    உறவினர்கள் என்பதால் பாலசுப்பிரமணியனும், அந்த பெண்ணும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலசுப்பிரமணியன் அந்த பெண்ணை காதலிப்பதாக தெரிவித்தார். அந்த பெண்ணும் அதனை ஏற்றுக் கொண்டு நெருங்கி பழகினார்.

    திருமண ஆசை காட்டி அந்த பெண்ணுடன் பாலசுப்பிரமணியன் உல்லாசமாக இருந்தார். அடிக்கடி தனிமையில் சந்தித்து உலலாசமாக இருந்ததில் அந்த மாணவி 5 மாத கர்ப்பம் ஆனார். இதனை குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் மாணவி மறைத்து வந்தார்.

    கர்ப்பம் காரணமாக மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி, உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாணவியை அவரது பெற்றோர் டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பாலசுப்பிரமணியை சந்தித்து அவரை கண்டித்தனர். அதற்கு அவர் மாணவியின் பெற்றோரை உதாசீனப்படுத்தி திட்டி அனுப்பியதுடன் உங்கள் மகளை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் கூறி அனுப்பி வைத்தார்.

    இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வால்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ×