காதலியின் கருவை கலைக்க வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை- பெயிண்டர் கைது

பெயிண்டரான மகா விஷ்ணு, பொங்கல் பண்டிகை முடிந்து மும்பை சென்ற மகேஸ்வரியிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மகா விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து கருவை அழிக்க வேண்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
காதலியின் கருவை கலைக்க வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை- பெயிண்டர் கைது
Published on

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகள் மகேஸ்வரி (வயது 22). இவர் சிறு வயது முதலே மும்பையில் சித்தி வீட்டில் தங்கி இருந்தார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மகாவிஷ்ணு (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

பெயிண்டரான மகா விஷ்ணு, பொங்கல் பண்டிகை முடிந்து மும்பை சென்ற மகேஸ்வரியிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட முத்தம்பட்டிக்கு மகேஸ்வரி வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை மகா விஷ்ணு, மகேஸ்வரியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மகேஸ்வரி கர்ப்பம் தரித்தார்.

இதை அறிந்த மகா விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து கருவை அழிக்க வேண்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. அங்கிருந்து தப்பி வந்த மகேஸ்வரி வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், மகாவிஷ்ணு அவருடைய தந்தை ரவிச்சந்திரன், தாயார் சிவகாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com