மனைவியை தாக்கிய பெயிண்டர் கைது

சுதாபிரியா ஒரு காபி கடையில் காசானராக வேலை செய்து வருகிறார் சுதாபிரியா ஒரு காபி கடையில் காசானராக வேலை செய்து வருகிறார்
மனைவியை தாக்கிய பெயிண்டர் கைது
Published on

கோவை,

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது 45). பெயிண்டர். இரவது மனைவி சுதாபிரியா (35). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு காபி கடையில் காசானராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நல்லமுத்து அடிக்கடி சுதாபிரியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுப்பட்டு வந்தார். சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த நல்லமுத்து, சுதாபிரியாவை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார். அவருக்கு முகம், கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சுதாபிரியா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் இதுகுறித்து சுதாபிரியா செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நல்லமுத்துவை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com