என் மலர்
நீங்கள் தேடியது "PFI"
- பி.எப்.ஐ. அமைப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
- ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை தாக்க சதி செய்துள்ளனர்.
புதுடெல்லி :
ஐ.எஸ். போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகக்கூறி, 'பி.எப்.ஐ.' என்று அழைக்கப்படுகிற 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பை மத்திய அரசு நேற்று முன்தினம் அதிரடியாக தடை செய்தது. ஏற்கனவே இந்த அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் என தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) கடந்த 22-ந்தேதி அதிரடி சோதனைகளை நடத்தி 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். தொடர்ந்து 27-ந்தேதியன்று உத்தரபிரதேசம், கர்நாடகம், குஜராத், மராட்டியம் உள்ளிட்ட 8 மாநிலங்களில், அந்தந்த மாநில போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி, 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அவை வருமாறு:-
* ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த 15 இளைஞர்களையும், இவர்களது கூட்டாளிகளையும் கொண்டு, இந்தியாவில் பயங்கரவாதச்செயல்களை அரங்கேற்றும் நோக்கத்துடன் ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை தாக்க சதி செய்துள்ளனர்.
* வெடிபொருட்களையும், பிற தாக்குதல் பொருட்களையும் கொண்டு, முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தி அரசுக்கு எதிராக போர் தொடுக்க சதி செய்துள்ளனர்.
* தமிழ்நாட்டில் கொடைக்கானல் அருகேயுள்ள வட்டக்கானலுக்கு வருகிற வெளிநாட்டினரை குறிப்பாக யூதர்களை தாக்குவதற்கும், கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களைத் தாக்குவதற்கும் சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.
இவ்வாறு தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பி.எப்.ஐ. அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு, அந்த டுவிட்டர் பக்கத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. "சட்டப்பூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் கணக்கு முடக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த முடிவுக்காக மத்திய அரசை பாராட்ட வார்த்தைகள் போதாது.
- தடையை எதிர்ப்பவர்கள், வன்முறை மற்றும் கொலைகளை ஆதரிக்கின்றனர்.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பின் மீது தடை விதித்துள்ளதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கடசிகள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியுள்ளதாவது:
பி.எப்.ஐ.மீதான தடை காலத்தின் மிகப் பெரிய தேவையாக இருந்தது. நாடு மற்றும் மனித நேயத்தை பாதுகாக்க மத்திய அரசு மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த முடிவுக்காக மத்திய அரசை பாராட்ட வார்த்தைகள் போதாது. இந்த தடையை எதிர்ப்பவர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள். நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்.
இந்த தடையை எதிர்ப்பதன் மூலம், அவர்கள் வன்முறை மற்றும் கொலைகளை ஆதரிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை கோருபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இன்று ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்யக் கோரும் அனைத்துத் தலைவர்களும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட அவசரநிலையின் போது சிறையில் அடைக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் போராட்டமும், அவர்களின் தியாகமும்தான் இந்தத் தலைவர்கள் அனைவரையும் சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலமைப்பை பாதுகாத்ததுடன், நாடு சர்வாதிகார ஆட்சிக்கு செல்வதை தடுத்து நிறுத்தியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- போலீசாரிடம் நிர்வாகிகள் எங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகியை எந்தவித ஆதாரமும் இன்றி போலீசார் பிடித்து விசாரணைக்காக வைத்துள்ளனர்.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி எஸ்.ஆர்.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். பா.ஜ.க பிரமுகர். இவர் புஞ்சை புளியம்பட்டியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 24-ந்தேதி இவருக்கு சொந்தமான கார் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மர்மநபர்கள் இவரது காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.
இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தும், சம்பவ இடத்திலிருந்து அழைக்கப்பட்ட செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தும் காருக்கு தீ வைத்த மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் புளியம்பட்டி சேரன் வீதியை சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர் கமருதீன் (31) என்பவரை புளியம்பட்டி போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் பரவியதால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் புளியம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு நேற்று மாலை திரண்டனர். தங்கள் அமைப்பு உறுப்பினரை எவ்வித ஆதாரமும் இன்றி பிடித்து போலீசார் விசாரிப்பதாக கூறி போலீஸ் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் நேற்று இரவு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட திரண்டு வந்தனர்.
அப்போது டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் நிர்வாகிகள் எங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகியை எந்தவித ஆதாரமும் இன்றி போலீசார் பிடித்து விசாரணைக்காக வைத்துள்ளனர்.
அவரை உடனடியாக வெளியே விட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அதற்கு போலீசார் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி முடிவு செய்யப்படும் என்றனர். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதற்கிடையே கமருதீனிடம் பு.புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.
- பி.எப்.ஐ. அமைப்பு தொடர்புடையே இடங்களில் தேசிய புலனாய்வு நிறுவனம் சோதனை.
- பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பி.எப்.ஐ.க்கு (பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா) எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா, ஆந்திரா, உள்பட நாடு முழுவதும் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த 22ந் தேதி சோதனையில் ஈடுபட்டது.
தமிழகத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையும் இணைந்து சோதனை நடத்தின. இந்த சோதனைகளின் போது பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன.
மேலும் அந்த அமைப்பைச் சேர்ந்த மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பி.எப்.ஐ.(பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா) அமைப்பு இந்தியாவில் செயல்பட ஐந்து ஆண்டு காலம் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த தடை உத்தரவு அதன் துணை அமைப்புகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்தில் என்.ஐ.ஏ. தீவிர சோதனை.
- டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், பணம் பறிமுதல்.
நிசாமாபாத்:
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் தேசிய புலனாய்வு நிறுவனம் இன்று சோதனையில் ஈடுபட்டது.
தெலுங்கானாவில் 38 இடங்களிலும், ஆந்திராவில் 2 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் போது டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், இரண்டு கத்திகள் மற்றும் ரூ.8.31 லட்சத்திற்கும் அதிகமான பணம் உள்ளிட்டபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு முதலில் தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் காவல் நிலையத்தில் ஜூலை 4 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது மாநில காவல்துறையின் விசாரணையின் போது, அப்துல் காதர், ஷேக் சஹதுல்லா, முகமது இம்ரான் மற்றும் முகமது அப்துல் மொபின் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர், மேல் விசாரணைக்காக ஆகஸ்ட் 26 அன்று தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.