என் மலர்
நீங்கள் தேடியது "National Investigation Agency"
- பயங்கரவாதிகளுக்கு காஷ்மீரை சோ்ந்த 20 போ் உதவியுள்ளனா்.
- பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
பஹல்காமில் 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உதவியுடன் லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு அரங்கேற்றியதாக என்.ஐ.ஏ. விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:-
பயங்கரவாதிகளுக்கு காஷ்மீரை சோ்ந்த 20 போ் உதவியுள்ளனா். பயங்கரவாதிகளுக்குத் தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட பிற பொருள்களை வழங்கியதோடு, அவா்கள் சுதந்திரமாக காஷ்மீருக்குள் நடமாட இவா்கள் பல்வேறு உதவிகளைச் செய்தனா்.
அவா்களிடம் என்.ஐ.ஏ. விசாரித்தபோது, தாக்குதலை நேரடியாக நிகழ்த்திய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தும் நேரம், ஆயுதம் குறித்து பயங்கரவாதிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2023-ல் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிசாா் அகமது என்ற ஹாஜி மற்றும் முஷ்தாக் அகமது ஆகிய இரு பயங்கரவாதிகளிடமும் என்.ஐ.ஏ. விசாரிக்கவுள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தியவா்கள் பாகிஸ்தானைச் சோ்ந்த ஹஷ்மி மூசா என்ற சுலைமான், அலி பாய் என்ற தல்ஹா பாய் என என்.ஐ.ஏ. கண்டறிந்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற பகுதியில் 3 செயற்கைக்கோள் கைப்பேசிகளை பயங்கரவாதிகள் பயன்படுத்திஉள்ளனா். அதில் சிக்னல் மூலம் 2 கைப்பேசிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- பி.எப்.ஐ. அமைப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
- ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை தாக்க சதி செய்துள்ளனர்.
புதுடெல்லி :
ஐ.எஸ். போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகக்கூறி, 'பி.எப்.ஐ.' என்று அழைக்கப்படுகிற 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பை மத்திய அரசு நேற்று முன்தினம் அதிரடியாக தடை செய்தது. ஏற்கனவே இந்த அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் என தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) கடந்த 22-ந்தேதி அதிரடி சோதனைகளை நடத்தி 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். தொடர்ந்து 27-ந்தேதியன்று உத்தரபிரதேசம், கர்நாடகம், குஜராத், மராட்டியம் உள்ளிட்ட 8 மாநிலங்களில், அந்தந்த மாநில போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி, 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அவை வருமாறு:-
* ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த 15 இளைஞர்களையும், இவர்களது கூட்டாளிகளையும் கொண்டு, இந்தியாவில் பயங்கரவாதச்செயல்களை அரங்கேற்றும் நோக்கத்துடன் ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை தாக்க சதி செய்துள்ளனர்.
* வெடிபொருட்களையும், பிற தாக்குதல் பொருட்களையும் கொண்டு, முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தி அரசுக்கு எதிராக போர் தொடுக்க சதி செய்துள்ளனர்.
* தமிழ்நாட்டில் கொடைக்கானல் அருகேயுள்ள வட்டக்கானலுக்கு வருகிற வெளிநாட்டினரை குறிப்பாக யூதர்களை தாக்குவதற்கும், கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களைத் தாக்குவதற்கும் சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.
இவ்வாறு தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பி.எப்.ஐ. அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு, அந்த டுவிட்டர் பக்கத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. "சட்டப்பூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் கணக்கு முடக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இந்துமத தலைவர்களை கொலை செய்வது மற்றம் மதக் கலவரத்தை தூண்டுவது போன்ற சதித் திட்டத்துடன் செயல்பட்ட ஆஷிக் (25), இஸ்மாயில் (25), சம்சுதீன்(22), முகமது சலாலுதின்(25), ஜாபர் சாதிக் அலி(31) மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்தது. ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களான அவர்கள், தீவிர விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், நேற்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது 9 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. #NIAfilesChargesheets #ISISSuppoters
வங்கதேசத்தின் டாக்கா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவரை கண்காணிக்கும்படி வங்கதேச அரசு இந்திய அரசினை கேட்டுக்கொண்டது.
அதன்படி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், புலனாய்வு அமைப்புகள் அந்த அமைப்பின் அனைத்து நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறது.
இந்த குற்றசாட்டுகளை ஜாகிர் நாயக் மறுத்து வருகிறார். மேலும், ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டியதாக செய்தி வெளியிட்டதாக கூறப்படும் வங்கதேசத்தின் பிரபல பத்திரிகையும் அதனை மறுத்துள்ளது.
இதையடுத்து தற்போது தலைமறைவாக உள்ள ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட் போன்றவற்றை மீண்டும் அளிக்க உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம். சவந்த் மற்றும் ரேவதி மோகிதே அமர்வு, ஜாகிர் நாயக் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறையிடம் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும், தனது பாஸ்போர்ட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த வழக்கு மிகப்பெரிய தண்டனைக்குரிய வழக்கு என்றும், ஜாகிர் நாயக் நீதிமன்றத்திலோ, விசாரணை ஆணையத்திடமோ ஆஜர் ஆகாமல் எந்த முடிவும் எடுக்க இயலாது எனவும் கூறினர். மேலும், ஜாகிர் நாயக் மீது விதிக்கப்பட்ட எவ்வித தடையையும் நீக்க முடியாது என்றும் பாஸ்போர்ட் பெற வேண்டும் எனில் அதற்கு தனியாக மனு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, ஜாகிர் நாயக் நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். #ZakirNaik






