என் மலர்
செய்திகள்

ஐஎஸ் ஆதரவாளர்கள் 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது என்ஐஏ
தமிழகத்தில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் 6 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #NIAfilesChargesheets #ISISSuppoters
சென்னை:
கோவையில் இந்துமத தலைவர்களை கொலை செய்வது மற்றம் மதக் கலவரத்தை தூண்டுவது போன்ற சதித் திட்டத்துடன் செயல்பட்ட ஆஷிக் (25), இஸ்மாயில் (25), சம்சுதீன்(22), முகமது சலாலுதின்(25), ஜாபர் சாதிக் அலி(31) மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்தது. ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களான அவர்கள், தீவிர விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், நேற்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது 9 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. #NIAfilesChargesheets #ISISSuppoters

Next Story