search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officials inspection"

    • நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
    • முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    இந்திய உணவுக்கழகம் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நெல்கொள்முதல் செய்கிறது. பல்வேறு இடங்களில் போதிய கிடங்கு வசதி இல்லாததால் தானியங்கள் திறந்த வெளியில் வைக்கப்படுகின்றன.

    இதனால் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நாடு முழுவதும் 33 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் அதனை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதி இல்லை.

    இதனால் தானியங்கள் வீணாகி வருகின்றன. இதனை தடுக்க மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

    வேளாண் அமைச்சகம் மற்றும் உணவு, பொது வினியோக அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைச்சகம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் ஒன்றாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக 1000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது.

    இதற்காக 4 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு 1 ஏக்கரில் கிடங்கு கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான நாப்கான் ஆய்வு செய்துள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் ரூ.2 கோடி செலவில் சாலைப் போக்குவரத்து உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்படும். இங்கு போடி மற்றும் சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்படும்.

    ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வாயிலாக கிடங்கு அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் பரவலாக சேமிப்பு வசதிகள் கிடைக்கும். விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும். தானியங்கள் வீணாவது தடுக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு போக்கு வரத்து செலவு குறையும்.

    மேலும் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தமிழகத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் பலியா கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது
    • யானைகள் இறந்த சம்பவங்களை தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்ட பகுதிகளில் சோதனை தீவிரம டைந்துள்ளது

    உடுமலை :

    தமிழகத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் பலியா கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தர்மபுரி மாவட்டத்தில் 3 யானை களும், அடுத்து ஒரு யானையும் பலியானது.கடந்த வாரம் கோவை பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஒரு யானை பலியானது.இதனையடுத்து, மின்சாரம் தாக்கி வன விலங்குகள் பலியாவதை தடுக்கும் வகையில் வன எல்லை கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் வேலி, முறை கேடாக அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகள், தாழ்வாக அமைந்துள்ள மின் கம்பிகள், மின் வயர்கள் குறித்து ஆய்வு செய்யவும், உரியநடவடிக்கை எடுக்கவும் வனத்துறை உயர் அதிகாரிகள் அறிவு றுத்தியுள்ளனர்.மேலும் வன எல்லைகள் மற்றும் வன விலங்குகள் நடமா ட்டம்உள்ள பகுதிகளில், மின் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளமின் கம்பங்கள், கம்பிகள் உள்ளி ட்டகட்டமை ப்புகளை பாதுகாப்பான முறையில் மாற்றி அமை க்கவும் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்களின் எல்லை ப்பகுதியில் விவசாய நிலங்கள் அமைந்துள்ளன.இதன் அருகிலுள்ள கிராம ங்களிலும், வன உயிரினங்க ளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மின் இணைப்பு கள் தாழ்வாக அமைக்க ப்பட்டுள்ளதா என்றும், சோலார் மின் வேலிகளில் திருட்டுத்தனமாக மின்சாரம்பாய்ச்ச ப்படுகிறதா என்பதையும் மின் வாரிய பணியாளர்கள் மற்றும்வனப்பணி யாளர்கள்இணைந்து தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தருமபுரி மற்றும் கோவை வனப்பகுதி எல்லைகளில் மின்சாரம் தாக்கி காட்டு யானைகள் இறந்த சம்பவங்களை தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்ட பகுதிகளில் சோதனை தீவிரம டைந்துள்ளது.உடுமலை வனச்சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை பகுதிகளில், ஆனைமலை புலிகள் காப்பகம், உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ்ராம், வனச்சரகர் சிவக்குமார் மற்றும் மின் வாரியம், வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.அப்போது யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா, சோலார் மின் வேலிகளில் முறைகேடாக திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சப்படுகிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் தாழ்வாக செல்லும் மின் இணைப்புகளால் வன உயிரினங்கள் குறிப்பாக யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களையும், சோலார் மின் வேலிகளை சட்டப்படி முறையாக பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.வன எல்லைப்பகுதிகளில் தாழ்வாக மின் இணை ப்புகள் அமைக்கப்ப ட்டிருந்தாலோ, சட்டத்திற்கு புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி மின் வேலி அமைக்கப்ப ட்டிருந்தாலோ வனத்து றையினருக்கு தகவல் கொடுக்குமாறு அழைப்பு விடுக்கப்ப ட்டுள்ளது.உடுமலை வனச்சரகம் 94879 87173, 75022 89850,94866 59701, 94877 87731 ஆகிய எண்களிலும், அமராவதி வனச்சரகம் 90470 66460, 94865 87797 ஆகிய எண்களிலும், கொழுமம் வனச்சரகம் 80729 81528, 87787 25381 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு வனத்தின் ஆதாரமாக உள்ள வன விலங்குகளை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என வனத்து றையினர் தெரிவித்தனர்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே புதிய சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    தமிழகத்துடன் வடமாநிலங்களையும், ஆந்திராவையும் இணைக்கும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடத்தல், எடை மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை கண்டறியும் வகையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே தமிழக அரசின் அதிநவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது.

    இது ரூ.137.18 கோடி செலவில் நவீன முறையில் போக்குவரத்து துறை, மதுவிலக்கு, கால்நடை துறை, காவல் துறை, வனத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 6 துறைகளை ஒருங்கிணைத்த சோதனைச்சாவடி ஆகும்.

    இந்தியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் கணிணி மயமாக்கப்பட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்த இந்த சோதனைச்சாவடி, தமிழகஆந்திரா மாநிலங்களுக்கான எல்லையில் அமைந்துள்ளது. இதற்கான முழு பணிகளும் முடிவடைந்து விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில், சோதனைச்சாவடியில் மது விலக்கு அமலாக்கப்பிரிவுக்கான கட்டிட அமைப்பு, அதனில் ஏற்படுத்தப்பட்டு உள்ள வசதிகள் ஆகியவற்றை மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் ராஜேஷ்தாஸ் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார்.

    அவருடன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டுகள் அமனாமான், ஷியமளா தேவி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராசன், வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத், வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் பிரசன்னா ஆகியோர் உடன் இருந்தனர்.

    அப்போது மேற்கண்ட சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு ராஜேஷ்தாஸ் ஆலோசனை வழங்கினார்.

    ×