search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "life sentence prisoner"

    • கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    • அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு இருந்தது.

    வேலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கீழமங்கலத்தைச் சேர்ந்தவர் தசராஜ் (வயது 96). அந்த பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு தசராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தசராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சிறை அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு இல்லற வாழ்வுக்காக 15 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 28). இவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில், பெருமாளின் மனைவி முத்துமாரி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, என் கணவர் சிறையில் இருந்து வருகிறார். எனது இல்லற வாழ்வுக்காக அவருக்கு 2 வார காலம் பரோல் வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் சி.டி.செல்வம், எஸ்.ராமதிலகம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அனைத்து குற்றவாளிகளுக்கும் தங்களது இல்லற வாழ்வை தொடர உரிமை இருப்பதாக ஐகோர்ட்டு மதுரை கிளை ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதை மனுதாரர் வக்கீல் சுட்டிக்காட்டி வாதிட்டார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

    பெருமாளுக்கு வருகிற டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பரோல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், அந்த உத்தரவில், ‘பெருமாள் பரோலில் செல்லும்போது, சிறைத்துறை அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் பெருமாள் வெளியில் செல்வதால் அவரது பாதுகாப்பை போலீசார் உறுதி செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த வழக்கு வருகிற ஜனவரி 2-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை சிறை துறை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #MadrasHC
    திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, 2 சிம்கார்டுகள் ஆகியவற்றை சிறை வார்டன்கள் பறிமுதல் செய்தனர்.
    திருச்சி:

    சென்னை சிந்தாமணி அண்ணாநகரை சேர்ந்தவர் சங்கர்(வயது 32). ஆயுள்தண்டனை கைதியான இவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சங்கரை புழல் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றினார்கள். சென்னை ஆயுதப்படை போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வந்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, சிறையின் நுழைவு வாயிலில் சங்கரிடம் சிறை வார்டன்கள் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அவர் தனது உடைக்குள் 200 கிராம் கஞ்சா, 2 சிம்கார்டுகள் ஆகியவற்றை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. உடனே அவற்றை சிறை வார்டன்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் சிறை வார்டன் ரமேஷ் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் கைதியிடம் கஞ்சா மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்தது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
    ராயபுரம்:

    நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (65) என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். இவர் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

    கடந்த சில மாதமாக அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அவரது உடலை பரிசோதித்த சிறை மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார். 2 சிறுநீரகமும் செயல் இழந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை நேற்றிரவு மோசமானது. இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் உயிர் இழந்தார்.

    இதுபற்றி புழல் சிறை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்பத்திரி புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×